விண்டோஸ் 8.1க்கு மாறாதது ஏன்?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2014
00:00

விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர் வாங்கியவர்களுக்கு, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கான அப்டேட் வசதியை, மைக்ரோசாப்ட் இலவசமாகவே வழங்கி வருகிறது. ஆனால், தற்போது கிடைத்துள்ள புள்ளி விபரங்களின் படி, பலர் இன்னும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறாமலேயே உள்ளனர். இதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
வாடிக்கையாளர்கள் புதிய சிஸ்டத்திற்கு மாறாதது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தோல்வி என்று கூற இயலாது. விண்டோஸ் 8.1, சென்ற ஆண்டு அக்டோபர் 17ல் வெளியானது. வரும் மாதத்தில், இதற்கான அப்டேட் பைலாக விண்டோஸ் 8.1 அப்டேட் 1 வெளியாக உள்ளது.
இன்றைய நிலையில், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பயன்படுத்துபவர்கள் 6.83 சதவீதமாகவும், விண்டோஸ் 8.1 பயன்படுத்துபவர்கள் 4.3 சதவீதமாகவும் உள்ளனர். விண்டோஸ் 8.1 அறிமுகமானவுடன், விண்டோஸ் 8 மறைந்து போகும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோர் விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பயன்படுத்துவோரைக் காட்டிலும் குறைவாகவே உள்ளனர் என்பதுவே சற்று ஆச்சரியமாக உள்ளது. ஏனென் றால், விண்டோஸ் 8 நிறைய பிழையான குறியீடுகளுடன் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் புதிய சிஸ்டத்திற்கு மாறவில்லை.

விண்டோஸ் ஸ்டோர் - விண்டோஸ் அப்டேட்:
இதற்கு முன்பு, விண்டோஸ் சிஸ்டத்திற்கான புதிய பதிப்புகள் வெளியாவது விண்டோஸ் அப்டேட் மூலம் நடை பெற்றது. ஆனால், இப்போது விண்டோஸ் 8.1, விண்டோஸ் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கிறது. முன்பு புதிய பதிப்புகள் சர்வீஸ் பேக் என அழைக்கப்பட்டன. மற்ற ஆபீஸ் போன்ற தொகுப்புகளுக்கான அப்டேட் பைல்களுடன் இணைந்தே இவையும் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் இணையத்துடன் இணைந்திருக்கையிலேயே, சிஸ்டம் தானாக அப்டேட் செய்யப்பட்டது.
ஆனால், விண்டோஸ் 8.1. சிஸ்டம் இந்த வழியில் தரப்படவில்லை. இது விண்டோஸ் ஸ்டோரின் ஒரு பகுதியாக தரப்பட்டது. ஸ்டோர் அப்ளிகேஷன் ("Store apps'') புரோகிராமாக, மெட்ரோ அமைப்பில் தரப்பட்டது. எனவே, தொடு உணர் திரை இல்லாதவர்கள், இந்த அப்ளிகேஷனைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
விண்டோஸ் ஸ்டோர் சென்றால், அது சில டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களுடன் தொடர்பினைத் தருகிறது. அவை லிங்க்ஸ் மட்டுமே. அதன் மூலம் அப்ளிகேஷன் இன்ஸ்டாலர் புரோகிராமினை டவுண்லோட் செய்து, பின்னர் வழக்கம் போல இன்ஸ்டால் செய்திட வேண்டும். வர இருக்கும் விண்டோஸ் 8.1க்கான அப்டேட் 1 புரோகிராமும் இதே போல் தான் கிடைக்கும். ஏன், இவ்வாறு வேறுபாடான வழிகளில் இவை தரப்படுகின்றன என்பதற்கான காரணம் தெரியவில்லை.

மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் தேவை: விண்டோஸ் 8 சிஸ்டம், நீங்கள் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் அல்லது லோக்கல் யூசர் அக்கவுண்ட் மூலமாக லாக் இன் செய்திட வேண்டும் எனக் கேட்கும். பெரும்பாலானவர்கள், லோக்கல் யூசர் அக்கவுண்ட் உடன் மட்டுமே லாக் இன் செய்வார்கள். ஆனால், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8.1 சிஸ்டம் பைல்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளர், மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலமாக மட்டுமே லாக் இன் செய்திட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது.
இந்த தேவையைச் சந்திக்க, புதிய யூசர் அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்தி, அதனை மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டாகக் காட்டி, அதன் மூலம் விண்டோஸ் 8.1 பைல் டவுண்லோட் செய்த பின்னர், அந்த புதிய யூசர் அக்கவுண்ட்டினை நீக்கிவிடலாம். ஆனால், பலரும் அப்படி செய்வதில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் வாடிக்கையாளர்கள், மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலமாகத்தான் லாக் இன் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறது.
பொதுவாகவே, வர்த்தகப் பயன்பாட்டினை மேற்கொள்பவர்கள், புதிய சிஸ்டங்களுக்கு மாறிக் கொள்வதனை, கூடுமானவரையில் தள்ளிப் போடுவார்கள். புதிய மாற்றங்களினால், தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு வருமோ என ஒத்தி போடுவார்கள். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்தப் போவதாக எத்தனை கோடிக்கணக்கான நிறுவனங்கள் அறிவித்து வந்தன. இவற்றில் பல இப்போதுதான் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றன. எனவே, விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள், விண்டோஸ் 8.1 க்கு மாறாததில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை, வழக்கமான முறையில் சர்வீஸ் அப்டேட் ஆகத் தராமல், புதியதொரு சிஸ்டமாகவே தருவதால், மக்கள் தொடர்ந்து விண்டோஸ் 8 சிஸ்டத்திலேயே இருக்கும் முடிவினை எடுத்து வருகின்றனர். எனவே, விண்டோஸ் 8.1 மற்றும் இதன் அப்டேட் பைல்களை, வழக்கம்போல விண்டோஸ் அப்டேட் வழியாக, மைக்ரோசாப்ட் தருமானால், விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தும் அனைவரும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதனை எதிர்பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X