இ-பே (eBay) தளம் தாக்கப்பட்டது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
00:00

வர்த்தக இணைய தளமாக இயங்கும் இ-பே, ஹேக்கர்களால் தாக்கப்பட்டதனை அந்த தளம் அண்மையில் அறிவித்துள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவர்களுடைய பாஸ்வேர்ட்களை உடனடியாக மாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களின், நிதி பரிமாற்றம் குறித்த தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும் இ-பே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹேக்கர்கள் திருடப்பட்ட தகவல்கள் அடங்கிய பைலில், வாடிக்கையாளர்களின் பெயர்கள், சுருக்கி வைக்கப்பட்ட பாஸ்வேர்ட்கள், மின் அஞ்சல் முகவரிகள், வீட்டு முகவரிகள், தொலைபேசி எண்கள், பிறந்த நாட்கள் ஆகியவை இருந்தன எனத் தெரிகிறது.
பிப்ரவரி மாத இறுதியிலும், மார்ச் தொடக்கத்திலும் இந்த ஹேக்கர் தாக்குதல் இருந்தது. இது நாம் சற்று கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இந்த வர்த்தக இணைய தளத்தில் ஏறத்தாழ 12 கோடியே 80 லட்சம் பேர் பதிந்து இயங்கி வருகின்றனர். ஏற்கனவே ஹார்ட் ப்ளீட் என்ற வைரஸ் காட்டிய மோசமான விளைவுகள், இணையப் பாதுகாப்பு என்பதை கேள்விக்குரியதாகவும், கேலிக்குரிய தாகவும் ஆக்கியது. அப்போது அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சம் பேராக இருந்தது. இப்போது இ-பே தளம் மீதான தாக்குதல் அடுத்த மிகப் பெரிய அளவில் மோசம் விளைவிப்பதாக மாறலாம்.
இ-பே இணைய தளத்தில் அக்கவுண்ட் வைத்துள்ள அனைவரும் உடனடியாக தங்கள் பாஸ்வேர்ட்களை மாற்ற வேண்டும். மேலும், தங்கள் வங்கி கணக்குகளைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். ஏதேனும் மோசடியான நிதிப் பரிமாற்றம் ஏற்படுவதாகத் தெரிந்தால், தகுந்த, பின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ-பே மற்றும் அதன் துணை நிறுவனமான பே பால் ஆகியவை, இரு வழி அனுமதி அமைப்பைப் பயன்படுத்தும் வசதியினைத் தந்துள்ளனர். உங்கள் மொபைல் போனில் நீங்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே நிதி பரிவர்த்தனை நடைபெறும் வகையில் இதனை அமைக்கலாம். எனவே, அந்த பாதுகாப்பினைப் பயன்படுத்துவதே நல்லது.

இ-பே பாஸ்வேர்ட் மாற்றும் வழி: இ-பே தளப் பாதுகாப்பில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பால், அதன் பயனாளர்கள் அனைவரும் அவர்களின் பாஸ்வேர்டினை மாற்றித் தான் ஆக வேண்டும். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
முதலில், eBay.com தளம் சென்று, உங்கள் அக்கவுண்ட்டில் நுழையவும். அதன் ஹோம் பேஜில், மேல் வலது மூலையில் உள்ள My eBay லிங்க்கில் கிளிக் செய்திடவும். அடுத்து உங்களின் My eBay பேஜில் கிடைக்கும் Account டேபில், மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். அப்போது கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், Personal Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி, உங்களுடைய தனி நபர் தகவல் இருக்கும் Personal Information பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு மேலாக இருக்கும் Account Information பிரிவில், பாஸ்வேர்ட் ஆப்ஷன் இருக்கும் இடத்தைக் கண்டறியுங்கள். இங்கு Edit என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
அடுத்த பக்கத்தில், நீங்கள் இ-பே தளத்தில் பயன்படுத்தும் உங்களின் மின் அஞ்சல் முகவரியினை அமைக்க வேண்டும். இதன் பின்னர், உங்களுடைய இ-பே பாஸ்வேர்டினை இமெயில் அல்லது டெக்ஸ்ட், இவற்றில் எதன் வழியாக மாற்றி அமைக்க விரும்புகிறீர்கள் என்பதனைச் சொல்லியாக வேண்டும். மின் அஞ்சல் என்பதனைத் தேர்ந்தெடுத்தால், உங்களுடைய மின் அஞ்சல் கணக்கின் இன் பாக்ஸில், லிங்க் ஒன்றுடன் ஒரு செய்தி அனுப்பப்படும். இந்த லிங்க்கில் கிளிக் செய்து, உங்களின் பாஸ்வேர்டை மாற்றலாம்.
டெக்ஸ்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால், இ-பே, உங்கள் தொலைபேசிக்கு நான்கு இலக்க எண் ஒன்றை அனுப்பி, பின்னர் உங்களை அடுத்த பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில், அந்த பின் எண்ணை அமைக்க வேண்டும். சரியாக எண்ணை அமைத்துவிட்ட பின்னர், நீங்கள் புதிய பாஸ்வேர்ட் ஒன்றை அமைத்து, பின்னர் அதனையே உறுதிப்படுத்த வேண்டியதிருக்கும்.
தயவுசெய்து, இன்னொரு தளத்தில் பயன்படுத்தும் பாஸ்வேர்டினை, இங்கு பயன்படுத்த வேண்டாம். மிக வலுவான, யாரும் எளிதில் கண்டறிய முடியாத பாஸ்வேர்ட் ஒன்றை அமைத்துப் பதியவும். அமைத்த பின்னர், மீண்டும் இ-பே தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில், புதிய பாஸ்வேர்ட் பயன்படுத்தி நுழையுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.
புதிய பாஸ்வேர்ட் அமைத்த பின்னர், புதியதாக அமைத்துவிட்டோமே என்று அசட்டையாக இருந்துவிட வேண்டாம். ஹேக்கர்கள் என்றுமே நம்மைக் காட்டிலும் விழிப்பாக இருந்து திருட முயற்சிப்பார்கள். எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X