நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் போன் நோக்கியா எக்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மார்
2014
00:00

நோக்கியா நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை நோக்கியா எக்ஸ் என்ற பெயரில், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து, பிப்ரவரியில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் அறிவிப்பு தரப்பட்டது. விண்டோஸ் 8 போல டைல்ஸ் அடிப்படையிலான ஹோம் ஸ்கிரீன் இதில் தரப்பட்டாலும், இது ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் ப்ராசசர் (S4 play MS M8225) இயங்குகிறது.
இதில் இரண்டு சிம் இயங்குவது இதன் இன்னொரு சிறப்பம்சமாகும். 3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. நோக்கியா ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தொகுப்புகளை டவுண்லோட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. Facebook, LINE Messenger, Picsart, Plants vs. Zombies 2, Real Football 2014, Skype, Spotify, Swiftkey, Twitter, Viber, Vine, WeChat, TrueCaller போன்ற பல அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டுக்கான புரோகிராம்கள் இங்கு கிடைக்கின்றன.
இதன் பரிமாணம் 115.5 x 63 x 10.44 மிமீ. எடை 128.6 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 512 எம்.பி. ராம் நினைவகம், 4 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி. கார்ட் விரிவாக்கம், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்., ஆகிய தொழில் நுட்பங்கள் எனப் பல வŒதிகள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1500 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு, வெள்ளை, சிகப்பு, இளஞ்சிகப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,599.
இதன் அறிமுக விழாவிலேயே, நோக்கியா நிறுவனம், தன் நோக்கியா எக்ஸ் ப்ளஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்.எல். ஆகிய இரு போன்களையும் வரும் இரண்டு மாத காலத்தில் இந்தியாவிற்கு விற்பனைக்கு அனுப்ப இருப்பதாக அறிவித்தது. இவை இரண்டும் இரண்டு சிம் இயக்கத்தினைக் கொண்டுள்ள ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களாகும். நோக்கியா எக்ஸ் ப்ளஸ், ஏறத்தாழ நோக்கியா எக்ஸ் மாடல் போனைப் போன்றதாகும். ஆனால், இதன் ராம் மெமரி 768 எம்.பி. உடையதாக உள்ளது. எக்ஸ் ப்ளஸ் திரை 4 அங்குல அகலத்திலும், எக்ஸ் எல் 5 அங்குல அகலத்திலும் திரைகளைக் கொண்டுள்ளது. இரண்டிலும் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்களைக் (MSM8225) கொண்டுள்ளன. நோக்கியா எக்ஸ் ப்ளஸ் மாடல் போனில் 3 எம்.பி. திறன் கேமராவும், எக்ஸ். எல். போனில் 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்.எல்.மாடலில் முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது. இவை இரண்டும் 3ஜி நெட்வொர்க் இணைப்பில் செயல் படுபவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X