உங்கள் ஹாட் மெயிலை மைக்ரோசாப்ட் படிக்கலாம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 மார்
2014
00:00

அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 குறித்த வர்த்தக ரகசியம் ஒன்றை, அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டதை அறிந்த மைக்@ரா Œாப்ட், அது குறித்த தீவிர விசாரணையில் இறங்கியது. அப்போது, ஹாட் மெயில் தளத்தில் இருந்த மின் அஞ்சல்களைப் படித்து, அதன் மூலம் குற்றவாளியைப் பிடித்து, காவல் துறையிடம் ஒப்படைத்தது. அப்போதுதான் இந்த உண்மை உலகிற்குத் தெரிய வந்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், எப்படி ஹாட்மெயில் தளத்தில் உள்ள அதன் பதிவு பெற்ற சந்தாதாரர்களின் மின் அஞ்சல்களைப் படிக்கலாம்? எனப் பலர் கேள்வி கேட்டனர். அதற்கு, மைக்ரோசாப்ட், அதற்கு அனைத்து சந்தாதாரர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர் என்று மைக்ரோசாப்ட் பதிலளித்தது. அப்படியா? என்று வியப்பதற்கு முன்னால், இன்னும் ஒரு செய்தி.
நாம், ஹாட்மெயில் தளத்தில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி அமைக்கும்போது, அதற்கான அந்நிறுவனத்தின் விதிமுறைகளை முழுமையாகப் படிப்பதில்லை.சிறிய எழுத்துக் களில் மிக நீளமாக இருப்பதனைப் பொறுமையுடன் படிக்க இயலாமல், அதன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக Accept என்ற பட்டனில் கிளிக் செய்து, அக்கவுண்ட் உருவாக்க அனுமதிக்கிறோம். இங்கு தான், வினையே உள்ளது. நிபந்தனைகளின் ஒரு பிரிவில், Microsoft 'may access or disclose information about you, including the content of your communications.' எனத் தரப்பட்டுள்ளது. மைக்ரோ சாப்ட் உங்களைப் பற்றிய தகவல்களை அணுகி, அவற்றை வெளிப்படுத்தலாம் என்று தெளிவாக அந்த நிபந்தனை உள்ளது. இதனால், அனைவரின் அஞ்சல்களையோ, வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களையோ, மைக் ரோசாப்ட் தொடர்ந்து படித்து வெளிப்படுத்துகிறது என்று எண்ண வேண்டாம். கிடைக்கும் தகவல்கள், மேலே சுட்டிக் காட்டப்பட்டது போன்ற சூழ்நிலைகளில் உதவியாக இருக்கும் என எண்ணினால், மைக்ரோசாப்ட் அவற்றை அணுகி, படித்துத் தெரிந்து கொள்கிறது.
இதனை அடுத்து, கூகுள் மற்றும் யாஹூ மின் அஞ்சல் தளங்களின் சேவைகளுக்கான நிபந்தனைகளைப் பார்த்த போது, அவையும் இது போன்ற நிபந்தனைகளையும் ஒப்பந்த விதிகளையும் விதித்துள்ளன என்பது தெளிவாகிறது. நம்மைப் பற்றிய தகவல்கள் (டேட்டா) அவர்களின் சர்வர்களிலேயே பதிவாவதால், அவற்றை அணுகுவதற்கோ, கைப்பற்றுவதற்கோ, இந்த நிறுவனங்களுக்கு நீதி மன்ற ஆணைகளும் அனுமதியும் தேவை இல்லை.
மைக்ரோசாப்ட் இது குறித்து அறிவித் திருக்கும் நிபந்தனைகள் மற்றும் சேவைக்கான ஒப்பந்த விதிகளை http://blogs.technet.com/b/microsoft_on_the_issues/archive/2014/03/20/strengtheningourpoliciesforinvestigations.aspx என்ற முகவரியில் உள்ள தளம் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X