பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மே
2014
00:00

டேட்டா நெவர் ஸ்லீப்ஸ் (Data Never Sleeps) என்பது மிகச் சரியான தலைப்பு. ஒரு நிமிடத்தில் இணைய வெளியில் நடப்பது குறித்து நீங்கள் வெளியிட்ட படம் கருத்துள்ள படமாகும். அதில் கூறியது போல, உலகெங்கும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டும் இருக்கின்றன. இது பிரமிப்பினையே ஏற்படுத்து கிறது. இந்த தகவல் வெள்ளத்தில் நாம் இணையவில்லை என்றால், நிச்சயம் வாழ்க்கையின் பெரும் பகுதியை இழந்துவிடுவோம்.
டாக்டர் எஸ். பரமேஸ்வரன், கோவை.

வயர்லெஸ் ரீ சார்ஜ் போல இன்னும் பல புதுமைகள் நமக்கு நிச்சயம் கிடைக்கும். அறிவியல் நம் வாழ்வினை வசதிப்படுத்தும். நல்ல தகவலை, தெளிவாகப் படத்துடன் தந்த ஆசிரியருக்கு நன்றி.
எஸ். சிவ சுப்பிரமணியன், மதுரை.

""இணைத்த நோக்கியா இளைத்தது ஏன்?'' என்ற அருமையான கவித்துமான தலைப்பில், நிறுவனம் ஒன்று எப்படி செயல்படக் கூடாது என்பதற்கான தகவல்களை மிகத் தெளிவாகத் தந்திருக்கிறீர்கள். வாடிக்கையாளர்களே வர்த்தகத்தின் மையம் என்பதை நோக்கியா உணரவில்லை என்ற உண்மையை நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். எழுதியவருக்கு பாராட்டுகள்.
பேரா. டாக்டர் என். தேவசகாயம், கோவை.

நோக்கியா குறித்த கட்டுரையில், இனி அதன் புகழை மைக்ரோசாப்ட் மீட்டெடுக்க என்ன செய்திட வேண்டும் என்பதனையும் சுட்டிக் காட்டியிருக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் படித்து உணரக் கூடியவை.
எஸ். சாய்ராமன், திருநகர், மதுரை.

புரோகிராமினை ஜஸ்ட் லைக் தட் மாற்றலாம் என்று இருந்த என்னைப் போன்றவர்களுக்கு பாடம் சொல்லுவது போல விஷயங்களை விளக்கமாகக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
கா. பாண்டியன், விருதுநகர்.

திடீரென மால்வேர் அல்லது வைரஸ்கள் அல்லது பிழைக் குறியீடுகள் கண்டறிவது இணைய உலகில் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தகவல்கள் வரும்போது, நமக்கு அச்சமே ஏற்படுகிறது. எங்கே வங்கியில் உள்ள பணம் போய்விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. தகவல்களைத் தந்து எச்சரிக்கும் உங்களுக்கு நன்றி.
எஸ். ராஜ்குமார், திருப்பூர்.

ட்ரீ சைஸ் இலவச புரோகிராம் பயன்படுத்திப் பார்த்தேன். புதிய முறையில், எளிய வழிகளில் நமக்கு ஹார்ட் டிஸ்க் குறித்த அனைத்து தகவல்களையும் தருகிறது. தகவலுக்கு நன்றி.
கே.ஆர். சிவரஞ்சனி, சேலம்.

நினைத்தவுடன் தகவல்களைப் பதிந்து வைத்திட ஸ்டிக்கி நோட்ஸ் டெஸ்க்டாப்பில் சரியான இடம் தருகிறது. இதனை அமைப்பதும், நீக்குவதும் மிக எளிதாக உள்ளது.
என். ஸ்ரீலேகா நாராயணன், திண்டுக்கல்.

மொபைல் போன் விரிவாக்கத்தில், வாடிக்கை யாளர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, டவர்களை அமைத்து அனைத்து இடங்களையும் இணைக்கின்ற வகையில் இணைப்புகள் இயங்க வேண்டும். மொபைல் போன் எண்ணிக்கை வளர்வதற்கு ஈடாக டவர்களும் பெருக வேண்டும்.
டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை.

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கண்களைப் பாதுகாப்பதில் கோட்டை விடுகின்றனர். இதனைச் சரியாகச் சுட்டிக் காட்டி, அதற்கான வழிகளையும் தந்தது பயனுள்ள தகவல்.
செ.இளமதி, தஞ்சாவூர்.

விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை வேறு சிஸ்டத்திற்கு மாற்ற இயலாதவர்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் பயம் கம்ப்யூட்டர் மலரில் வாசகர்கள் பலர் கேட்கும் கேள்விகளில் இருந்து தெரிகிறது. தொடர்ந்து எச்சரிக்கை மற்றும் வழி காட்டும் குறிப்புகளை வெளியிடவும்.
என். நேசமணி, கிருஷ்ணகிரி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X