கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
00:00

கேள்வி: எலக்ட்ரானிக் ஹெல்த் ரெகார்ட் (இ.எச்.ஆர்) என எதனைக் குறிப்பிடுகின்றனர்? கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த அதன் தன்மையைத் தான் என என் நண்பர் கூறுகிறார். இது சரியா?
தே. உலகநாதன், திருப்பூர்.
பதில்: உங்கள் நண்பர் கூறுவது முற்றிலும் தவறு. EHR Electronic Health Record என்பது ஒருவரின் உடல் நலம் குறித்து கம்ப்யூட்டரில் பதியப்பட்ட தகவல்கள் அடங்கிய தொகுப்பாகும். கம்ப்யூட்டரின் இயங்கும் தன்மைக்கும் இந்த அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வு அமைப்புகள் பகிர்ந்து கொள்வார்கள். இது ஒரு நாள் மட்டும் எடுக்கும் உடல் நலம் குறித்த அறிக்கை அல்ல. நோயாளி ஒருவரின் உடல்நிலை குறித்த மொத்த தகவல் அறிக்கைகள் அடங்கிய கம்ப்யூட்டரில் பதியப்பட்ட தகவல் தொகுதியாகும். இதில் நோயாளியைத் தொடர்பு கொள்ள முகவரி, உடல்நலம் சார்ந்த இன்சூரன்ஸ் தகவல்கள், நோயாளி எடுத்துக் கொண்ட மருந்து வகைகள், ஒவ்வாமை தகவல்கள், எந்த எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளப்பட்டது போன்ற என்ற அனைத்து தகவல்களும்
இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இலவசமாக வழங்கப்படுகிறது என்று ஒரு பத்திரிக்கைச் செய்தி படித்தேன். இது உண்மையா?
ஆ.தனசிங், புதுச்சேரி.
பதில்: இதற்கு ஆம் மற்றும் இல்லை என பதில் சொல்ல வேண்டும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என நீங்கள் குறிப்பிடுவது கம்ப்யூட்டர்களுக்கானது என்று நினைக்கிறேன். நிச்சயமாக மைக்ரோசாப்ட் அதனை இலவசமாக இன்றைய நிலையில் தராது. 9 அங்குலத்திற்கும் குறைவான அளவில் வடிவமைக்கப்படும் மொபைல் சாதனங்கள் இயக்கத்திற்கான தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, எந்தவிதமான உரிமக் கட்டணமும் இன்றி தருவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதனால், சிறிய அளவில் டேப்ளட் பி.சி.களையும், மொபைல் போன்களையும் தயாரிப்பவர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உரிமக் கட்டணம் எதுவுமின்றி அவற்றிற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால், இவற்றின் விலையும் குறைய வாய்ப்புண்டு. பயன்பாடு பெருகும். இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கும் பயனாளர்கள், அதில் கிடைக்கும் வசதிகளின் அடிப்படையில், தங்களுடைய பெரிய அளவிலான சாதனங்களுக்குக் கட்டணம் செலுத்தி வாங்குவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
உங்களைப் போலவே, பலரும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கும், மைக்ரோசாப்ட் கட்டணம் இல்லா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த வழியில் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

