விண்டோஸ் எக்ஸ்பியில் தொடர்பவர்களுக்கு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2014
00:00

திரைப்படம் ஒன்றில், கவுண்டமணி, தான் வாடகைக்கு விடும் பெட்ரோமேக்ஸ் லைட் கெட்டுப் போன பின்னர், அதனை வாடகைக்கு கேட்டு வருபவரிடம், "பெட்ரோ மேக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று கேட்பார். இது தமிழ் அறிந்த மக்களிடம் வேடிக்கையான வாக்கியமாக மாறிவிட்டது.
இப்போது தொடர்ந்து, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர் களைப் பார்த்து, அதே தொனியில், "எக்ஸ்பி சிஸ்டமே வேண்டுமா?” என்று கேட்க வேண்டியுள்ளது.
நகைப்புக்குரிய இந்தக் காட்சியைச் சற்றுப்புறம் தள்ளி, இதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே தொடர்பவர்களுக்கான சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வேண்டாம்: எக்ஸ்பி சிஸ்டங்களில், பரவலாகப் பயன் படுத்தப்படும் பிரவுசர், இன் டர்நெட் எக்ஸ் புளோரர் 8 ஆகவே உள்ளது. இந்த பிரவுசரின் பதிப்பு 11 வெளியாகிப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, அது எவ்வளவு பழைய பதிப்பு என்பதனை நீங்கள் உணரலாம். இது அப்டேட் செய்யப்படுவதில்லை என் பதால், இணையம் வழி கம்ப்யூட்டர்களைக் கைப்பற்று பவர்கள் அனுப்பும் வைரஸ்களுக்கு, இந்த பிரவுசர் எளிதான வழியை அமைத்துத் தரும். எனவே, இதனைப் பயன்படுத்த வேண் டாம். இதன் இடத்தில், குரோம் அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்தவும். இந்த இரண்டு நிறுவனங்களும், தங்களின் பிரவுசர்களுக்கான பாதுகாப்பு பைல்களைத் தொடர்ந்து தர இருப் பதாக அறிவித்திருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
2. பிற நிறுவன சாப்ட்வேர் அப்ளி கேஷன்கள்: நம் கம்ப்யூட்டரில் எந்த அளவிற்கு பிற நிறுவனங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்கி றோமோ, அந்த அளவிற்கு வைரஸ்கள் பரவுவது குறையும். ஏனென்றால், இது போன்ற வைரஸ் அனுப்பி தகவல்களைத் திருடும் குற்றவாளிகள், பிற நிறுவனங்களின் அப்ளிகேஷன்களில் உள்ள குறைபாடுகளையே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். அந்த வகையில், அடோப் ப்ளாஷ், அக்ரோபட் பி.டி.எப். ரீடர் மற்றும் ஜாவா ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிற்குப் பதிலாக வேறு சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க முடியும் என்றால், இவற்றை நீக்கிவிடலாம். ஜாவா பிரவுசர் ப்ளக் இன், உங்கள் இணைய இயக்கத்திற்குத் தேவை இல்லை என்றால், முழுமையாக எடுத்துவிடலாம்.
3. விண்டோஸ் பயர்வால் இயக்கவும்: பலர் இது குறித்து அறிந்திருப்பதே இல்லை; அறிந்த வர்களும் பயன்படுத்துவது இல்லை. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பயர்வால் ஒன்று இணைந்து தரப்பட்டுள்ளது. இதனைக் கண்ட்ரோல் பேனல் சென்று அறியலாம். அறிந்து இயக்கி வைக்க வேண்டும்.
4.மேம்படுத்துக: மைக்ரோசாப்ட் நிறுவனத் தின் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களையும், தொடந்து அப்டேட் செய்து வைத்து இயக்கவும். ஆல் புரோகிராம்ஸ் (All Programs) சென்று, அதில் விண்டோஸ் அப்டேட் (Windows Update) பார்த்தால், இன்னும் எந்த அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு அப்டேட் தேவை எனத்தெரிய வரும். மேலும், எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பிற்கும் சப்போர்ட் பைல் நிறுத்தப்பட்டு விட்டதால், அதனை நீக்கிவிட்டு, ஓப்பன் ஆபீஸ் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
5. குறைவான யூசர் அக்கவுண்ட்ஸ்: உங்கள் கம்ப்யூட்டரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலையை மாற்றவும். குறைவான நபர்களே பயன்படுத்த அனுமதித்தால், பாதுகாப்பு குறைபாடு ஏற்படாது. சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்கையில், அட்மி னிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் வழியே மட்டுமே செய்திட வேண்டும்.
6. தெரியாத வைரஸ்: புதிய வைரஸ்கள் பரவுகையில், அதன் தன்மையினை உணர்ந்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சில வாரங்கள் ஆகலாம். இத்தகைய நிலையை ஸீரோ டே அட்டாக் எனக் கூறுவார்கள். சப்போர்ட் இல்லாத எக்ஸ்பி சிஸ்டத்தில் தொடர்ந்து இருந்தால், எந்நேரமும் ஸீரோ டே அட்டாக் தான் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. எனவே, இது போன்ற தகவல்கள் கிடைக்கும்போது, கூடுதல் பாதுகாப்பு தேவை. மைக்ரோசாப்ட், இன்னும் ஓராண்டிற்குத் தன்னுடைய மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் தொகுப்பினை அப்டேட் செய்து வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இதனைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
7. விழிப்புடன் பாதுகாப்பு: சப்போர்ட் இல்லாத சிஸ்டம் பயன்படுத்துவதால், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மின் அஞ்சல்களைத் திறக்கவே வேண்டாம். தேவையற்ற தொடர்புகளில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ள வேண்டாம். இணையத் தொடர்பினை இந்த கம்ப்யூட்டரிலிருந்து எடுத்துவிட்டால் கூட நல்லதுதான்.
8. புதிய சிஸ்டத்திற்கு மாறிடுக: எல்லா வற்றையும் சீர் தூக்கிப் பார்க்கையில், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றுக்கு மாறுவதே நல்லது. அதற்கு உங்களுடைய கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் இடம் கொடுக் கவில்லை என்றால், புதிய கம்ப்யூட்டரை, வேறு ஒரு அண்மைக் காலத்திய சிஸ்டத்துடன் வாங்கிப் பயன் படுத்துவதும் நல்லது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X