பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2014
00:00

இன்வர்டர் மற்றும் யு.பி.எஸ். செயல்படும் நிலைகள், ஒவ்வொன்றும் என்ன வகையில் நமக்கு மின்சக்தியைத் தருகின்றன என்பதனைக் கேள்வி பதில் பகுதியில் அருமையாகத் தந்துள்ளீர்கள். நான் இதுவரை வேறு மாதிரியாக எண்ணிக் கொண்டிருந்தேன்.
-எஸ்.கே. உமையாள், தாம்பரம்.

சிஸ்டம் டூல்களில் செக்யூரிட்டி லாக் மற்றும் ஈவண்ட் ஐ.டி. நமக்குக் கிடைக்கும் நல்ல வழிகளாகும். தீர்வுகளைத் தெரிந்து கொள்ள இவை நமக்கு உதவுவதும் சிறப்பாக உள்ளது. இவை போன்ற டிப்ஸ்களை மொத்தமாக அடிக்கடி தரவும். இதனால், கம்ப்யூட்டர் இயக்கம் நின்று போனால், நாமே, பிரச்னை எங்குள்ளது என்று அறிய எளிதாக இருக்கும்.
-எஸ்.நிர்மலா, திருப்பூர்.

விண்டோஸ் எக்ஸ்பி குறித்த கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள் சுருக்கமாகவும், தேவை உள்ளதன் அடிப்படை யிலும் தரப்பட்டுள்ளன. குறிப்பாக விண்டோஸ் சிஸ்டத்தின் வரலாற்றுக் குறிப்புகள் அருமையாக இருந்தன.
-செ. குழந்தை யேசு, காரைக்கால்.

விண்டோஸ் எக்ஸ்பியின் முடிவு அனை வருக்கும் வருத்தம் தரும் செய்தி தான்.இருப்பினும் நாம் எத்தனை நாள் தான் பழையதன் மோகத்திலேயே இருப்பது? அடுத்து விண்டோஸ் 8ல் மட்டுமே இயங்கும் ஒரு பயனுள்ள சாப்ட்வேர் வந்தால் என்ன செய்வது? எனவே, எக்ஸ்பிக்கு விடைகொடுத்து, புதிய சிஸ்டம் ஒன்றுக்கு மாறுவதே நல்லது.இதனை உங்கள் கட்டுரை நன்றாகச் சொல்கிறது.
-ஏ. பிரகாஷ் ராஜ குமார், மதுரை.

குரோம் பிரவுசர் டிப்ஸ் அனைத்துமே பயனுள்ளவை. சில இதழ்களுக்கு முன்பு, முதல் தொகுதியில் தந்தவற்றுடன் இவற்றையும் இணைத்து வைத்து பயன்படுத்தி வருகிறேன். இவற்றில் எக்ஸ்டன்ஷன்களை இயங்காமல் வைத்திருக்க தரப்பட்டுள்ள டிப்ஸ் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. குரோம் பிரவுசர் தொடர்ந்து புதிய வசதிகளைத் தந்து கொண்டு இருப்பதால், டிப்ஸ்களையும் தொடர்ந்து தரவும்.
-என். கோகிலம், மதுரை.

மூடப்படுகையில் உள்ள தளங்களை மீண்டும் திறக்கும்போது அப்படியே கிடைக்கும் என்ற தகவல் புதியதாக உள்ளது. இது எவ்வளவு பயனுள்ளது என்பது அதனைப் பயன்படுத்திப் பார்த்தாலே தெரியவரும். டிப்ஸ்களுக்கு மிக்க நன்றி.
- எஸ்.ஏகாம்பரம், கோவை.

சமூக வலைத் தளங்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்க இந்த தேர்தலும் உதவுகிறது என்பதைப் படிக்கும்போது, புத்திசாலி யானவன் எதிலும் சம்பாதிப்பான் என்பது வெளிச்சமாகிறது.
-கா.ஆரோக்கியதாஸ், புதுச்சேரி.

தனக்கென தனி வழி கொண்டிருந்தாலும், ஐபோன்களை விரும்புபவர்கள் 50 கோடிக்கும் மேல் என அறியும்போது வியப்பாகவும் உள்ளது. குறிப்பாக அமெரிக்க நாட்டில் ஐபோன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது.
-எஸ். பெருமாள், திண்டுக்கல்.

வர இருக்கும் கேலக்ஸி எஸ் 5 குறித்த, அதிக தகவல்களை அடக்கிய கட்டுரை மிகச் சிறப்பான முறையில், அந்த போன் குறித்து விளக்கியுள்ளது. விலை வழக்கம்போல அதிகமாகவே உள்ளது. போகப்போகக் குறையும் என எதிர்பார்க்கலாம்.
-எஸ்.கமலி ராஜ சேகர், திருமங்கலம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X