நூறு கோடி வாடிக்கையாளர்களை வளைக்கும் பேஸ்புக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2014
00:00

இந்தியாவில் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, சென்ற மார்ச் மாதம், பத்து கோடியைத் தாண்டியதால், அடுத்த இலக்காக 100 கோடி பேர்களை, பேஸ்புக்கிற்குக் கொண்டு வர முயற்சிக்கிறது பேஸ்புக். பத்தாண்டு காலத்தில் தான் மேற்கொள்ள இருக்கும் மும்முனைத் திட்டங்கள் குறித்து அண்மையில் பேஸ்புக் அறிவித்துள்ளது. முதலாவதாக, தொலை தொடர்பு நிறுவனங்கள், மொபைல் போன் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, மக்களை இணையத் தொடர்பு கொள்ள வைத்தல். இதற்கு உதவிடும் வகையில் Internet.org என்ற தளத்தை அமைத்தல். அடுத்து, பிலிப்பைன்ஸ் மற்றும் பராகுவே நாட்டில் தான் மேற்கொண்டது போல, இலவச இணைய இணைப்பினை மொபைல் போன்களில் வழங்குதல் மற்றும் மூன்றாவதாக, இணைய இணைப்பு பெற்றவர்களிடம், டேட்டாவினை எளிதாகவும் விரைவாகவும் கொண்டு செல்லுதல். இதற்கெல்லாம் முதல் படியாக, மொபைல் போன் வழி இணையத்திற்கு மக்களை வழி நடத்தும் முன், அவர்கள் தொடக்கத்தில், பட்ஜெட் விலையிலான மொபைல் போனைப் பெற்று பயன்படுத்தும் வகையில், போன்கள் தயாரிக்கப்பட வேண்டும் என பேஸ்புக் விரும்புகிறது. அப்போதுதான், அதில் பழக்கப்பட்ட பின்னர், இணையம் தரக்கூடிய மொபைல் போனுக்கு மக்கள் மாறிக் கொள்வார்கள். அல்லது தொடக்க நிலையிலேயே அந்த வகை போனை நாடுவார்கள் என்று பேஸ்புக் கருதுகிறது.
இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் வளர்ச்சி, தொடக்கம் காலம் தொட்டு மொபைல் போன் பயன்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில், ஹைதராபாத் நகரில் இதன் முதல் அலுவலகம் தொடங்கப்பட்டது. அப்போது இந்தியாவில் பேஸ்புக் வாடிக்கை யாளர்களாக, 80 லட்சம் பேர் இருந்தனர். தற்போது இது 10 கோடியாக உள்ளது என்றும், இவர்களில் 8 கோடியே 40 லட்சம் பேர் மொபைல் போன் வழியே, பேஸ்புக்கினைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறியப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனத்தின் பயனாளர் எண்ணிக்கை, சென்ற டிசம்பரில் 123 கோடி ஆகும். உலக அளவில், சென்ற மூன்று ஆண்டுகளில், பேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 60 கோடியிலிருந்து 120 கோடியாக இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதே காலத்தில், ஐந்து மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஒரு கோடியே 70 லட்சத்திலிருந்து 10 கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X