இந்த வார இணையதளம் கதை கேளு கதை கேளு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
00:00

ஒருவருக்கொருவர் கதை சொல்லி மகிழ்வது என்பது மனித இனப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், பரம்பரை பரம் பரையாக ஊறிப்போன ஒரு விஷயமாகும். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், உறங்கச் செய்வதும் நமக்குக் கை வந்த கலை. எழுத்து வடிவம், அச்சு வருவதற்கு முன்னாலேயே, கதை சொல்லி வந்தனர் நம் மக்கள். கதை சொல்லி வந்ததில்தான், நம் முன்னோர்களின் சரித்திரம் வாய்மொழி பதிவாக இருந்து வந்ததாக, ஆய்வாளர்கள் கூறுவார்கள்.
கதை சொல்லும் ஆர்வம் உள்ளவர்களுக்காகவும், கதைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்காகவும், இணையத்தில் http://www.shareastory.org/about என்ற முகவரியில் ஒரு தளம் இயங்குகிறது.
இந்த தளத்தில், About பக்கத்தில், இத்தளத்தின் நோக்கங்கள் என்ன என்பது குறித்து விளக்கம் காணப்படுகிறது. இவை தவிர, தளப் பக்கத்தில் Home, Stories, Contribute என்ற டேப்கள் தரப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் (Home) அன்றைய கதை கிடைக்கும். சில வேளைகளில் கதைகள் இரண்டு பகுதிகளாக இங்கே இடம் பெறும். அப்போது, முதல் பகுதிக்கான லிங்க் அங்கே தரப்படும்.
மற்ற கதைகளுக்கு Stories டேப் அழுத்திச் செல்லலாம். இங்கு நாடுகள் வாரியாக, கதை வகைகளின் அடிப்படையில், கதைகள் தரப்பட்டுள்ளன. அனைத்தும் எளிமையான ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
உங்களுடைய கதையை நீங்கள் இங்கு பதிக்க வேண்டும் என்றால், Submit a Story என்ற பட்டனை அழுத்தி, கதைகள் அனுப்புவதற்கான வரையறைகளைக் காணலாம். எடுத்துக்காட்டாக, கதை ஒன்று, 1000 முதல் 1,400 சொற்களுக்குள்ளாகவே இருக்க வேண்டும். மேலும் இங்கு வரும் கதைகளைத் திருத்தி அமைக்கும் பணியினை, தன்னார்வ அடிப்படையில் நீங்கள் செய்து கொடுக்கலாம்.
இந்த தளம் சென்று பாருங்கள். உங்கள் கதை கேட்கும் ஆர்வமும், சொல்லும் ஆர்வமும் வளம் பெறும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X