கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 மார்
2014
00:00

கேள்வி: சாப்ட்வேர் மற்றும் பர்ம்வேர் (Software / Firmware) ஆகியவற்றிற்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை என்று நான் கூறுவதை என் நண்பர் மறுக்கிறார். இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளதெனக் கூறும் அவர், அதனைத் தெளிவாகக் கூறவில்லை. உங்களின் கருத்தினை இதில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
எஸ். ஷகீல், கோவை.
பதில்:
இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. மிகவும் விரிவாகப் பார்க்காமல், சுருக்கமாகப் பார்க்கலாம். பயனாளர் ஒரு சாப்ட்வேர் அல்லது அப்ளிகேஷன் புரோகிராமினைத் தன் சாதனத்தில் அமைக்கிறார். ஆனால், பர்ம்வேர் என்பதை அந்த சாதனத்தினைத் தயாரிப்பவர், சாதனத்தில் பதித்தே விற்பனை செய்கிறார். ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தில், அதனை இயக்கத் தேவையான அப்ளிகேஷனை அதில் பதிந்து தரப்படுகையில், அந்த அப்ளிகேஷனை பர்ம்வேர் என அழைக்கிறோம்.
சாதனம் இயங்க பர்ம்வேர் கட்டாயம் தேவை.ஆனால், சாப்வேர் அப்ளிகேஷனின் இயக்கமும் பயன்களும் வேறானவை.
பர்ம்வேர் அப்ளிகேஷன்களின் அளவு, மிகக் குறைவாகவே இருக்கும். சாப்ட்வேர் அப்ளிகேஷன்களின் அளவு மிக, மிகப் பெரியதாக இருக்கும்.
பயனாளராக, நீங்கள் சாப்ட்வேர் ஒன்றில் மாறுதல்களை ஏற்படுத்தலாம். ஏன், அவற்றை சாதனத்தில் இருந்தும் நீக்கலாம். ஆனால், பர்ம்வேர் அப்ளிகேஷனில், நாம் விரும்பும் மாற்றங்களை நீக்க முடியாது.

கேள்வி: நான் வெகு நாட்களாக பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்று வைத்துப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது என் மகள் காலக்ஸி போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். கூகுள் பிளே ஸ்டோரில் இதற்கான அப்ளிகேஷன்களையும், புரோகிராம்களையும் இன்டர்நெட் வழியாக டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றார். இந்த ஸ்டோரில் இருந்து புரோகிராம் டவுண்லோட் செய்வது குறித்த கட்டுரை எதுவும் உங்கள் கம்ப்யூட்டர் மலரில் இல்லை. தயவு செய்து வழி காட்டவும். என் வயது 67.
கே.எஸ். ஸ்ரீனிவாசன், சோழவந்தான்.
பதில்:
உங்கள் கேள்விக்கு நன்றி, ஸ்ரீனிவாசன். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்வது குறித்து கட்டுரை தேவைப்படாது என்பதால், இதுவரை எழுதவில்லை. யாரும் கேட்கவும் இல்லை. இதோ உங்கள் கேள்விக்கான பதில்.
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) என்பது இணையத்தில் இயங்கும் ஒரு ஸ்டோர் அல்லது கடை. இங்கு உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன்கள் இங்கு கிடைக்கும். (இதே போல ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்களை ஆப் ஸ்டோரில் (app store) பெறலாம்.) இந்த ஸ்டோர்களில் இருந்து புரோகிராம்களையும் அப்ளிகேஷன்களையும் பெறுவது மிக எளிது. இலவசமாகப் பல புரோகிராம்களும், கட்டணம் செலுத்தி சில புரோகிராம்களையும் பெறலாம். ஷாப்பிங் பேக் போலத் தோற்றமளிக்கும் ஐகானில் கிளிக் செய்தால், இந்த இணையக் கடைக்குச் செல்வீர்கள். பின்னர், நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் புரோகிராமின் பெயரைத் தேடல் கட்டத்தில் டைப் செய்து கிளிக் செய்தால்,(எடுத்துக்காட்டாக "Angry Birds”) அந்த புரோகிராமிற்கான ஐகான் கிடைக்கும். இதில் கிளிக் செய்து நேரடியாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். கட்டணம் செலுத்திப் பெற வேண்டியவற்றைப் பெற நீங்கள் இணைய கடைகளில் உள்ள அக்கவுண்ட்களில் பணம் செலுத்தி வைத்திருக்க வேண்டும். குறிப்பாக எந்த புரோகிராம் என்றில்லாமல், அதன் வகையினைக் ("Category”) கூறியும் தேடிப் பெறலாம். எடுத்துக் காட்டாக "Nursery Rhymes” என டைப் செய்தால், அனைத்து நர்சரி ரைம்ஸ் புரோகிராம்களுக்கான ஐகான்களும் கிடைக்கும். இதில் இலவசம் என்பதும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதுவும் குறிக்கப்பட்டிருக்கும். தேடிப் பெறலாம். சில நாட் களில், பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில், கட்டணம் செலுத்திப் பெறும் சில புரோகிராம்களை, அன்று மட்டும் இலவசமாகத் தருவார்கள். பொழுது போகாத போது, இந்த இணையக் கடைக்குச் சென்று பார்க்கலாம். நாம் வெளியே Window shopping செய்வது போல இங்கும் பார்த்து வைக்கலாம்.

