விண்டோஸ் எக்ஸ் பி சிஸ்டத்திற்கு சீனாவில் பாதுகாப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்குத் தந்து வந்த பாதுகாப்பு சப்போர்ட் பைல்கள் தயாரித்து வழங்கும் வேலையைநிறுத்திக் கொண்டது. சீனாவில் பல கோடிப் பேர் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துவதாகவும், எனவே தொடர்ந்துபாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்ட சீன அரசின் வேண்டுகோளை, மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே, சீனாவில் கம்ப்யூட்டர்களுக்கான பாதுகாப்பு தரும் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் கிடிடணிணி 360 நிறுவனம், எக்ஸ்பி சிஸ்டத்திற்கான பாதுகாப்பு தரும் "XP Shield” என்னும் புரோகிராமினை உருவாக்கி, இலவசமாக சீனாவில் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்குபவர்களுக்கு வழங்கி வருகிறது. இதுவரை அங்கு 20 கோடி பேர் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த புரோகிராமினைத் தயாரிக்க மிகப் பெரும் முயற்சிகளை எடுத்ததாக, இந்நிறுவனத்தின் வல்லுநர் Sun Xiaojun அறிவித்துள்ளார். ஏற்கனவே, இந்நிறுவனத்தின் பாதுகாப்பு புரோகிராம்களை, சீனாவில் மட்டும் 47 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். பிப்ரவரி மாதமே இந்த பாதுகாப்பு புரோகிராம் பயன்படுத்தி வழங்கப்பட்டு வந்ததால், சீனாவில் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கையையும் அறிவிப்பினையும் சிறிது கூடப் பொருட்படுத்தவில்லை.
சீனாவில், எக்ஸ்பி பயன்பாடு மிகவும் அதிகம். தற்போது அங்கு இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், 70 சதவீத கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பி சிஸ்டமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில், கட்டணம் எதுவும் செலுத்தாமல், நகல் எடுத்துப் பயன்படுத்துபவர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
சீன நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து, தங்கள் மக்களிடம் எக்ஸ்பி குறித்து சர்வே ஒன்றை எடுத்தனர். அதில், பெரும்பான்மையானவர்கள், தாங்கள் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து மாறப் போவதில்லை எனத் தெரிவித்தனர். இதற்குக் காரணம், அவர்கள் யாரும் புதிய ஹார்ட்வேர் சாதனங்களை இதற்கென வாங்கவும், அதற்கென செலவழிக்கவும் தயாராய் இல்லை. இதனை உணர்ந்தே, Qihoo 360 நிறுவனம், எக்ஸ்பிக்கு தொடர்ந்து பாதுகாப்பு தரும் புரோகிராமினை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டது.
சீனாவில் வைரஸுக்கு எதிராகப் புரோகிராம்களைத் தயாரிக்கும் Tencent மற்றும் Kingsoft ஆகிய நிறுவனங்களும் இதே போன்ற பாதுகாப்பு தரும் புரோகிராம்களைத் தயாரித்தன. இந்த மூன்று நிறுவனங்களின் புரோகிராம்களை, ஹேக்கர்கள் கொண்டு இயக்கிப் பார்த்ததில், Qihoo 360 நிறுவனம் தயாரித்தது தான் முழுமையான பாதுகாப்பினைக் கொடுத்தது. எனவே, அதுவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாகத் தரப்பட்டது.
ஆனால், தொடர்ந்து இந்த புரோகிராம் பாதுகாப்பினைத் தருமா என்பது கேள்விக்குரியதாகும். மைக்ரோசாப்ட் இனி விண்டோஸ் 7 மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான பேட்ச் பைல்களைத் தொடர்ந்து அளிக்கும். அவ்வாறு அளிக்கும்போது, புதிய வலுவிழந்த குறியீடுகள் இருப்பது ஹேக்கர்களுக்குத் தெரிய வரும். அவர்கள், எக்ஸ்பியில் இது உள்ளதா என அறிந்து, அவற்றைத் தங்கள் கெடுதல் விளைவிக்கும் செயல்பாட்டிற்கு பயன்படுத்தத் தொடங்குவார்கள். அவர்களின் முயற்சிகளை சீன நிறுவனத்தால் முறியடிக்க முடியுமா என்பதே கேள்விக்குறி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X