நோக்கியா லூமியா 630 மற்றும் டூயல் 630
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
00:00

இந்தியாவில், நோக்கியா லூமியா 630 மற்றும் லூமியா 630 டூயல் சிம் என இரண்டு புதிய மொபைல் போன்களை, நோக்கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.10,500 மற்றும் ரூ.11,500.
இந்த போன்கள் குறித்து சென்ற மாதம் அறிவிப்பு வெளியானது. இவற்றில் தெளிவான கருப்பு ஐ.பி.எஸ். டிஸ்பிளே தரும் 4.5 அங்குல திரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் தரப்பட்டுள்ளது. இதன் ஸ்நாப் ட்ராகன் 400 குவாட் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. விண்டோஸ் போன் 8.1 இதன் ஓ.எஸ். முன்புறமாக 720p HD வீடியோ பதிவு மேற்கொள்ளக் கூடிய 5 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது.
இதே வடிவமைப்பில் இரண்டு சிம் இயக்கம் கொண்டதாக, இரண்டாவதாகக் கூறப்பட்ட போன் வெளி வந்துள்ளது. இரண்டு சிம்களுக்கிடையே அழைப்புகளை முன்னோக்கி அனுப்பும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டிலும் 1830 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது. இவற்றின் ராம் நினைவகம் 512 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதன் ஸ்டோரேஜ் 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். மே 16 முதல் இரண்டு சிம் மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், ஒரு சிம் போன் விற்பனைக்குக் கிடைக்கும். வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் தரப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X