கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2014
00:00

கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். விண்டோஸ் எக்ஸ்பிக்கு தரப்பட்டு வரும் பாதுகாப்பு பைல்கள் நிறுத்தப்படும் என்ற செய்தி குறித்துத் தாங்கள் தொடர்ந்து தந்து வரும் எச்சரிக்கைக் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். எக்ஸ்பி பயன்படுத்தும் என் நண்பர்களிடமிருந்து வரும் இமெயில்களை நான் தடை செய்திட வேண்டுமா? அவர்களிடமிருந்து எனக்கு வைரஸ் பரவாதா?
-டி. ஜெயசிங் மனோ, ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்:
நல்ல கேள்வி. விண்டோஸ் எக்ஸ்பி தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்துதான். இதற்காக, அதனைப் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்களுக்குத் தடை போட வேண்டியதில்லை. ஆனால், அவர்களின் அஞ்சலுடன் வரும் இணைப்புகளைத் திறக்காமல் இருப்பது நல்லது. அல்லது அதனை வைரஸ் டோட்டல் போன்ற தளங்களுக்கு அனுப்பி சோதனையிட்ட பின்னர், திறப்பது நல்லது. உங்கள் கம்ப்யூட்டரில் நல்ல மேம்படுத்தப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எப்போதும் இயங்க வேண்டும். நண்பர்களிடமிருந்து மின் அஞ்சல் வழியாக வரும் வைரஸ் மற்றும் மால்வேர்களை அது தடுத்துவிடும்.

கேள்வி: தன் வாடிக்கையாளர்கள் விரும்பிய போதும், மைக்ரோசாப்ட் நிறுவனம், எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட் பைல் தருவதனை நிறுத்திவிட்டது. அப்படி இருக்கையில், எப்படி இந்த நிறுவனத்தை நம்பி, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை நாம் பயன்படுத்த முடியும்? தற்போது பயன்பாட்டில் இருக்கும், அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் காலம் எப்போது முடிவிற்கு வரும்?
-என். கார்த்திகேயன், சீர்காழி.
பதில்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கொள்கை முடிவுப்படி, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பத்து ஆண்டுகளுக்கு அதற்கான சப்போர்ட் பைல்கள் வழங்கப்படும். இடையே புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டாலும், இந்த உதவிக் குறியீடுகள் உள்ள பைல்கள், அந்த சிஸ்டங்களைப் பாதுகாக்கும். எக்ஸ்பி சிஸ்டம் மட்டுமே, தொடர்ந்து 13 ஆண்டுகள் பாதுகாப்பிற்கான பைல்களைப் பெற்றது. தொடர்ந்து சப்போர்ட் பைல்களைத் தருவது, இன்றைய சூழ்நிலையில் இயலாது என்பதாலும், அதற்கான செலவு மிக அதிகமாக இருக்கும் என்பதாலும், மைக்ரோசாப்ட், ஏப்ரல் 8 முதல் சப்போர்ட் பைல்கள் வழங்குவதனை நிறுத்திவிட்டது. எனவே, இதற்கு அதனைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. நீங்கள் கேட்டது போல மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான, சப்போர்ட் எந்த நாள் வரை இருக்கும் என்பதனைக் கீழே தருகிறேன்.
1. விண்டோஸ் விஸ்டா -- ஏப்ரல் 11, 2017.
2. விண்டோஸ் 7 -- ஜனவரி 14, 2020.
3. விண்டோஸ் 8 -- ஜனவரி 10, 2023.

கேள்வி: டிவிடிக்களில் வீடியோ காட்சிகளை பதிய முற்படுகையில், டிவிடி ப்ளஸ் ஆர் பயன்படுத்தலாமா? அல்லது மைனஸ் ஆர் பயன்படுத்தலாமா? அடிக்கடி இந்த சந்தேகம் எழுகிறது. விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-ஆர். தென்னவன், மதுரை.
பதில்
: பதிவு செய்யக் கூடிய டிவிடிக்கள் வந்ததிலிருந்து இத்தகைய சந்தேகம் பயனாளர்களுக்கு வந்து கொண்டே இருக்கிறது. இதற்குச் சுருக்கமாகச் சொல்வதென்றால், தற்போது வரும் டிவிடி பிளேயர்களில் இந்த வேறுபாடு ஒரு பிரச்னையே இல்லை. டிவிடி - ஆர் (DVD - R) முதலில் 1997ல் அறிமுகமானது. பயோனியர் கார்ப்பரேஷன் இதனைத் தயாரித்து வெளியிட அடிப்படைக் காரணமாக இருந்தது. இது சற்று பழைய வடிவம் என்பதால், பழைய டிவிடி ப்ளேயர்கள் எளிதாக இதனை இயக்கின. டிவிடி + ஆர் (DVD + R) 2002 ஆம் ஆண்டில் வந்தது. இதனைக் கொண்டு வருவதில் அதிகம் பாடுபட்டது சோனி நிறுவனம். இது பின் நாளில் வந்ததால், அனைவரும் இதனையே உயர்வானது என்று எண்ணத் தொடங்கினர். புதிய தொழில் நுட்பம் கிடைத்து அதன் அடிப்படையில் வந்ததனால், இந்த வகை டிவிடிக்களின் செயல்பாட்டில் சில மேம் படுத்தப்பட்ட அம்சங்கள் இருந்தன. ஆனால், எதனையும் பயன்படுத்தலாம் என்பதே உண்மை. இதில் இன்னொரு சிறிய தகவலையும் தருகிறேன். டிவிடி - ஆர் டபிள்யு என்று ஒரு வகை உண்டு. அழித்து மீண்டும் எழுதக் கூடிய டிவிடி இது. ஆனால், பல டிவிடி ப்ளேயர்கள் இதனை இயக்குவதில்லை. மேலும் இதில் பதியப்படுபவை தானாகவே அழிந்து போவதும் உண்டு. எனவே, இதனைப் பயன்படுத் துவதனைத் தவிர்க்கவும்.

