மருதூர் அணையில் நீர் எடுக்காதே! - விவசாயிகள் கோரிக்கை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2014
00:00

"விவசாயத்துக்கான தண்ணீரை அரசுத்துறை அதிகாரிகள் தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக விற்பதால் விவசாயம் முடங்கிப்போனது. எங்கள் வாழ்வு வறண்டு போனது' என்று புன்னக்காயல் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தாமிரபரணி ற்றின் மருதூர் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 9.70 கோடி லிட்டர் தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கக்கோரி விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் பொதிகை மலையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறுதான் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயத்தின் ஆணிவேராகவும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் அமுதசுரபியாகவும் இருந்து வருகிறது.
தாமிரபரணியின் குறுக்கே மொத்தமுள்ள எட்டு அணைக்கட்டுகளில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன.
"ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலமான 1934ம் ஆண்டு மருதூர் அணை அதிகளவு தண்ணீரைச் சேமித்து வைக்கும் வகையில் புதிய வடிவில் மேம்படுத்தப்பட்டது. இதன் பின்பு 80 ஆண்டுகள் கடந்தும் அணையில் பெயரளவுக்குக்கூட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் 12 அடி ஆழம் கொண்ட அணை மணல் மேடாகித் தற்போது 3 அடி தண்ணீரைத் தேக்குவதுகூட அரிதாகிவிட்டது' என்கிறார் நயினார்குலசேகரன். இவர் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்புப் பேரவையின் அமைப்பாளர்.
"நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் மழையளவால் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி பாதிக்கப்படுவது தொடர்கிறது.
குளங்கள் அணைகளில் தண்ணீரைத் தேக்கி வைக்க வழியில்லாமல் பேய்விட்டதால், விவசாய நிலங்கள் பாசனத்துக்குத் தேவையான போதிய நீர்வரத்து இன்றி தரிசு நிலங்களாக மாறிவருகின்றன. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சியின் 4வது பைப்லைன திட்டத்துக்கு மருதூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் எடுக்கத் திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினர், மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வடிகால்துறை அதிகாரிகள் ஆகியோர் மருதூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் "அணையில் போதிய ஆழம் இல்லாதது, மணலுடன், சகதி நிறைந்து கிடப்பது போன்ற காரணங்களால் 4வது பைப்லைன் திட்டத்துக்குத் தண்ணீர் எடுக்க வாய்ப்பில்லை' என்று ஆய்வுக்குழு கருத்துத் தெரிவித்தது.
இருந்தபோதும், மாநகராட்சி நிர்வாகம் மருதூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் கொள்கையில் இருந்து மாறவே இல்லை. பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு இதற்குச் சாத்தியமில்லை என்று கூறி மறுத்தபோதும் மாநகராட்சி தமது ஆட்சி அதிகார பலத்தால் இத்திட்டத்துக்கு அனுமதியைப் பெற்றுவிட்டது. இந்த அனுமதியின்படி மருதூர் அணையின் உட்பகுதியில் 300 மீட்டருக்கு அப்பால் தண்ணீர் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்தினால் வரும் காலங்களில் மருதூர் அணையில் தண்ணீரைப் பார்ப்பது அரிதாகிவிடும். இதனால் தாமிரபரணி பாசனத்தை நம்பியுள்ள 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களும் தண்ணீர் கிடைக்காமல் தரிசாகிவிடும். ஆதலால், இத்திட்டத்துக்குத் தடைவிதிக்கவேண்டும் என்று நாங்கள் கேட்டும் எந்தப் பயனும் இதுவரை கிட்டவில்லை. அதனால் நீதி கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தடையாணை கேட்டு வழக்கு தொடர்ந்தோம். வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் 4வது பைப்லைன் திட்டத்துக்கான குழாய் பதிக்கு பணிகள் முடிவடையும் தருவாயை எட்டி வருகின்றன.
இப்பணிகளைத் தடுத்திடும் வகையில் நாங்கள் சாலைமறியல், சாகும்வரை உண்ணாவிரதம், மருதூர் அணைக்கட்டு முற்றுகை எனப் பல்வேறு கட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
மழைக்காலத்தில் விவசாயத்துக்கும், கோடை காலத்தில் குடிநீருக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுவது வழக்கத்தில் இருக்கிறது.
ஏனெனில், தாமிரபரணி ஆற்றில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு குளிப்பதற்கு, ஏன் குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைப்பதில்லை. பெரும்பாலும் கோடை காலத்தில் தாமிரபரணியில் அணை நீருக்குப் பதிலாக, ஆற்றோரமுள்ள தொழிற்சாலைகள், நகர, கிராமங்களின் சாக்கடை கழிவுநீர்தான் அளவுக்கு அதிகமான அளவில் கலந்து தண்ணீர் மாசுபட்டு வரும்.
இப்படி மாசுபட்ட தண்ணீர் ஆற்றுமணலால் ஓரளவுக்கு பில்டராகி மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. இந்தத் தண்ணீர் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதிகளுக்கு வந்து சேருவதே அபூர்வம்தான். நிலைமை இப்படி இருக்க மருதூர் அணையில் இருந்து கோடைக்காலத்தில் நாள் ஒன்றுக்கு தூத்துக்குடி மாநகராட்சிக்கு 9.70 கோடி லிட்டர் தண்ணீர் எடுப்பதற்குச் சாத்தியமில்லை.
சாத்தியமில்லை என்றபோதும் மாநகராட்சி வீம்புடன் மக்களின் வரிப்பணம் ரூ 283 கோடியை வீணாக விதைப்பதையும், விவசாயிகளின் வாழ்வோடு விளையாடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. சுமார் 3 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதில் நியாயமில்லை. அரசு இதனைப் புரிந்து கொண்டு மாற்றுத்திட்டத்தைச் செயல்படுத்தினால்தான் விவசாயிகள் நிம்மதி அடைவார்கள்' என்று முடித்துக் கொண்டார் நயினார்குலசேகரன்.

- எம். பார்த்தீபன் சங்கர்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X