கேள்வி: புதியதாக விண்டோஸ் 7 கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதற்கு ரௌட்டர் அவசியமா? பழைய மோடம் ஒன்று உள்ளது. இணைய இணைப்பிற்கு அது போதுமா?
எஸ். கணேஷ் ரத்தினம், சிவகாசி.
பதில்:
தரை வழி இணைய இணைப்பிற்கு மோடம் அவசியம். உங்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனம் இதனை வழங்கும். நீங்களாகவும் வாங்கி இணைக்கலாம். இது உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை, இணைய இணைப்பு தரும் சர்வருடன் இணைத்து, இணையத்துடன் உங்கள் கம்ப்யூட்டரை இணைக்கும். உங்கள் வீட்டினுள்ளாக, வேறு ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன் போல, இணைய இணைப்பில் இயங்கக் கூடிய சாதனம் இருந்தால், அதற்கு இணைய இணைப்பினைப் பெற வை-பி வழி அலைக்கற்றையைத் தர, ரௌட்டர் தேவை. இதனை மோடத்துடன் இணைத்து, நேரடியாக, இணைய சர்வருடன் இணைத்தும் பயன்படுத்தலாம். ரௌட்டரின் திறனுக்கேற்ப, இணைய இணைப்பை வழங்கும் இடைப்பட்ட தூரம் மாறுபடும். நீங்கள் வாங்குவதாக இருந்தால், இணைய இணைப்பு நிறுவனம் தருவதாக இருந்தால், ரௌட்டரே வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

கேள்வி: என் வீட்டில் வை-பி, செட் அப் அமைத்தேன். என்னுடைய டேப்ளட்டினை இணைக்கையில், அது என் ரௌட்டரின் பெயரைக் காட்டுகிறது. ஆனால், இணைப்பு தராமல், "authentication problem” எனக் காட்டுகிறது. எங்கு தவறு நேர்கிறது? இதனை எப்படித் தீர்க்கலாம்.
செ.பா. கலையரசி, கோவை.
பதில்:
"authentication problem” என எந்த ஒரு சாதனத்தில் பிழைச் செய்தி காட்டப்பட்டாலும், பெரும்பாலும் (எப்போதும் இல்லை) அது பாதுகாப்பிற்கான பாஸ்வேர்ட் அமைப்பதில் ஏற்படும் பிழையைச் சுட்டிக் காட்டுவதாகவே அமையும். பொதுவாக டேப்ளட் போன்ற சாதனங்களில், பாஸ்வேர்ட்களை அமைக்கையில், அதனை நன்றாகப் பார்க்கும் வகையில் காட்டுவதற்கென ஒரு ஆப்ஷன் கொடுக்கப்படும். இதனை டிக் மார்க் செய்து, பாஸ்வேர்ட் தரும்போது இயக்கவும்.(இந்த வசதியை எப்போதும் பயன்படுத்த வேண்டாம்). அவ்வாறு இயக்கி, பாஸ்வேர்ட் கொடுக்கையில், கொடுக்கப்படும் பாஸ்வேர்ட் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதனை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும், பாஸ்வேர்ட்கள் சிறிய பெரிய எழுத்துக்களைச் சரியாக அமைத்தால் தான் இயங்கும் தன்மை உடையவை. இதற்கும் சரிப்படவில்லை எனில், உங்கள் நெட்வொர்க் இணைப்பினை மீண்டும் இயக்கவும். இதற்கும் சரியாகக் கிடைக்கவில்லை எனில், ரௌட்டரினை ஐந்து விநாடிகளாவது, அணைத்து வைத்துப் பின்னர் இயக்கவும். இதற்கும் சரிப்படவில்லை எனில், ரௌட்டர் இணைப்பின் கட்டமைப்பினைச் சரி பார்க்கவும்.

