பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
00:00

கூகுள் மெயில் ஷார்ட்கட் கீகள் அனைத்தும் விளக்கமாகத் தந்துள்ளது மிக அருமை. பல புதியதாக இருந்தன. இவற்றை இயக்க முதலில் செட்டிங்ஸ் அமைப்பது குறித்தும் நீங்கள் விளக்கி இருக்கலாம். என் நண்பர் எனக்கு வழி காட்டிய பின்னரே, இது எனக்குப் புரிந்தது.
இல. சிதம்பரம், சென்னை.

ஹார்ட் ப்ளீட் வைரஸ் குறித்த எச்சரிக்கை, என்னைப் போன்ற டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்குமா? என்பது சரியாக விளக்கப்படவில்லை என்று கருதுகிறேன். இருப்பினும், எச்சரிக்கையாக இருக்க, அனைத்து பாஸ்வேர்ட்களையும் மாற்றிவிட்டேன். இனியும் மாற்றிக் கொள்வேன்.
செ. கஜேந்திரன், விழுப்புரம்.

ஹார்ட் ப்ளீட் வைரஸ் பாதிப்பு தொழில் நுட்ப ரீதியாக மிகவும் ஆபத்தானது என்று தெரிகிறது. இது குறித்து எழுதப்பட்ட கட்டுரை, இணைய தொழில் நுட்பம் குறித்தும் தகவல்களைத் தருவதாக அமைந்துள்ளது. நன்றி.
ஏ.அரவிந்த் மகராஜன், ஹோசூர்.

நாம் இணையம் பயன்படுத்தும் போது தரும் தகவல்கள், எப்படியும் அந்த சேவையைத் தரும் சர்வர்களில் தங்கும். இவற்றை அந்த சர்வர்களை இயக்குபவர்கள் பார்க்கத்தான் செய்வார்கள். வர்த்தக ரீதியாக, மற்றவர்களுக்கு அவற்றை விற்பனை செய்திடாமல் இருந்தால் அதுவே போதும். எனவே, மைக்ரோசாப்ட் அடிபணிந்ததாக வரும் தகவல்கள் எல்லாம், நம்மை ஏமாற்றும் இன்னொரு வழிதான்.
டி.அருண்குமார், சென்னை.

கட்டணம் செலுத்தி வாங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஆக்டிவேஷன் கீயினை நாம் தொலைத்துவிடும் நிலையில், நம்மிடம் பணம் வாங்கும் நிறுவனம் அதனை மீண்டும் தருவதற்கான வழிகளைக் கொண்டிருக்க வேண்டும். மொபைல் போன் வாங்கும் பில்லில், அட்டைப் பெட்டியில், அதற்கான தனி அடையாள எண் இருப்பது போல இதுவும் இருக்க வேண்டும்.
கா. நரேந்திரன், காரைக்குடி.

காசு கொடுத்து ஓ.எஸ். வாங்கிவிட்டு, செயலாக்க கீக்காக மீண்டும் பணம் செலுத்தும் நிலை என்பது மிகவும் மோசமான ஒன்றாகும். இதற்கு அதனை வழங்கிய நிறுவனம் ஏதேனும் மாற்றி வழி தர வேண்டும்.
நா. உதயன், கோவை.

நாம் எல்லாரும் குப்பையாக பைல்களை டெஸ்க்டாப்பில் வைப்பதை, வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். தங்களுடைய டெஸ்க்டாப் குறித்த டிப்ஸ், அவ்வாறு தொடர்ந்து அமைப்பதில் உள்ள பிரச்னைகளைக் கூறியுள்ளது நல்ல எச்சரிக்கையாகும். தங்கள் அறிவுரைப்படி, நான் பைல்களை இனி டெஸ்க் டாப்பில் வெகு நாட்கள் தங்கவிட மாட்டேன்.
எஸ். சூர்யா, திருப்பூர்.

பிரச்னைகள் ஏதும் இல்லாமல் இணைய இணைப்பு கிடைத்தால் தான், நமக்கு அந்த அனுபவம் இனிக்கும். பிரச்னைகள் இருந்தால் எரிச்சலே மிச்சம். ஆனாலும், பொறுமையாக, அது தரும் எச்சரிக்கைகள் குறித்து நல்ல விளக்கத்தினை தெளிவாகத் தந்துள்ளது, உதவியாக உள்ளது. நன்றி.
கே.சி. மாணிக்கம், மரக்காணம்.

கம்ப்யூட்டர் மானிட்டரை சொல்யூசன் போட்டுத்தான் சுத்தம் செய்து கொண்டிருந்தேன். நீங்கள் தந்த குறிப்பு என்னை விழித்துக் கொள்ள வைத்தது. எவ்வளவு பெரிய தவறைச் செய்து கொண்டிருந்தேன். அறிவுரைக்கு நன்றி.
என். கல்யாண சுந்தரம், விருதுநகர்.

டாஸ்க்பார் மற்றும் டூல் பார் டிப்ஸுடன் இணைந்து டூயல் பூட் பற்றிய குறிப்பினைப் படித்து, சற்று குழப்பிக் கொண்டேன். இது தனிக் குறிப்பு என பின்னர் புரிந்து கொண்டேன். சற்றுப் பெரிய தலைப்பாகப் போடக் கூடாதா?
ஆர். மனோஹர், சிவகாசி.

எனக்கும் பயர்பாக்ஸ் புக்மார்க்ஸ் அடிக்கடி பிரச்னை தந்து வந்தது. கேள்வி பதில் பகுதியில் தங்கள் விளக்கத்தினைப் படித்த பின்னரே, சிக்கல் எங்கு உருவாகிறது என்று தெரிந்து கொண்டேன். நன்றி.
எஸ். பழனிசாமி, போடி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X