சீன பயணிகள் விமானத்தில் வை-பி சேவை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
00:00

ஏர் சைனா என்ற சீன அரசின் விமானத்தில் இனி பயணம் செய்வோர், விமானத்தின் உள்ளாகவே, வை-பி சேவை யினைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெறலாம். விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்வரை இந்த வசதி கிடைக்கும் எனப் பல சோதனைகளுக்குப் பின்னர், ஏர் சைனா நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில், சென்ற ஏப்ரல் 16 அன்று, தன் விமானத்தில் பயணித்தவர்களுக்கு, சோதனை முயற்சியாக இந்த சேவையை வழங்கியது. அப்போது, பயணிகள், தங்கள் சொந்த கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெற்றனர். விமானத்தின் கேபினில் உள்ள சாதனத்துடன் வை-பி இணைப்பினைப் பெற்று, பின் அதன் வழியாகத் தங்கள் சாதனங்கள் மூலம் இணைய இணைப்பினைப் பயணிகள் பெற்றனர். இணைய தேடல், ஆன்லைன் மெசேஜ், ஆன்லைன் வீடியோ, வீடியோ அழைப்புகள் மற்றும் மின் அஞ்சல்கள் பயன்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மொபைல் போன் வழி இணைய இணைப்பிற்கு அனுமதி தரப்படவில்லை. அத்துடன், விமானம் பயணிக்கத் தொடங்கும்போது, இணைய வசதிக்கு அனுமதி தரப்படவில்லை.
விநாடிக்கு 30 மெகா பைட்ஸ் டேட்டா பரிமாற்றத்தினை இந்த விமானப் பயணத்தின் போது மேற்கொள்ள முடிந்ததாக, பயணிகள் தெரிவித்தனர். இந்த சேவையினை இன்னும் பல விமானப் பயணங்களில் மேற்கொள்ள இருப்பதாக, இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இலவசமாகவே இந்த சேவை வழங்கப்படுகிறது.
இந்த வை-பி சேவை, தரை தொலை தொடர்பு மையத்துடன் 4ஜி அலைவரிசையில் இயங்கும் Airto Ground என்னும் நெட்வொர்க் மூலமாக வழங்கப்படுகிறது. ZTE கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த நெட்வொர்க் இணைப்பினை வழங்குகிறது. ZTE கார்ப்பரேஷன் இதற்கென, கோகோ (Gogo) நிறுவனத்தின் துணைப் பிரிவான ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுகிறது.
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில் இயங்கும் லுப்தான்ஸா ஏர்லைன்ஸ், பல ஆண்டுகளாகவே, இந்த இணைய சேவையினைத் தன் விமானங்களில் பயணிப்பவர்களுக்குக் கட்டணம் பெற்றுக் கொண்டு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X