பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஏப்
2014
00:00

விண்டோஸ் 8ல், தொடக்கத்தில் நம் குரல் பதிவு ஒலிக்க நீங்கள் தந்துள்ள வழி சூப்பர் சார். செயல்படுத்திப் பார்த்தேன். அருமை. மிக்க நன்றி.
டி.கார்த்திக் சேகர், திருப்பூர்.

மொபைல் இன்டர்நெட் பெருகுவது, அதற்கான போன்களை, கட்டுப்படியாகும் பட்ஜெட் விலையில் கொண்டு வந்தால் தான் நடக்கக் கூடிய செயலாகும். குறிப்பாகக் கிராம மக்களிடம் இதுதான் செயல்படும். இதனை மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களும், இணைய சேவை நிறுவனங்களும் புரிந்து செயல்பட வேண்டும். யூனிநார் முயற்சிகள் இதனைத்தான் குறி வைக்கின்றன என்று நீங்கள் எழுதியுள்ளது சரியே.
கா.இராமச்சந்திரன், கோவை.

விண்டோஸ் இயக்கத்திலேயே பல ஆண்டுகள் இயங்கினாலும், அதன் டூல்களை அவ்வளவாகப் பயன்படுத்தி வசதிகளை அனுபவித்ததில்லை. இது குறித்த கட்டுரையில் தரப் பட்டுள்ள குறிப்புகள், மிகப் பயனுள்ளவையாக உள்ளன. இன்னும் சில டூல்கள் குறித்த கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
பேரா. எஸ்.சிவஷண்முகம், காரைக்கால்.

விண்டோஸ் மெமரி டயாக்னாஸ்டிக் குறித்த விளக்கக் குறிப்புகள், அற்புதமாக, தெளிவான தமிழில் தரப்பட்டுள்ளது. பாடப் புத்தகங்களில் கூட இந்த தெளிவு இல்லை. எழுதியவருக்கு பாராட்டுக்கள்.
டாக்டர் என். சுரேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

நெட்வொர்க்கில் பணிபுரிபவர்களுக்கு ஷேர்டு போல்டர்ஸ் என்ற டூல் அதிகம் உதவியாய் இருக்கும் என்ற தகவலை நீங்கள் தந்துள்ள விண்டோஸ் டூல்கள் குறித்த கட்டுரையில் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
கே. சுதந்திரா, மதுரை.

கண்ட்ரோல் + சி புரோகிராம் மிக அருமையாக வேலை செய்கிறது. நாம் முன்பு காப்பி செய்தவற்றைத் திரும்பப் பெற மிகவும் உதவியாய் உள்ளது. அரிய தகவல். இந்த புரோகிராமினை வழங்குபவருக்கும், இது குறித்த தகவல் தந்த உங்கள் ஆசிரியர் குழுவிற்கும் நன்றி.
கா. மோகன்ராஜ், சென்னை.

ஹாட் மெயிலை மைக்ரோசாப்ட் படிக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியைத் தருகிறது. மைக்ரோசாப்ட் மட்டுமல்ல, வேறு எந்த நிறுவனமும், தன் வீட்டில் திருடு நடைபெற்று விட்டது என்பதற்காக, அடுத்தவர்கள் வீட்டில் தேடுவது என்பது, தர்மமாகாது. அதற்கான காவல் துறை யிடம் தான் தெரிவிக்க வேண்டும். நம் ரகசியங்களை இந்நிறுவனங்கள் தெரிந்து கொண்டால், இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக் குரியதாக மாறிவிடும். இந்த நிறுவனங்கள், இப்படிப்பட்ட ஒரு செயல்பாட்டினை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கா. நீதி தேவன், புதுச்சேரி.

மவுஸ் இயக்க செயல்முறைகள் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களைத் தந்துள்ளீர்கள். பழைய மவுஸிற்கும், புதியதாக கூடுதல் பட்டன்களுடன் வரும் மவுஸிற்கும், அவற்றின் பயன்பாடு மற்றும் வசதிகளில் உள்ள வேறுபாட்டினைக் குறிப்பிட்டு தகவல் தரவும். புதிய மவுஸ் விலை என்ன இருக்கும் என்றும் சுட்டிக் காட்டவும்.
சி. எஸ். மஞ்சுளா பாஸ்கர், சிவகாசி.

ஸ்மார்ட் போன் அனைத்திலும் இணைய வசதி இலவசமாகக் கிடைத்துவிட்டால், அது மனித குல வளர்ச்சியில் ஒரு மாபெரும் மைல்கல்லாக இருக்கும். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம். பேஸ்புக் நிறுவனம் தரும் சமூக சேவைகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.
கா. நாராயணன், திண்டுக்கல்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் படங்களை ஸ்கிரீன் பிரிண்ட் எடுப்பதில் உள்ள பிரச்னைக்கான தீர்வினை மிக நன்றாக விளக்கிக் காட்டியுள்ளீர்கள். எனக்கும் அந்த பிரச்னை இருந்தது. சரியான தகவலைத் தந்தமைக்கு நன்றி.
என்.மலர்க்கொடி, தேனி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X