கேள்வி: வாட்ஸ் அப் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் சேவை குறித்து மிகவும் பிரமாதமாகப் பேசப்படுகிறதே. நீங்கள் கூட முன்பு இது குறித்துப் புகழ்ந்து கட்டுரை ஒன்று எழுதி இருந்தீர்கள். இதைப் போல வேறு இலவச இன்ஸ்டண்ட் மெசஞ்சர் புரோகிராம்கள் உள்ளனவா? அவை குறித்த தகவல்களைத் தரவும்.
என்.அப்துல் ரஹீம், புதுச்சேரி.
பதில்:
வாட்ஸ் அப் தன் சிறப்பான சேவையினால், நாடெங்கும் அதிக எண்ணிக்கையில் பல வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அதனால் தான், பேஸ்புக் நிறுவனர் 1900 கோடி டாலர் கொடுத்து அதனை வாங்கியுள்ளார். சிறப்பாகவும், எளிய முறையிலும், வேகமாகவும் செயல்படுவதால்தான், அது குறித்த கட்டுரை நம் கம்ப்யூட்டர் மலரிலும் வெளியானது. இனி, உங்கள் கேள்விக்கு வருவோம். இணையத்தில் நிறைய இன்ஸ்டண்ட் மெசஞ்சர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றின் பெயர் களை இங்கு தருகிறேன். உங்கள் ஸ்மார்ட் போன் வழியே இணையத்தில் தேடிப் பெற்றுக் கொள்ளவும்.
1. BBM: பிளாக் பெரியின் இந்த சேவை, இப்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்கள் இயங்கும் போன்களுக்கெனவும் கிடைக்கிறது.
2. Hike: மிகவும் பாதுகாப்பான இன்ஸ்டண்ட் மெசஞ்சர் டூல் தேவை எனில், இதனை நாடலாம். இதன் விசேஷம் என்னவெனில், இதனைப் பதிந்து கொள்ளாத போன்களுக்கும், இதன்மூலம் மெசேஜ் அனுப்பலாம். ஆனால், இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வகையில் அனுப்ப முடியும்.
3. Line: மொபைல் போன்களுக்கு மட்டுமின்றி, விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களிலும் இந்த இன்ஸ்டண்ட் மெசஞ்சரைப் பயன்படுத்த முடியும்.
4. Viber: ஏறத்தாழ வாட்ஸ் அப் போலவே இது செயல்படுகிறது. மொபைல் போன் மட்டுமின்றி, டெஸ்க்டாப் (விண் 8 உள்பட) மற்றும் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் போன்களில் இதனைப் பயன்படுத்தலாம்.
5. Google Hangout: அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கூகுள் டாக் மற்றும் கூகுள் மெசஞ்சர் வசதிகளை உள்ளடக்கியது.
6. Chat ON: 2011 ஆம் ஆண்டில், சாம்சங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இரண்டு ஆண்டுகளில் பத்து கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றது. இதன் மூலம் அனிமேட்டட் ஸ்டிக்கர்களைக் கூடப் பயன்படுத்தலாம்.
7. Skype: எல்லாருக்கும் தெரிந்த ஸ்கைப். பிரபலமானது. தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமானது. அனைத்து வகை டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் இதில் இன்னும் பல டூல்களைத் தரும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X