கேள்வி: நான் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறேன். இதில் புக்மார்க்ஸ் டேப் உள்ளது. ஆனால், கிளிக் செய்தால், புக்மார்க்ஸ் கிடைக்கவில்லை. அனைத்தும் நீக்கப்பட்டிருக்குமா? மீண்டும் பெற என்ன செட் அப் செய்திட வேண்டும்?
கா. சுந்தரி சுரேஷ், மதுரை.
பதில்:நல்ல கேள்வி. பயர்பாக்ஸ் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும், ஒவ்வொரு நாளும் நீங்கள் அமைத்த புக்மார்க்குகளை பேக் அப் செய்துகொள்ளும். எனவே, அவற்றைத் திரும்பப் பெறுவது எளிதாகும். முதலில் Bookmarks என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், "Show All Bookmarks” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Firefox Library என்ற விண்டோ திறக்கப்படும். இதில் Import and Backup என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Restore என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு கீழ்விரி பட்டியல் ஒன்று கிடைக்கும். அதில் நாட்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில், எந்த நாளிலிருந்து நீங்கள் அமைத்த புக்மார்க்குகள் தேவையோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். தற்போது கிடைக்கும் புக்மார்க்குகள் அமைத்த நாளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் உங்கள் புக்மார்க்குகளை ஏதேனும் பைல் ஒன்றில் பேக் அப் செய்து வைத்திருந்தால், choose file என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, அந்த பைலிலிருந்து உங்கள் புக்மார்க்கு களைப் பயன்படுத்தவும். சில புக்மார்க்குகள் மட்டும் உங்களுக்குத் தற்போது கிடைக்கும் நிலையிருந்தால், பைலில் இருந்து புக்மார்க்குகளை அமைக்கும் போது, அவை நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. உங்களைப் பொறுத்த மட்டில், அனைத்துமே கிடைக்காமல் இருப்பதால், இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

கேள்வி: Expireware என்பதுஎந்த வகை சாப்ட்வேர் தொகுப்பினைச் சேர்ந்தது? நாளாகிப் போன சாப்ட்வேர் அப்ளிகேஷன்களுக்கு இது உயிர் கொடுக்குமா? இதனை எங்கிருந்து பெறலாம்?
ஆர். இளமாறன், மதுரை.
பதில்: நல்லா கேட்டீங்களே! தன் ஆயுட்காலம் முடிந்து இயங்காமல் முடங்கும் புரோகிராம்களைத் தான் இந்த சொல் கொண்டு குறிக்கிறோம். குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இயங்கும் வரையில் சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் தயாரிக்கப்படும். அந்த காலத்திற்குப் பின்னர், அவை இயங்காது. அல்லது பயனற்ற புரோகிராமாக மாறிவிடும். நீங்கள் விரும்புவது போல, இவ்வாறு பயனற்ற புரோகிராம்களை மீண்டும் இயக்க வைக்கும் புரோகிராம்கள் எதுவும் இல்லை.

கேள்வி: கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் மெமரி எப்படி வீணாகும்? இதனை மெமரி லீக் எனக் கூறுகிறார்களா? இல்லை எனில் அது எதனைக் குறிக்கிறது?
ஆர். பாலா சுந்தரி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்: கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மெமரியை வீணாகப் பயன்படுத்துவது என்று யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இருப்பினும், உங்கள் சந்தேகங்களை இந்தக் கண்ணோட்டத்தில் காணலாம். ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம், தான் இயங்கத் தயாராகும் போது, ராம் மெமரியில் தனக்கான இடத்தை எடுத்துக் கொள்ளும். இது போல பல புரோகிராம்கள் ராம் மெமரியில் இடம் எடுத்துத் தங்கி செயல்படும். அப்படியானால், அடுத்தடுத்து புரோகிராம்களை ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் இயக்கினால் என்னவாகும்? குறைவான மெமரி இருக்கையில், அதிக மெமரி தேவைப்படும் புரோகிராம் செயல்பாட்டிற்கு வந்தால், அந்த சிறிய மெமரி இடம் வீண் தானே என நீங்கள் எண்ணலாம். அப்படிப்பட்ட நேரத்தில், மெமரியில் இடம் இல்லை என்ற பிழைச் செய்தி நமக்குக் கிடைக்கும். அப்போது நாம் பயன்படுத்தாத, ஆனால், முன்னர் இயக்கி மூடிவிட்ட புரோகிராமினை மெமரியில் இருந்து நீக்க வேண்டும். தர்க்க ரீதியாகப் பார்த்தால், ஒரு புரோகிராமினை இயக்கி முடித்த பின்னர், அந்த புரோகிராம், தான் ராம் மெமரியில் கொண்டிருந்த இடத்தை விட்டு நகன்று, அந்த இடத்தினை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குக் கொடுக்க வேண்டும். அதுதான் முறை. ஆனால், அது இயங்கா நிலையிலும், ராம் மெமரி இடத்தினை விட்டுக் கொடுக்கவில்லை என்றால், அந்த நிலையினைத் தான் மெமரி லீக் எனக் கூறுகின்றனர். இதனால், சிஸ்டத்தின் செயல் திறன் மந்தமாகிறது. இது போன்ற நேரங்களில், சிஸ்டம் செயல்படுவது சற்று மந்தமாகுமே தவிர, சிஸ்டம் முடங்கிப் போகாது.

