கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 மார்
2014
00:00

கேள்வி: விண்டோஸ் சிஸ்டத்திலான போன்களை நோக்கியா தவிர வேறு எந்த நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன? சாதாரண மானவர்கள் வாங்கும் விலையில் எவை விற்பனை செய்கின்றன?
எம். நல்லசிவம், பொள்ளாச்சி.
பதில்:
வரும் மாதங்களில், இந்திய நிறுவனங்களான லாவா மற்றும் கார்பன் (Karbonn, Lava) நிறுவனங்கள், விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும் ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. இவற்றின் விலை, நீங்கள் விரும்புவது போல, ரூ.6,000 முதல் ரூ. 12,000 வரை என்ற அளவில் இருக்கலாம். லாவா நிறுவனத்தின் போன் தொடக்க நிலையில் ரூ.6,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் நிறுவனம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நான்கு விண்டோஸ் மாடல் போன்களை வழங்க இருக்கிறது. அதே போல லாவா நிறுவனமும் பல மாடல்களைக் கொண்டு வருகிறது. சென்ற மாதம் நடைபெற்ற உலக மொபைல் போன் கருத்தரங்கில், விண்டோஸ் போன்களைத் தயாரித்து வழங்கிட Foxconn, Gionee, JSR, Karbonn, Lava (Xolo), Lenovo, LG, Longcheer மற்றும் ZTE ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது.
ஏற்கனவே HTC, Huawei, Nokia மற்றும் Samsung ஆகிய நிறுவனங்கள், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் மொபைல் போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
ஐ.டி.சி. அமைப்பின் கணக்கின்படி, சென்ற 2013 ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கொண்ட போன்களின் பங்கு 78.1 சதவீதமாகவும், விண்டோஸ் இயக்க போன்களின் பங்கு 3 சதவீதமாகவும் இருந்தது. இந்த ஆண்டில் விண்டோஸ் போன்களின் பங்கு உயரும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கேள்வி: பேஸ்புக்கில் உள்ள நம் தகவல்களை எப்படி நாம் டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்?
சி.காஞ்சனா, கோவை.
பதில்:
பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட்டில் பதியப்பட்டுள்ள டேட்டாவினை டவுண்லோட் செய்து வைப்பதற்கு எளிய வழிகள் உள்ளன. வீடியோ மற்றும் படங்கள் உட்பட அனைத்தையும் டவுண்லோட் செய்திடலாம். இது ஒரு பாதுகாப்பிற்குத்தான். ஏனென்றால், நம் பேஸ்புக் பக்கத்தை யாராவது உள்ளே நுழைந்து முழுமையாக வீணடித்துவிட்டால், நமக்கு ஒரு நகலாக இது இருக்கும் அல்லவா! இதோ அதற்கான வழிகள்.
1. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டினைத் திறக்கவும். பின்னர் Settings செல்லவும்.
2.இங்கு திரையின் கீழாகச் சென்று, "Download A Copy Of Your Facebook Data.'' என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இதனைத் தொடர்ந்து "Download Your Information.'' என்ற இடத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
4. இதில் "Start My Archive'' என்பதில் கிளிக் செய்திடவும். டவுண்லோட் செயல்பாடு மேற்கொள்ளப்படுமுன், உங்களின் பாஸ்வேர்ட் கேட்கப்படும். சரியாக எண்டர் செய்திடவும். டவுண்லோட் செய்திட சற்று நேரம் ஆகும் என்ற செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.
5. டவுண்லோட் முடிந்தவுடன், பேஸ்புக் உங்களுக்கு டேட்டாவுடன் இமெயில் ஒன்றை அனுப்பும். அதில் தரப்படும் லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
6. மீண்டும் அந்த பக்கத்திற்கு செல்வீர்கள். இங்கு "Download Archive'' என்பதில் கிளிக் செய்திடவும். உங்களுக்கான பைல் உங்கள் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொள்ளும். உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் பல பிரிவுகளைத் தனித்தனியே காண பல ஆப்ஷன்கள் அங்கு தரப்படும். இந்த டேட்டா அடங்கிய பைலை சேவ் செய்து வைக்கவும். அவ்வப்போது, பேஸ்புக்கில் தொடர்ந்து டேட்டாவினை அமைக்கையில், அப்டேட் செய்து வைத்துக் கொள்ளவும்.