கேள்வி: அடிக்கடி மாறா நிலை என்று எழுதி அதனை ஆங்கிலத்தில் default எனக் குறிப்பிடுகின்றனர். இந்த ஆங்கிலச் சொல் பழுது என்பதுடன் தொடர்புடையதுதானா? ஏன் மாறா நிலை எனத் தமிழில் எழுதுகிறீர்கள்?
-டி. கலா ராணி, திருப்பூர்.
பதில்:
default மற்றும் fault என்ற இரு ஆங்கிலச் சொற்களின் பொருள் குறித்த குழப்பம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. fault என்ற சொல் மறுதலையான ஒன்றைக் குறிப்பதால் இந்த பொருள் குழப்பம். எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருளைப் பொறுத்தவரையும், அதனைத் தயாரிப்பவரால், தானாக அமைக்கப்படும் அமைப்பே default என அழைக்கப் படுகிறது. எடுத்துக்காட்டாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பிரவுசராக மாறா நிலையில் (default), இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரப்படுகிறது. அதாவது, நீங்கள் இணையத்திற்கான ஏதேனும் ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால், மாறா நிலையில் உள்ள இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இயக்கப்பட்டு, அந்த இணையப் பக்கம் காட்டப்படும். மாறா நிலை யில் உள்ள ஒன்றை மாற்ற வேண்டுமானால், நீங்கள் தான் மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக, வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்க முயற்சிக்கையில், அது ஏரியல் அல்லது டைம்ஸ் ரோமன் எழுத்து வகையுடன் திறக்கப்படும். ஏனென்றால், இந்த எழுத்துக்களில் ஒன்று மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் வேறு எழுத்து வகை வேண்டும் எனவோ, அல்லது மாறா நிலையில் எப்போதும் வேறு எழுத்து வகை வேண்டும் என விரும்பினால், பாண்ட் விண்டோவினைத் திறந்து, தேவையானதைத் தேர்ந்தெடுத்து அதனை மாறா நிலையில் அமைக்க வேண்டும்.

கேள்வி: புதியதாக விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் காட்டப்படும் நேரத்தினை மாற்றி அமைக்க வேண்டும். இதனை இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எப்படி அமைப்பது? ஹெல்ப் பட்டன் அழுத்தியும் கிடைக்கவில்லை.
சி.அமனுல்லா, சென்னை.
பதில்
: விண்டோஸ் 8 சிஸ்டம் அனைத்து வகைகளிலும் சற்று மாறுபட்டது. நேரம் காட்டுவதற்கு, இன்டர்நெட் தொடர்புள்ள "time server” ஒன்றைத் தொடர்பு கொண்டு காட்டும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் தவறான ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் தான், நேரம் தவறாகக் காட்டப்படுகிறது. சரி செய்திட கீழ்க்காணும் செயல் முறைகளை மேற்கொள்ளவும்.
முதலில், விண்டோஸ் 8 திரையின் கீழாக வலது புறத்தில் உள்ள கடிகார ஐகானைக் கிளிக் செய்திடவும். ஆப்ஷன்ஸ் மெனு பாப் அப் ஆகி வந்தவுடன், Adjust date / time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய விண்டோ ஒன்று காட்டப்படும். இதில் 'Internet Time' என்ற டேபில் கிளிக் செய்திடவும். அடுத்து 'Change settings' என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த திரைக் காட்சியில் 'Synchronize with an Internet time server.' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கீழ்விரி மெனு கிடைக்கும். இதில் 'time.windows.com' என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். இதற்குப் பின்னர், 'Update now' என்பதனைத் தேர்ந்தெடுக்க, நேரம் சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டரை இன்ஸ்டால் செய்கையில், இந்தியாவிற்கேற்றபடி இடம் செட் செய்திருக்க வேண்டும். சிஸ்டம் இந்த மாற்றங்களை மேற்கொள்கையில், இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.

கேள்வி: என் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் உள்ளதனை எப்படி அறிந்து கொள்வது? இதற்கான ஐகான்கள் டெஸ்க்டாப்பில் அமையுமா?
-ஆர்.நிர்மலா, தேனி.
பதில்:
டாஸ்க் பாரில் அமையும். ஏற்கனவே இருந்திருக்கும். அதனை மறைக்கும் வகையில் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை உங்களையும் அறியாமல் மேற்கொண்டிருக்கலாம். அவற்றைப் பெறும் வழிகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
நோட்டிபிகேஷன் ஐகான் என அழைக்கப்படும், டாஸ்க்பாரின் வலது மூலையில் உள்ள அம்புக் குறியினை அழுத்தி, கிடைக்கும் மெனுவில் customize என்பதில் கிளிக் செய்திடவும். இந்த பட்டியலில், நெட்வொர்க் ஐகானைக் கண்டறிந்து, கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும். இங்கு "Show icons and notifications” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்திடவும். இப்போது உங்களின் நெட்வொர்க் ஐகான் காட்டப்படும்.
இப்போதும் அவை காணப்படவில்லை என்றால், கண்ட்ரோல் பேனல் சென்று Network Connections என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நெட்வொர்க் இணைப்புகளும் காட்டப்படும். அதில் ஒன்றில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் திரையில் Show icon in notification area when connected என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி வெளியேறவும். இனி, இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், இந்த ஐகான் காட்டப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X