கேள்வி: பல ஜிபி அளவில் உள்ள பைலை அனுப்ப ஜிமெயிலை எப்படிப் பயன்படுத்துவது? அல்லது வேறு ஏதேனும் ஆன்லைன் வசதி உண்டா?
என். கோகிலா, திருப்பூர்.
பதில்: முதலாவதாக, கூகுள் தரும் வசதியைப் பார்ப்போம். ஜிமெயிலிலேயே அத்தகைய ஒரு சேவை உள்ளது. 'Attach files' என்னும் ஐகானை அடுத்து கூகுள் ட்ரைவ் ஐகான் என ஒன்று உண்டு. அதனைக் கிளிக் செய்து, 10 ஜிபி வரையில் பைல்களை அனுப்பலாம். பைல் அப்லோட் கிளிக் செய்து, பின்னர் பைலைத் தேர்ந்தெடுத்தால், அது ஜி ட்ரைவ் சர்வருக்கு ஏற்றப்படும். பின்னர் அதனை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின் அஞ்சல் முகவரியைத் தர வேண்டும். இவ்வாறு ட்ரைவ் மூலம் அனுப்பப்பட்ட பைல்கள், உங்கள் ஜிமெயில் ட்ரைவில் எப்போதும் இருக்கும். பின் ஒரு நாளிலும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பலாம். பைல்களை யார் யார் பெற வேண்டும் என அவர்களின் மின் அஞ்சல் முகவரியினைத் தந்தால், அவர்களுக்கு ஒரு மெயில் அனுப்பப்பட்டு, தகவல் தரப்படும்.
அடுத்ததாக, wetransfer.com என்னும் தளத்திற்குச் செல்லவும். இங்கு எந்தவிதமான அக்கவுண்ட்டும் தொடங்க வேண்டியதில்லை. நேராக பைலைஅனுப்பலாம். பெறுபவரின் மின் அஞ்சல் முகவரியினைக் கொடுத்து, அவருக்கான சிறிய அளவிலான செய்தியையும் கொடுத்து, 2 ஜிபி வரையிலான பைலைஅனுப்பலாம்.
மிகவும் பாதுகாப்பான முறையில் அனுப்ப உங்களுக்கு உதவுவது Dropsend. பாதுகாப்பான முறையில் சுருக்கப்பட்டு அனுப்பப்படுவதுடன், இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையும் கையாளப்படும். Dropbox மூலம், 2 ஜிபி வரையிலான பைலை அனுப்பலாம். அக்கவுண்ட் ஒன்று திறக்க வேண்டும். இதுவும் மேலே குறிப்பிட்ட பாதுகாப்பான முறைகளைக் கையாள்கிறது.
மைக்ரோசாப்ட் அனைவருக்கும் வழங்கும் Onedrive சாப்ட்வேர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, மொத்தம் 7 ஜிபி வரை இதில் சேமிக்கலாம். ஒவ்வொரு முறையும் அனுப்பும் பைலின் அளவு 2 ஜிபி தாண்டக் கூடாது. இதே போல் செயல்படும் இன்னொரு சேவை Amazon Cloud Drive. 5 ஜிபி வரையிலான டேட்டாவினை அனுப்பி சேவ் செய்து, குறிப்பிட்ட சிலருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X