கேள்வி: என் வர்த்தக காரணங்களுக்காக பலருடன் ஜிமெயில் அக்கவுண்ட்டில் தொடர்பு கொண்டதில், பலரின் ஜிமெயில் முகவரிகள் குவிந்துள்ளன. இவற்றில் தொடர்பு இல்லாதவர்களின் முகவரிகளை நீக்குவது எப்படி?
என்.முருகதாஸ் ராவ், கோவை.
பதில்:
பலரும் தொடர்ந்து ஜிமெயில் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துவதால், இது போல நம் அட்ரஸ் புக்கில் நிறைய முகவரிகள் சேரும். ஆனால், அவற்றை ஏன் நீக்க விரும்புகிறீர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் இவற்றை நீக்குவதும் எளிதுதான். இதோ அந்த வழி. முதலில், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் பக்கம் செல்லவும். இங்கு, இன்பாக்ஸிலிருந்து, காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு மாறவும். மாற்றிக் கொள்ள உங்கள் திரையின் இடது பக்கம் உள்ள GMAIL என்பதன் அருகே உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் முகவரிகளுக்கான பட்டியலில் பெயர்கள் அருகே, செக் பாக்ஸ் ஒன்று இருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் எவற்றையெல்லாம் நீக்க வேண்டுமோ, அவற்றின் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். அடுத்து, காண்டாக்ஸ் பட்டியலின் மேலாகப் பார்த்தால், அங்கு சில ஆப்ஷன்கள் தரப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இதில் DELETE CONTACT என்கிற ஆப்ஷன் இருப்பதையும் காணலாம். இதில் கிளிக் செய்தால், டிக் செய்த அனைத்து முகவரிகளும் நீக்கப்படும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன், பல ஆண்டுகளாக. பல பத்திரிக்கைகளில், குறிப்பாக கம்ப்யூட்டர் மலரில், தரப்பட்டுள்ள எச்சரிக்கைக் குறிப்புகளின் அடிப்படையில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற இருக்கிறேன். இதில் இயங்குவது முற்றிலும் மாறாக இருக்குமா?
என். நசீர் அகமது, திண்டுக்கல்.
பதில்:
நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள். எக்ஸ்பிக்கும், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் இல்லை. மேம்பாடு கொண்ட சில வசதிகள் உண்டு. இதே மலரில் உள்ள இது குறித்த கட்டுரையைப் பார்க்கவும். மேலும் பல குறிப்புகளைத் தொடர்ந்து வரும் வாரங்களில், கட்டுரைகளாகத் தருகிறேன்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கும் ரன் விண்டோவில், பெயிண்ட் புரோகிராம் கிடைக்க என கச்டிணt டைப் செய்திடாமல், MSpaint என டைப் செய்திட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். இதே போல வேறுபாடுள்ள மற்ற புரோகிராம்கள் குறித்தும், அவற்றினை எந்த சொல் கொண்டு டைப் செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கவும்.
ஜே. எஸ். நிர்மலா, திருப்பூர்.
பதில்:
அந்தக் குறிப்பிலேயே மற்றவற்றையும் கொடுத்திருந்தேனே. இதோ, மீண்டும் தருகிறேன்.
Calculator: calc
Character Map: charmap
Control Panel: control
Notepad: notepad
Paint: mspaint
Resource Monitor: perfmon /res
System Configuration: msconfig
Sticky Notes: stikynot
System Information: msinfo32

கேள்வி: நான் ஏர்டெல் மொபைல் சேவையினைப் பயன்படுத்துகிறேன். மூன்று போன்களில் இந்நிறுவனத்தின் நான்கு எண்களைப் பயன்படுத்துகிறேன். எதில் எந்த எண் உள்ளது என்று நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை. போனே தன் எண்ணைக் காட்டும் வகையில் அமைக்க என்ன செய்திட வேண்டும்?
எஸ். ஜெயராஜ், மதுரை.
பதில்:
நல்ல கேள்வி. உங்களின் மொபைல் சேவை ஏர்டெல் என்பதால், எந்த போனில் உள்ள சிம்மின் எண் தெரிய வேண்டுமோ, அதில் *121*9# என டைப் செய்து அழுத்த, உங்கள் சிம் எண், மெசேஜ் ஆக உங்களுக்குக் கிடைக்கும்.

கேள்வி: எனக்கு விண்டோஸ் 8.1 சிஸ்டம் உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை என் மகள் தந்துள்ளார். நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை என் பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தி வந்தேன். புதிய லேப்டாப் கம்ப்யூட்டரில் எப்படி சிஸ்டம் ஷட் டவுண் செய்திட வேண்டும்?
எஸ்.பத்மநாபன், தஞ்சாவூர்.
பதில்
: உங்கள் மகள் வெளிநாட்டிலிருந்து லேப்டாப் வாங்கித் தந்ததாக எழுதி உள்ளீர்கள். உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் -- புதிய சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் செயல்பாடுகளை மேற்கொள்ளும் துணிவிற்காக. நீங்கள் குறிப்பிட்டுள்ள குழப்பம், விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டம் கொண்டவர்கள் அனைவருக்கும் தொடக்கத்தில் கிடைக்கும். கவலைப் பட வேண்டாம்.
விண்டோஸ் 8 மற்றும் 8.1ல், ஷட் டவுண் செய்வதற்கான எளிய வழி, ஸ்டார்ட் பட்டனைப் பயன்படுத்துவது தான். ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் பாப் அப் மெனுவில், பல கட்டளைகளும், செயல்பாட்டு வசதிகளும் பட்டியலிடப்படும். இங்கு Shut down அல்லது sign out செய்திடலாம். தொடர்ந்து ஒரு சப் மெனு கிடைக்கும். இதில் Sign out, Sleep, Shut down, மற்றும் Restart ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கும். Shut down என்பதில் கிளிக் செய்தால், சிஸ்டம் பவர் ஆப் ஆகும்.
இவற்றுடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தந்த வழிகளையும் கையாளலாம். இதில் சார்ம்ஸ் பார் இயக்கவும். கிடைக்கும் திரையில், Settings தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் உள்ள Power ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மூன்று ஆப்ஷன்கள், Sleep, Shut down, மற்றும் Restart, கிடைக்கும். இதில் Shut down என்பதில் கிளிக் செய்திட, சிஸ்டம் மூடப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X