ட்விட்டர் செயல் இழந்து மீண்டது!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மார்
2014
00:00

சென்ற செவ்வாய்க் கிழமை, மார்ச் 11 அன்று, ட்விட்டர் இணைய தளம் செயல் இழந்து போய் நின்றது. ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், செயல்பாட்டிற்கு வந்தது. பராமரிப்பு பணிகளினால், தளம் செயல்பாட்டில் இல்லை என்ற அறிவிப்பு தரப்பட்டது.
நிச்சயம் இது பராமரிப்பு பணிகளுக்காக இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஏனென்றால், அந்த நேரம் பராமரிப்புக்கான வழக்கமான நேரம் இல்லை. தளத்தில் உள்ள சில பட்டன்களில் பெயர் மாற்றத்தினால் ஏற்பட்ட நிலை எனச் சிலர் குறை கூறினார்கள்.
பல வாடிக்கையாளர்கள் ட்விட்டர் தளத்தினை அணுக முடியவில்லை என்று குற்றம் சாட்டியதால், குறை தீர்க்க தளத்தினை அணுகியதால், செயல் இழந்து இருக்கலாம் என ட்விட்டர் தள நிர்வாகி ஒருவர் பிற்பாடு தெரிவித்தார். பலர் குறை கூறியதனால், குறைக்கான காரணம் கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அதனைச் சரி செய்திடுகையில், மற்ற சேவைகள் பாதிக்கப்படக் கூடாத வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில், பிரச்னை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முழுமையாக ட்விட்டர் தற்போது இயங்குவதாக அவர் கூறினாலும், சில சேவைகள் இன்னும் மீட்கப்படவில்லை என்றே பின்னர் வாடிக்கையான பயனாளர்கள் தெரிவித்தனர்.
Hootsuite மற்றும் Twitterfall போன்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள், இன்னும் தாங்கள் ட்விட்டர் தளத்தை அணுக முடியவில்லை என்றே தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X