பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
00:00

சிக்லெட் கீ போர்டு பற்றிய பதில் புதிய தகவலைத் தருவதாய் உள்ளது. இது போல பெயர்கள் உள்ள கம்ப்யூட்டர் பாகங்கள், துணை சாதனங்கள் குறித்து அடிக்கடி சிறிய குறிப்புகள் தரவும்.
எஸ். பூமா சந்திரன், வந்தவாசி.

ஒரு வழியாக விண்டோஸ் எக்ஸ்பியின் கதை முடிவிற்கு வந்துவிட்டது. மைக்ரோசாப்ட் கூறும் காரணங்கள் சரியாக இருந்தாலும், மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். வெளிநாடுகளில் எக்ஸ்பியைப் பயன்படுத்தும் மக்களும் அதிகம் உள்ளனர் என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.
டி.ஆர். ஆனந்தக் கண்ணன், சேலம்.

எழுத்தின் அளவு குறித்து விளக்கம் தந்துள்ள நீங்கள், எழுத்து வகை மற்றும் அவை எப்படி டிஜிட்டல் இயந்திரங்களில் இயங்குகின்றன என்பதனையும் விளக்கிட வேண்டும். இது என் விண்ணப்பம்.
சா. வெற்றிச் செல்வி, திசையன்விளை.

பிரவுசர்களில், எந்த ஒன்றையும் மிக உயர்ந்தது என்று கூறாமல், மிக அழகாக ஒவ்வொரு விஷயத்திலும் எந்த பிரவுசர் அதிகத் திறன் கொண்டது என்று விளக்கப்பட்டுள்ள கட்டுரை ஆய்வுக் கட்டுரை போல உள்ளது. நன்றி.
செ.தமிழ்ராணி, பெருங்களத்தூர்.

ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் அடிப்படையிலும் நாம் பிரவுசர்களைத் தேர்வு செய்திட வேண்டும் என நீங்கள் குறிப்பிட்டுள்ளது புதிய, ஆனால், சரியான பயனுள்ள தகவல்.
கே. உமா சந்திரன், விருதுநகர்.

இன்று தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் நம் அனைவருக்கும் உதவுவதில் முதல் இடம் பெற்றுள்ளது ஜிமெயில் என்றால் அது மிகையாகாது. அதன் உருவாக்கம் மற்றும் பல நிலைகளில் அதன் வளர்ச்சி குறித்து நீங்கள் அளித்துள்ள தகவல்கள், டிஜிட்டல் உலகில் எப்படி எல்லாம் உழைக்க வேண்டியுள்ளது, என்ன என்ன நோக்கத்தில் இலக்குகளை அமைக்க வேண்டியுள்ளது என்று காட்டுகிறது.
கே. ராபர்ட் ஜெயராஜ், அருப்புக்கோட்டை.

அந்தக் காலத்து ஹாட் மெயில் முதல் பல மின் அஞ்சல்களைப் பயன்படுத்தி வந்துள்ளேன். வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து, தொடர்ந்து வசதிகளைத் தருவதில், ஜிமெயிலுக்கு இணை எதுவும் இல்லை. இதனை உருவாக்கி, இலவசமாகத் தந்து வரும் ஜிமெயில் வல்லுநர்களுக்கு இந்த சமுதாயம் கடமைப் பட்டுள்ளது.
பெரி. மகேஸ்வரன், மதுரை.

கவுண்டமணி ஜோக்குடன் கட்டுரை தொடக்கம் இருந்தாலும், எக்ஸ்பியில் தொடர்பவர்களுக்கான அறிவுரைகள் மிகவும் பயனுள்ளவையாய் உள்ளன. எக்ஸ்பியில் தொடர்பவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் கம்ப்யூட்டரைப் பணம் செலவழித்து அப்கிரேட் செய்திட முடியாதவர்கள் தான். எனவே, இவர்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து டிப்ஸ்களைத் தரவும்.
எக்ஸ்பி பயன்படுத்தி வரும்
என். ஸ்ரீதரன், திண்டுக்கல்.

வேர்ட் புரோகிராமில் சிறப்பு குறியீடுகளை அமைப்பது குறித்த டிப்ஸ் மிகவும் உபயோகமான ஒன்று.
ஆ.கதிரேசன், புதுச்சேரி.

என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், விண்டோஸ் எக்ஸ்பியில் தொடர்வது பிரச்னைகளையே தரும். எனவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மாற்றிக் கொள்வது நல்லது. அல்லது இணைய இணைப்பினைப் பெறுகையில், லினக்ஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்தலாம்.
என்.கே. மயில்சாமி, கோவை.

பெருகிவரும் மொபைல் சாதனப் பயன்பாட்டில் தமிழைப் பயன்படுத்த நமக்கு எளிமையான புரோகிராம் செல்லியல் ஆக உள்ளது. இது தொடர்ந்து பல லட்சம் மக்களை அடைவதில் வியப்பே இல்லை.
எஸ். ஆர். மணிகண்டன், தாம்பரம்.

மாறா நிலை மற்றும் பழுதடைதல் என்ற இரு பொருள் குறித்து நானும் பல நாட்களாகக் குழப்பமாகத் தெரிந்து கொண்டிருந்தேன். தங்கள் பதில் நல்ல தெளிவினைத் தந்தது. நன்றி.
ஆர். சுந்தரராஜன், பழனி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X