விண்டோஸ் எக்ஸ்பி தான் எங்கள் ஓ.எஸ்.
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 மார்
2014
00:00

விண்டோஸ் எக்ஸ்பிக்குத் தந்து வரும் பாதுகாப்பினை, வரும் ஏப்ரல் 8 முதல் மைக்ரோசாப்ட் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. பல தனி நபர்களும், நிறுவனங்களும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாறி விட்டனர். இன்னும் பலர் தொடர்ந்து இதனையே பயன்படுத்தி வருகின்றனர். இவர்களிடம் டெக் ப்ரோ ரிசர்ச் (Tech Pro Research) என்னும் ஆய்வு அமைப்பு, இதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு மற்றும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு, இணையம் வழியாக ஆன்லைன் ஆய்வாக, 641 நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் முடிவுகள் சில மிக ஆர்வ மூட்டுவதாக அமைந் துள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதற்குப் பின்னால், விண்டோஸ் விஸ்டா, விண் 7 மற்றும் விண்8 வந்த பின்னரும், தொடர்ந்து எக்ஸ்பி சிஸ்டத்தினையே பல தனிநபர்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனத் தின் பாதுகாப்பு நிறுத்த அறிவிப்பிற்குப் பின்னால், குறிப்பாக சென்ற மாதம் பலரும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாறிக் கொண்டனர். இருப்பினும் Net Applications அமைப்பின் கணக்கெடுப்பின்படி, இன்னும் பன்னாட் டளவில் மூன்றில் ஒரு பங்கு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பியே இடம் பெற்று இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில், Tech Pro Research அமைப்பு மேற்கொண்ட ஆய்வு கீழ்க்கண்டவற்றை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
1. விண் எக்ஸ்பி பாதுகாப்பு நிறுத்தத்திற்குப் பின்னால், என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
2. விண் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்வதற்கான காரணங்கள்.
3. விண் எக்ஸ்பியை விட்டு விடுவதற்கான காரணங்கள்.
4. இப்போது விரும்பும் ஓ.எஸ். எது?
5. டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான திட்டம் என்ன?
6. டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு என்ன?
மேற்கண்ட கேள்விகளுக்கு நிறுவனங்கள் அளித்த பதில்கள்:
1. விண்டோஸ் எக்ஸ்பியை, தங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் 81 முதல் 100 சதவீத நிறுவனங்கள் கையாள்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள், எக்ஸ்பியை விட்டுவிடுவார்கள் என்று தானே நாம் அனைவரும் எதிர்பார்ப்போம். அதுதான் இல்லை. 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களிடம் விண் எக்ஸ்பி இப்போது இல்லை அல்லது வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற திட்டமிட்டுள்ளனர். இருப்பினும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விண் எக்ஸ்பி உடன் தொடர் பவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எண்ணிக்கை, விண் 7க்கு மாறுபவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது.
2. விண் எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான காரணங்களாகப் பலவற்றை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் முக்கியமாக மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, செலவு. புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான புதிய செலவு. பல நிறுவனங்கள் "அதுதான் வேலை செய்கிறதே; பின் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்' என்ற மனப்பான்மை ஓங்கி நிற்கிறது. அடுத்ததாக, இதற்கான வகையில், தங்களுடைய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களை மாற்றி அமைப்பதற்கான செலவு. தாங்கள் நிறுவனப் பயன்பாட்டிற்கென உருவாக்கிப் பயன்படுத்தி வரும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், விண்டோஸ் எக்ஸ்பியையே சார்ந்து அமைக்கப்பட்டுள்ளன. மாற்றிக் கொள்வதால், புதிய பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்குமோ என்ற அச்சம். 39 சதவீதம் பேர் இதனால் தான் மாற்றிக் கொள்ளும் முடிவை எடுக்கவில்லை. செலவைக் காரணம் காட்டுவோர் 21 சதவீதமே.
3. செலவு ஏற்பட்டாலும் பரவாயில்லை. புதிய பிரச்னைகள் ஏற்படக் கூடாது; விண் எக்ஸ்பியினால் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்ட போது, மைக்ரோசாப்ட் தன் பேட்ச் பைல்களால் சரி செய்தது. இனி அவை கிடைக்காது என்ற நிலையில் மாறிக் கொள்வதே சரி என்று பலரும் திட்டமிட்டு மாறி வருகின்றனர்.
4. மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் பெரும்பாலும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கே மாறிக் கொள்கின்றனர்.
5. மாற்றிக் கொள்ள திட்டமிடுபவர்களில் ஒரு சிலரே, டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக வேறு வகை கம்ப்யூட்டரை பயன்படுத்தலாமா என்று எண்ணுகின்றனர். பெரும்பாலானவர்கள், தொடர்ந்து டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையே பயன்படுத்தி வருகின்றனர்.
எப்படி இருந்தாலும், விண் எக்ஸ்பியில் தொடர்வது என்பது, தெரிந்தே ஆபத்தை வரவழைப்பதற்குச் சமமாகும். எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பும், நமக்கு முழுமையான பாதுகாப்பினைத் தர முடியாது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X