தொழில்நுட்பம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
00:00

Email harvesting: டிஜிட்டல் உலகத்தில், ஏற்றுக் கொள்ளப்படாத தவறான செயல்பாடு. மின் அஞ்சல் முகவரிகளை மொத்தமாகத் திருடு வதற்கு ஒப்பானது. இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்குவதற்குப் பல வர்த்தகர்கள் உள்ளனர். பெரும்பாலும் ஸ்பாம் மெயில் களை அனுப்ப, இத்தகைய மின் அஞ்சல் பொதிகளைப் பயன்படுத்துவார்கள். போட்டி களை நடத்தும் இணைய தளங்கள், ஏதேனும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத் தினைக் கூறி மின் அஞ்சல் முகவரிகளைப் பெறும் இணைய தளங்கள், அந்த வகையில் தாங்கள் பெறும் மின் அஞ்சல் முகவரி களைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றனர்.

Firewall: நெட்வொர்க் (இன்டர் நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.

Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.

Hard Disk: (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக் கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவன மாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங் களில் பதிந்து வைப்பது நல்லது.

Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.

Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.

Web Browser: (வெப் பிரவுசர்) இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அடிப்படைத் தேவையான இயக்கத் தொகுப்பு எனலாம். இதன் வழியே இணையத்தில் உள்ள பக்கங்களைப் பெற்று பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ் புளோரர், பயர்பாக்ஸ், ஆப்பரா போன்ற பிரவுசர்கள் இன்று பிரபலமாய்ப் பயன் படுத்தப்படுகின்றன.

Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.

Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.

Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X