பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 மே
2014
00:00

ஜங்க் போல்டர் குறித்த தங்களின் பதில்,இந்த விஷயத்தில் குழப்பம் கொண்டிருந்த எங்களுக்கு தெளிவை ஏற்படுத்தியது.
ஆர். பொன்குமார், முசிறி.

ஒரு காலத்தில் கம்ப்யூட்டரை நம் விருப்பப்படி இயக்க நமக்குத் துணை புரிந்த, புரோகிராமர் நான் என்று பெருமைப்பட்டுக் கொள்ள துணையாக இருந்தது பேசிக் புரோகிராமிங் மொழி. தற்போது 45 வயதை அடைந்திருக்கும் கம்ப்யூட்டர் பயனாளர்கள் நிச்சயம் தங்கள் கட்டுரையைப் படித்து என்னைப் போல் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். நன்றி.
ஆர். சிவக்குமார், சிதம்பரம்.

ரௌட்டர் செயல்பாடு குறித்த தெளிவான கட்டுரை பயனுள்ள தகவல்களை ஒரு பாடப் புத்தகம் போல படங்களுடன் தந்துள்ளது. எழுதிய தங்கள் ஆசிரியருக்கு நன்றி.
பேரா டாக்டர் என். சிவஷண்முகம், மதுரை.

ரௌட்டரும் மோடமும் ஒன்றுதான் என எண்ணியிருந்த என் தவறான தகவல் புரிதலை உங்கள் கட்டுரை போக்கியது. சிறப்பான விளக்கம் பயனுள்ளதாக உள்ளது.
நீ.முத்துக் குமார், திருப்பூர்.

பயர்பாக்ஸ் பிரவுசரின் அண்மைப் பதிப்பு, மொஸில்லா தன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்திடுவதின் அடையாளமே ஆகும். நிச்சயமாக இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும் இதற்குக் கடமைப் பட்டுள்ளனர்.
எஸ். சசிகலா, திண்டிவனம்.

எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் குறித்தும், அவற்றை நாம் பயன்படுத்தும் முன் மேற்கொள்ளப்பட வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் தாங்கள் தந்துள்ள குறிப்புகள் என்றும் நாங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை. இவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கலாம். தேவையற்ற சுமையை நீக்கலாம்.
பேரா. சி. கார்த்திகேயன், மதுரை.

டெஸ்க்டாப்பில் பைல்கள் பதிவதனைத் தவிர்க்கும்படி தாங்கள் முதலில் எழுதிய கட்டுரை குறித்து என்னைப் போன்ற வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலாக, சென்ற வாரம் தரப்பட்டுள்ள கட்டுரை, எங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையின் அடையாளம். பைல்கள் சேவ் செய்திட இத்தனை வழிகளா என்று வியக்கும் வண்ணம், எத்தனை தகவல்கள். அனைத்திற்கும் நன்றி, நன்றி, சார்.
என். மங்கையர்க்கரசி, திருவொற்றியூர்.

சிஸ்டம் ரெஸ்டோர் டூல், டெஸ்க்டாப் பைல்களைக் கண்டு கொள்ளாது என்பது புதிய தகவல். நீங்கள் தான் இது போன்ற நாம் தவறிழைக்கும் இடங்களைச் சுட்டிக் காட்டி, நன்கு வழிப்படுத்துகிறீர்கள். என் வணக்கங்கள்.
செ. மாணிக்கராஜ், சிவகாசி.

ப்ளக் இன் புரோகிராம் அப்டேட் குறித்த தகவலில் தரப்பட்டுள்ள, https://browsercheck.qualys .com/. என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று பார்த்தேன். மிகவும் அருமையான நன்மை தரும் தளமாக இது உள்ளது. சற்று நேரம் எடுத்தாலும், நாம் பாதுகாப்பாக இயங்குகிறோம் என்ற நிம்மதியை தன் சேவையின் மூலம் இது தருகிறது.
கா. தமிழரசி, செங்கல்பட்டு.

ப்ளக் இன் புரோகிராம்கள் வழியாகத்தான் வைரஸ்கள் வருகின்றன என்ற எச்சரிக்கையும், அதனால் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் மிக அருமை.
என்.சந்திரன், சென்னை.

விண்டோஸ் 7 குறித்த டிப்ஸ்கள் நிறைய தரவும். ஊறுகாய் மாதிரி இரண்டே இரண்டு போதாது. எக்ஸ்பிக்கு அடுத்து விண்டோஸ் 7 பக்கம் தான் பலர் மாறியுள்ளனர். எனவே அதிக குறிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
டி.கனகராஜ் சத்தியன், புதுச்சேரி.

எக்ஸெல் டிப்ஸ் இரண்டிலும் நீங்கள் தந்துள்ள படங்களே, குறிப்புகளை மிக அழகாக விளக்குகின்றன. இது போன்ற படங்கள் தருவது உங்கள் ஸ்பெஷாலிட்டி என்றாலும், இந்த வாரம் அவை மிக அருமை.
கே.ஆர்.சிவகாமிநாதன், தேனி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X