வாசகர் பகுதி | கல்கி | Kalki | tamil weekly supplements
வாசகர் பகுதி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2014
00:00

புகார் இல்லாத மை!: தேர்தலின்போது வாக்காளரின் விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. இந்த மையை மைசூரில் உள்ள "பெய்ன்ட்ஸ் அன்ட் வார்னிஷ்' என்ற நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்தியாவிலேயே இந்த மையைத் தயாரிக்கும் கம்பெனி இது ஒன்றுதான். 1962 முதல் இது செயல்படுகிறது. விரலில் வைத்தவுடனே உலர்ந்து விடும் இந்த மை சுமார் 48 மணி நேரம் அழியாமல் இருக்கும். ஒரு சின்ன டப்பாவில் அடைக்கப்படுகிறது இந்த மை. ஒரு டப்பாவில் 10 மில்லி லிட்டர் மை இருக்கும். நம் நாடு முழுவதுக்கும் 21.65 லட்சம் டப்பாக்கள் தேவைப்படுகிறதாம். ஜனவரி கடைசி வாரத்தில் இருந்தே இந்த மை தயாரிக்கும் வேலை தொடங்கி விட்டது. இந்த மை பற்றி இதுவரை ஒரு புகார் கூட வந்ததில்லை. கனடா, இங்கிலாந்து, பாகிஸ்தான், டென்மார்க், துருக்கி, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் இந்த மை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு.

பச்சைப் பட்டினி விரதம்: "பொதுவாக பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற கடவுள்களிடம் வேண்டி விரதம் இருப்பார்கள். அந்நாட்களில் மிகக் குறைந்த அளவில் திட, திரவ உணவை உட்கொள்வார்கள். வழக்கமான உணவைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால் திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன், பக்தர்களுக்காக தாமே விரதமிருந்து வழக்கமான நெய்வேத்யங்கள் தவிர்க்கப்பட்டு துள்ளுமாவு, இளநீர், பானகம் மட்டும் படைக்கப்பட்டு அருள்பாலிக்கிறார். இதற்கு "பச்சை பட்டினி விரதம்' என்று பெயர். ஒவ்வொரு ஆண்டும் மாசி - கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரை பூச்சொரிதல் என்கிற புஷ்பாஞ்சலி மாலை தொடங்கி மறுநாள் காலை வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் மேளதாளத்துடன் கூடை கூடையாகப் பூக்களைக் கொண்டுவந்து சமர்ப்பிப்பார்கள். இந்த பச்சை பட்டினி விரதமும், பூச்சொரிதலும் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும்.'
- மு. தனகோபாலன், திருவாரூர்.

ஷட்பதானந்தா: ஒருமுறை திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் திருவல்லிக்கேணியில் அகோபில மடம் ஜீயர் சுவாமிகளின் அழைப்பின் பெயரில் "கண்ணன் தூது' பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார். இவரின் உரை கேட்டு மகிழ்ந்த ஜீயர் சுவாமிகள், "ஷட்பதானந்தா' என்று எழுதப் பெற்ற தங்கப்பதக்கத்தை வாரியாருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
"ஷட்பதானந்தா' என்பதற்கு அருமையான விளக்கத்தை வாரியார் சுவாமிகள் கூறினார்.
"வண்டுக்கு ஆறு கால், அதனால் வண்டு ஷட்பதம் என்று பெயர் பெற்றது. அந்த வண்டு ரோஜா மலரிலிருந்தும் தேவை எடுக்கும், கள்ளிப் பூவிலிருந்தும் தேனை எடுக்கும்.அதுபோல் நான் வேத், ஆகமம், குரான், பைபிள் முதலிய நூல்களில் இரந்து நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் எனக்கு ஜீயர் சுவாமிகள் வழங்கிய "ஷட்பதானந்தா' என்றப் பட்டம் பொருந்தும்' என்றார்.
இது நீங்கள் கேள்விப்படாத புதிய செய்திதானே!
- இராம. முத்துக்குமரன், கடலூர்

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X