மொபைல் போன் விற்பனையில் பார்தி ஏர்டெல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 அக்
2010
00:00

இந்திய மொபைல் சேவைப் பிரிவில், 14 கோடிக்கும் மேலாக சந்தாதாரர்களைக் கொண்டுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், மொபைல் போன் விற்பனை யில் இறங்கியுள்ளது. இதன் குரூப் நிறுவனமான பீடெல் அண்மையில் எட்டு புதிய மொபைல் போன் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டது. இவற்றின் விலை  ரூ.1,750 – ரூ.7,000 என்ற அளவில் உள்ளன.
தற்போது நோக்கியா, எல்.ஜி., சாம்சங், சோனி எரிக்சன், மோட்டாரோலா போன்ற வெளிநாட்டு நிறுவனங் களும், மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பான் போன்ற இந்திய நிறுவனங்களும், மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இயங்கி வருகின்றன.  ரூ.2,000 முதல் ரூ.6,000 வரையில் விலையிடப் பட்டுள்ள போன்களின் விற்பனை ஆண்டுக்கு 30% வளர்ச்சியைப் பெற்று வருகிறது. ஆண்டுக்கு 13 கோடி போன்கள் விற்பனை யாகின்றன. எனவே தான் தன் சந்தாதாரர்களின் பலத்துடன் பார்தி ஏர்டெல் தன் குழுமத்தின் ஒரு பிரிவான பீடெல் வழியாக இந்த பிரிவில் இறங்குகிறது என்று பீடெல்  டெலிடெக் நிறுவன இயக்குநர் வினோத் கூறியுள்ளார்.   ஜி.எஸ்.எம். வகை சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களுடன், பீடெல் தொடர்பு கொண்டு மொபைல் போன் விற்பனையை மேற்கொள்ளும். வரும் மூன்று ஆண்டுகளில், மொபைல் போன் விற்பனையில் முதல் ஐந்து இடத்திற்குள்ளாக பீடெல் இடம் பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பீடெல் நிறுவனத்திடம்  அதி நவீன தொழில் நுட்பம் இருக்கிறது. அதன் மூலம்  புதிய அம்சங்களுடனும் வசதிகளுடனும் போன்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
குவெர்ட்டி கீ போர்டுடன் கூடிய கேம் போன், இரண்டு ஜி.எஸ்.எம்.+ ஒரு சி.டி.எம்.ஏ. இணைந்த மூன்று சிம் போன், முழுமையான ஒரு திரைப்படம் கொள்ளக் கூடிய மெமரி, எளிமையான 3ஜி இன்டர்பேஸ், இலவச அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். கொண்ட திட்டங்கள் ஆகியன இந்நிறுவனத்தின் முனைப்பு பட்டியலில் உள்ள சில அம்சங்களாகும்.

இது தேவையா ?
மொபைல் போனில் டெக்ஸ்ட் அடிப்பதில் நம் மூளைத் திறன் அதிகமாக செலவாகிறது. இதனால் நடந்து செல்வதில்,  கவனம் குறைந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கென நடத்தப்பட்ட ஆய்வில், டெக்ஸ்ட் அடித்துக் கொண்டு செல்பவர்கள், நிச்சயமாக, எதிரே உள்ள ஐந்து பொருட்களில் ஒன்றைக் கவனிக்க முடியவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.
இது சாலையில் மொபைல் போனில் பேசிக் கொண்டே செல்பவர்களுக்கும் பொருந்தும். எனவே மொபைல் போன் பயன்படுத்துவதாக இருந்தால், ஓரிடத்தில் ஒதுங்கி,  சாலையில் நடக்கும் மற்றவர் களுக்குத் தொல்லை இல்லாத இடத்தில் நின்று,பயன்படுத்தவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X