நோக்கியா சென்னை தொழிற்சாலை மூடப்படும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 மே
2014
00:00

கோடிக்கணக்கான எண்ணிக்கையில் மொபைல் போன்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் நோக்கியாவின் தொழிற்சாலை மூடப்படும் நிலையை அடைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களில் 85 சதவீதம் பேர், தன் விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவித்து எழுதிக் கொடுத்துள்ளனர்.
ரூ.3,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, சென்னை உயர்நீதி மன்றம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பல பிரச்னைகளை இந்த தொழிற்சாலை சந்தித்தது. பல ஊழியர்கள் காலவரையற்ற விடுமுறையில் சென்றனர். தொழிற்சாலையில் போன் தயாரிக்கப்படுவது ஏறத்தாழ நின்றுவிட்டது. மொத்த தொழிற்சாலை கட்டமைப்பும் தள்ளாடத் தொடங்கியது. தொழிலாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். நிர்வாகத்தில் இருந்தவர்களும் எதை நோக்கி செல்வது என அறியாமல் இருந்தனர். இதில் நீதிமன்றத்தில் வழக்கினைச் சந்திப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. நோக்கியா நிர்வாகம் தன் அனைத்து ஊழியர்களுக்கும் தானாக முன்வந்து பணி ஓய்வு பெறும் திட்டத்தினை வழங்கியபோது, ஏறத்தாழ 5,000 முதல் 7,500 தொழிலாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.
2006 ஆம் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை இயங்கத் தொடங்கியது. அண்மையில் வெளியான ஆஷா வரிசை போன்கள் உட்பட, அனைத்து மாடல் போன்களும் இங்கு தயார் செய்யப்பட்டன. இங்கு தயாராகும் அனைத்தும், இங்கிருந்து ஏற்றுமதி மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற ஒப்பந்தக் கட்டுப்பாட்டினை மீறி, நோக்கியா உள்நாட்டில் தன் போன்களை விற்பனை செய்ததாக அரசு குற்றம் சாட்டியது. இதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து இயங்கியதால், பிரச்னை பெரிய அளவில் சென்றது.
இந்த பிரச்னை, நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்குவதில் தாமதத்தையோ, சிக்கலையோ ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இறுதியில் சென்ற ஏப்ரல் 24ல், முழுமையாக தொழிற்சாலை மைக்ரோசாப்ட் வசம் சென்றது. தற்போதைக்கு, அதனை நெடுங்கால குத்தகை அடிப்படையில், மைக்ரோசாப்ட் ஏற்றுள்ளது. வியட்நாம் நாட்டில், மிகப் பெரிய அளவில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து இயக்குவதால், நோக்கியாவிற்கு, சென்னை தொழிற்சாலை மூடப்படுவது பாதிப்பினை உண்டாக் காது.
சென்னை ஏற்றுமதி வளாகச் சலுகைகளுக்கான காலம் முடிந்த பின்னர், நோக்கியா இந்த தொழிற்சாலையில் அதிக கவனம் செலுத்தவில்லை. தற்போது இதில் இருந்து விலக்கப்படும் தொழிலாளர்களுக்கு, நோக்கியா வழங்கும் கொடைகள் நல்லவிதமாக இருப்பதால், தொழிலாளிகள் அவற்றை ஏற்றுக் கொண்டு விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Ramamoorthy - Chennai,இந்தியா
26-மே-201421:45:54 IST Report Abuse
Ramesh Ramamoorthy சாம்சுங் வரட்டும்...ஜப்பானியர்களையும், தென் கொரியர்களையும் நட்பு மேம்படுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X