சேனலுக்குச் சிக்காத ரஜினி | கல்கி | Kalki | tamil weekly supplements
சேனலுக்குச் சிக்காத ரஜினி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2014
00:00

* ரஜினி பத்திரிகை, டி.வி.க்களுக்குப் பேட்டி அளிப்பதைத் தவிர்த்து வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயா டி.வி.யில் தம் மகள் சௌந்தர்யாவுக்காக "கோச்சடையான' பற்றியும் அதில் தான் நடித்த அனுபவங்கள் குறித்தும் பேட்டி அளித்தார். அதன் பிறகு சில சேனல்கள் அவர் பேட்டிக்காக கொக்கிப்போட்டால் சிக்கமாட்டேன் என்கிறாராம் ரஜினி.

* வட்டாரம் சார்ந்த உணவு வகைகளை நேயர்களை வைத்தே சமைக்கச் செய்து அவர்களில் சிறந்தவர்களை தமிழகத்தின் சமையல் சக்ரவர்த்தியாகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி "நம்ம ஊரு நம்ம ருசி'. சனி, ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

* கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி பெப்பர்ஸ் டி.வி.யில் "படித்ததில் பிடித்தது' என்ற தலைப்பில் வருகிறது. 100வது வாரங்களைக் கடந்து செல்லும் இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் தான் படித்த புத்தகத்தின் அனுபவங்களைப் பகிர்கிறார்.

* மூன்று குடும்பங்களுக்குள் நட்கும் மர்மமான விஷயங்களைக் காட்சிப்படுத்தி விறுவிறுப்புடன் போய்க் கொண்டிருக்கிறது "கருத்தம்மா' நாயகி மகேஸ்வரி நடிக்கும் "அதே கண்கள்' தொடர். கதையில் பல டுவிட்ஸ்டுகளை வைத்த ஆயிரம் எபிசோட்கள் வரை கொண்டுபோகச் சொல்லியிருக்கிறதாம் ஜெயா டி.வி. நிர்வாகம்.

* தமிழகத்தில் இருக்கும் பிரபலமான இடங்களைக் காட்சிப்படுத்துகிறது "ஊர் சுற்றலாம் வாங்க' நிகழ்ச்சி. திரையரங்குகள், உணவு விடுதிகள், நகைக்கடைகள், உள்விளையாட்டு மைதானம் என அத்தனை சுற்றுலாத் தலங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறது. ஞாயிறுதோறும் மக்கள் டி.வி.யில் இடம் பெறுகிறது.

* புதுயுகம் டி.வி.யில் "நாயன்மார்கள்' மெகா தொடரில் இந்த வாரம் கிராபிக்ஸ் கலக்கலுடன் எறிபத்த நாயனார் கதை தொடங்கியுள்ளது. தினமும் மாலை 6.00 மணிக்குக் காணலாம்.

* கதை சொல்வது என்பதே ஒரு கலைதான். நமக்குத் தெரிந்த விஷயங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் ஒரு சிறந்த வழி கதையாகச் சொல்லுதல். அதற்கு குழந்தைகள் சுவாரசியமாகக் கதைகளைக் கேட்டு மகிழும் வகையில் "கதாலோகம்' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது ஸ்ரீ சங்கரா டி.வி. இந்நிகழ்ச்சி சனிக்கிழமை ஒளிபரப்பாகிறது.

- ராஜிதம்பி

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X