அடி பணிந்த மைக்ரோசாப்ட்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
00:00

சென்ற வாரம், தன்னுடைய நிறுவனத் தயாரிப்புகளின் இரகசியங்களைத் திருடிய ஒருவரைக் கண்டுபிடிக்க, மைக்ரோசாப்ட் அதன் சர்வர்களில் உள்ள தன் மின்னஞ்சல் வாடிக்கையாளர்களின் கடிதங்களைப் படித்த செய்தி வெளியானது. இதனைப் பன்னா டெங்கும் உள்ள பெரும்பான்மையான ஹாட்மெயில் வாடிக்கையாளர்கள், மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செய்கை, அதன் நம்பகத்தன்மைக்கு எதிரானது என்றும், அதன் சர்வர்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களைப் படித்தறிவது நம்பிக்கைத் துரோகம் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனமோ, அதற்கான ஒப்புதலை, மின் அஞ்சல் கணக்கு தொடங்கும்போதே வாடிக்கையாளர்கள் தந்துள்ளனர் என்று கூறியது. நாம் இமெயில் அக்கவுண்ட் தொடங்குகையில், ஒத்துக் கொள்ளும் மிகப் பெரிய ஒப்பந்தத்தில் இந்த பிரிவும் இருந்ததனைப் பின்னர் அனைவரும் தெரிந்து கொண்டனர்.
இருப்பினும் வாடிக்கையாளர்களின் பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து, இனிமேல், தங்கள் சர்வர்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ள, நிறுவனத் தகவல்களை யாரேனும் திருடு கிறார்கள் என்று தெரிய வந்தால், சர்வர்களில் உள்ள தகவல்களை மைக்ரோசாப்ட் தெரிந்து கொள்ள முயற்சிக்காது எனவும், திருட்டு குறித்து காவல்துறைக்குத் தெரிவித்து, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிறுவனத்தின் சட்டம் மற்றும் நிர்வாகத் திற்கான பிரிவின் துணைத் தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில், வாடிக்கையாளர்களுடன் மேற்கொள்ளப்படும் மின் அஞ்சல் சேவை குறித்த ஒப்பந்தத்தில் இதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X