பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 மே
2014
00:00

மவுஸ் பாய்ண்ட்டர் மாற்றுவது குறித்த தகவல், ஷார்ப்பாகவும், பயன் தரும் வகையிலும் உள்ளது. நன்றி.
டி. தமிழ்மணி, சிவகாசி.

கதை கேளு தளம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கதைகளில் அவ்வளவு சிறப்பு இல்லை. நாம் தமிழில் நிறைய கதைகளை, குறிப்பாக சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்டு தளம் அமைக்கலாம். அதுபோல ஏதாவது தளம் இருந்தால் சொல்லுங்களேன்.
எஸ். சத்தியபாமா, சென்னை.

மெமரி ஸ்டோரேஜ் குறித்த தகவல்களுடன் நீங்கள் தந்துள்ள படங்கள் பொருத்தமானவை யாகவும், பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன. இதில் கூட நீங்கள் செலுத்தும் கவனத்திற்கு அநேக நமஸ்காரங்களும், நன்றியும்.
பேரா . எஸ். ஷண்முகநாதன், திருச்சி.

பேஸ்புக் பயன்படுத்துவது ஒரு சிலருக்கு போதையாகவே மாறிவிட்டது. நம் நண்பர்கள் என்ன சொல்லி இருப்பார்களோ என்ற ஆவல், பதைபதைப்பு பேஸ்புக் பயன்படுத்துபவர்களிடம் உள்ளது. இதனை அதிகம் நீங்கள் உங்கள் கட்டுரையில் கூறவில்லை. மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் எல்லாம் சரி தான்.
எஸ். சந்தான கிருஷ்ணன், திருச்சி.

பேஸ்புக் நம்மை நன்கு புரிந்திருக்கிறது. அதனாலேயே நாம் அதன் பயனாளர்களாக மாறி அதிகம் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் தங்கள் நட்பினைப் புதுப்பித்தவர்கள் பலர் உள்ளனர். உதவி பெற்றவர்கள் பலர் இதனை உறுதி செய்துள்ளனர். எனவே ""இரண்டறக் கலந்த பேஸ்புக்'' என்ற தலைப்பு சரியான தலைப்பு.
கே. அரிதாசன், சென்னை.

வை-பி போல பலர் ஒரே நேரத்தில் நம் சாதனங்களை சார்ஜ் செய்திடலாமா? கேட்கவே இனிக்கும் தகவல் இது. விரைவில் இந்த சாதனம் நாம் வாங்கும் வகையில் கிடைக்கட்டும்.
கோ.மல்லிகா, கோவை.

லேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க என்ற தலைப்பில் நீங்கள் கொடுத்துள்ள டிப்ஸ்கள் அனைத்தும், இன்றைய மாணவர்களுக்கு அதிகம் பயன் தரும். நன்றி.
பேரா. சி. மனோகரன், மதுரை.

இணைய வெளியில் தான் இன்றைய உலகமே இயங்கி வருகிறது என்ற உண்மையை நீங்கள் தந்துள்ள பல்வேறு தகவல்கள் உறுதிப் படுத்துகின்றன. நீங்கள் காட்டியுள்ள படத்தில், நாம் அறியாத சில விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். நன்றி.
கா. அபுபக்கர், போடி.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நிறைய பிரச்னைகள், புதுமைகள் தெளிவாகமலேயே உள்ளன. வாரந்தோறும் இந்த சிஸ்டம் குறித்த டிப்ஸ்களை எதிர்பார்க்கிறோம்.
என். உமா மகேஸ்வரி, திருப்பூர்.

நோட்டிபிகேஷன் ஏரியா குறித்த தகவல்கள் மிகத் தெளிவாக இருந்தன. இதுவரை தவறாக எண்ணியிருந்ததனை மாற்றிக் கொண்டு, தேவையற்ற ஐகானயும், புரோகிராம்களையும் நிறுத்திவிட்டேன். ஆசிரியருக்கு நன்றி.
இரா. திருச்செல்வன், விருதுநகர்.

வாட்ஸ் அப் உலகை வளைத்துப் போட்டு, இந்த புவியின் குடி மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் பாலத்தை அமைத்து சேவை புரிகிறது. நிச்சயம் அதன் செயல்பாட்டுக்கு எந்த குந்தகமும் ஏற்படாது. நட்பு பாராட்டும் நல்ல மக்கள் இதனால் உருவாவார்கள் என்பது உறுதி.
எஸ். தீர்த்தனன், திருப்பதி.

மொபைல் போன்களுக்கிடையே, குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் மத்தியில் நடக்கும் விற்பனைப் போட்டி, நம்மைப் போன்ற மக்களுக்கு நல்லதே. இந்த தகவல்களை அவ்வப்போது எங்களுக்குத் தந்து கொண்டே இருக்கவும்.
எஸ். ஸ்ரீனிவாசன், விழுப்புரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X