பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2014
00:00

ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம் சிஸ்டம் குறித்த விளக்கம் மிக அருமை.
கே.மங்கையர்க்கரசி, தாம்பரம்.

கண்ட்ரோல் கட்டளைகள் வேர்ட் தொகுப்பிற்குக் கொடுத்தது போல, மற்றவற்றிற்கும் கொடுக்கவும். அதே போல ஷிப்ட் கீயுடன் இணைந்த வேலைகளுக்கும் விளக்கம் தரவும்.
டி.அகல்யா, புதுக்கோட்டை.

இனி ஸ்மார்ட் போன்களே தொடக்க நிலை போன்களாக நிச்சயம் அமைந்துவிடும். மக்களுக்கிடையே தொடர்பு டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் என மாறிவிடும். மொபைல்போன் அழைப்புகள் வெகுவாகக் குறைந்து விடும்.
என். வாசகம், மதுரை.

தகவல் தொடர்பும், கருத்துக் களை பரிமாறிக் கொள்வதும் ஒருவரின் தாய் மொழியில் இருப்பதுவே, அதனைச் சரியாக எடுத்துச் செல்லும். ஆங்கிலத்தோடு நம் வாழ்க்கையில் நுழைந்த கம்ப்யூட்டரும், இணையமும், தற்போது நம் மொழிகளில் இயங்க முனைவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. அதே நேரத்தில், ஆங்கில மொழிப் பயன்பாட்டினையும் விட்டுவிடக் கூடாது. தங்கள் கட்டுரைக்கு என் பாராட்டுதல்கள்.
பேரா . டாக்டர் கே. சாலமன் ராஜ், மதுரை.

நம் மொழிகளில் இணையப் பயன்பாடு கிடைப்பது, கிராமப் புற மக்களுக்கு, வரப்பிரசாதமாக அமையும். அவர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வளமாக்கும். இன்றைய உலகில் இதுவே தவிர்க்க முடியாத நிலையாகும். தாங்கள் தந்துள்ள தகவல்கள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
டாக்டர் எஸ்.இலக்குமி, பேராசிரியை, காரைக்குடி.

ஐந்து டெரா பைட் அளவில் ஒரு ட்ரைவ்! நம் ஸ்டோரேஜ் உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. தகவலுக்கு நன்றி.
என். ஸ்வர்ணா ராமன், சென்னை.

பிறர் அறியா பிரவுசிங் என்பது தவறான வழி அல்ல; அதுவும் சில வேளைகளில் நமக்குத் தேவைப்படுகிறது என்பதனை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
கே. ராம்குமார், பொள்ளாச்சி.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல பேஸ்புக் இமெயில் ஒன்றைக் கொண்டிருப்பது என்பதே தெரியாமல் தான் இருக்கிறோம். ஏனென்றால், அனைத்து இமெயில் சேவைகளுக்கும் மேலாக, நம் தோள்களில் ஜிமெயில் அமர்ந்துள்ளதே. பேஸ்புக் சேவை பாராட்டக் கூடியதே என்றாலும், ஏன் அந்த சேவையை மூடுகிறது என்பதற்கான காரணம் சரியில்லை.
ஆர். ஜெபராஜ், விருதுநகர்.

இன்றைக்கு உலகையும், நம்மையும் ஆளும் இணையம் எப்படி தொடங்கப்பட்டது என்பதை அறிய வேடிக்கையாக உள்ளது. உலகம் அலட்சியப் படுத்திய ஒன்று, இன்று தான் மட்டுமே பெரிய சக்தி என்று நிரூபித்துள்ளது. டிம் பெர்னர்ஸ் லீ தான் உண்மையிலேயே பெரிய சாதனையாளர்.
ஆ. கண்ணன், ஸ்ரீரங்கம்.

கூகுள் தேடல்களை எப்படி ட்ரிம் செய்து தேடுவது என்று நீங்கள் அளித்துள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. இன்னும் தொடர்ந்து இது போன்ற டிப்ஸ்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். கோகிலம், புதுச்சேரி.

இத்தனை வகையான வசதியான தேடல்கள் உள்ளனவா என்று வியக்கும் அளவிற்கு கூகுள் தேடல்களுக்கான டிப்ஸ்களைத் தந்துள்ளீர்கள். ஒவ்வொன்றையும் பயன்படுத்தி பார்த்து, அவற்றின் விரைவுத் தன்மையைப் புரிந்து கொண்டேன். நன்றி. நன்றி.
செ. உத்தமன், மதுரை.

இந்த இதழில் குட்டிக் கட்டங்களில் தந்துள்ள தகவல்கள் எல்லாமே, புதுமையாகவும், புதியனவாகவும் இருக்கின்றன. குறிப்பாக பிட் பக்கெட், பிட் நிப்ளர் குறித்த தகவல் வியப்பாக இருந்தது. தொடர்ந்து இதே போல தரவும்.
எஸ். சிரஞ்சீவி குமார், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X