பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 மார்
2014
00:00

4ஜி சேவையினை மொபைல் சேவை நிறுவனங்கள் தரத் தொடங்குவது ஏற்கனவே பல அரசியல் காரணங்களால் தாமதமான நிலையில், ஏர்டெல் தர இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கான மொபைல் போன்கள், சந்தைக்கு வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. எனவே, இனியாவது, மக்களுக்கு உண்மையிலேயே 4ஜி வேகத்துடன் மொபைல் போன் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
என்.காஞ்சனா, சென்னை.

இணைய உலகில் இயங்கும் கூகுள் தன்னிடம் உலகையே வளைக்கும் சக்தி கொண்டதாக உள்ளது என்ற தகவலை உங்கள் கட்டுரையில் அறியும் போது வியப்பாக இருந்தது. உண்மையைத் தெரிந்த பின்னர் அதிர்ச்சியாகவும் உள்ளது. ஆனால், இதனைத் தவிர்க்க முடியாதே!
எஸ்.பார்த்திபன், கம்பம்.

கூகுள் அழிக்க முடியாத சக்தியாக இயங்கினாலும், மனித குலத்திற்கு நல்ல சேவைகளைத்தானே தந்து வருகிறது. இதனால், நாம் அதன் வளர்ச்சியைக் கண்டு அச்சப்படாமல், அதற்கான ஆதரவினையே தர வேண்டும். நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
கா. இளவேனில், சென்னை.

வாட்ஸ் அப் செயலியில் போன் வசதி வந்துவிட்டால், மொபைல் போன் வந்த பின்னர், லேண்ட் லைன் மறைந்த மாதிரி, மொபைல் போன் இயக்கமும் இணையத்தைச் சார்ந்ததாக மாறிவிடும். உலகம் இன்னும் சுருங்கிவிடும்.
நா.ஸ்டாலின் சுந்தரம், கோவை.

விண்டோஸ் எக்ஸ்பியை விட முடியாததற்கு, இந்தியாவில், பொருளாதார நிலை தான் முக்கிய காரணம். புதிய கம்ப்யூட்டரே வாங்க வேண்டியதுள்ளது. இது பல கம்ப்யூட்டர் பயனாளரிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வேறு வழியில்லை. ரிஸ்க் எடுத்துத்தான் பார்க்க வேண்டும்.
சி.ஆர். பெருமாள், உசிலம்பட்டி.

மக்களின் ஆதங்கம், இயலாமை, கம்ப்யூட்டரின் அத்தியாவசியத் தேவை ஆகியவற்றை உணர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனம், எக்ஸ்பியைத் தொடர்ந்து பயன்படுத்துபவருக்கு, ஏதேனும் ஒரு வழியைக் காட்டலாம். வருமானத் திற்கு முயற்சிக்கையில் மக்களின் நிலையையும் சீர் தூக்கிப் பார்க்கலாம்.
எஸ். காமாட்சி நாதன், சிதம்பரம்.

வேர்ட் டாகுமெண்ட் சேகரிக்கும் புள்ளி விபரங்கள் குறித்த தகவல் புதுமையானதாக உள்ளது. தங்களிடமிருந்துதான், இதனைத் தெரிந்து கொண்டேன். இத்தனை விஷயங்கள் பின்னணியில் மேற்கொள்ளப்படுவது ஆச்சரியமான ஒரு வேலையே.
என்.கோகில வாணி, நெய்வேலி.

எந்த இதழிலும் நூலிலும் தரப்படாத தகவல் அவுட்டர்நெட் குறித்ததாகும். ஏதோ வேடிக்கையான சமாச்சாரம் என்று படிக்கத் தொடங்கி, உலகில் இன்னும் ஒரு டிஜிட்டல் மாற்றத்தினை இது ஏற்படுத்தும் என்று அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தகவலைக் கட்டுரையாகத் தந்த தங்கள் ஆசிரியருக்கு மிக்க நன்றி.
என்.கே. சுதர்ஷன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஸ்மார்ட் போன் பயன்பாடு அனைவரிடமும் பரவியும் அதிகரித்தும் வருகிறது. இதில் மொஸில்லா தொழில் நுட்ப ரீதியாக வெற்றி பெற்று, அனைத்து மக்களுக்கும் அடிப்படையில் ஒரு ஸ்மார்ட் போனைத் தந்தால், உலகில் தகவல் தருவதில் பெரிய புரட்சியே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
பேரா. என். ஷண்முகம், மதுரை.

ஆரவாரமின்றி, பேஸ்புக் ஏற்படுத்தியுள்ள சாதனை, இன்னும் பல தகவல் தொழில் நுட்ப மாற்றத்திற்கு வழி வகுக்கும். தொலை தொடர்பில், உலகில் அதிகம் பேருடன் இணைப்பில் வருவது என்பது எந்த நிறுவனமும், இயக்கமும் இதுவரை அடையாத இலக்காகும். நம் வாழ்வில் ஓர் அங்கமாக, அத்தியாவசியமானதாக, கம்ப்யூட்டர் பயன்பாடு போல, பேஸ்புக் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கே. டி. காளிராஜ், திருப்பூர்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X