கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2014
00:00

கேள்வி: நான் ஐ பேட் பயன்படுத்துகிறேன். இதில் ஐ.ஓ.எஸ். 6.1 சிஸ்டம் இயங்குகிறது. இதில் ஸ்கிரீன் ஷாட் படமாக எடுத்து, அதனை மின் அஞ்சல் மூலமாக அனுப்பும் வழி தெரியவில்லை. உதவவும்.
சி.கே. தம்பிதுரை, தேவாரம்.
பதில்:
ஸ்கிரீன் ஷாட் எடுப்பது என்பது அனைத்து டிஜிட்டல் சிஸ்டங்களிலும் தரப்படும் ஓர் இனிய மகிழ்ச்சி தரும் வசதி ஆகும். நம் சாதனங்களின் திரையில் காட்டப்படும் காட்சியை அப்படியே பிடித்து வைத்து, நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் எப்போதும் கண்டு ரசிப்பதற்கே இந்த வசதி. ஒரு சாதனம் இயங்கத் தொடங்கும்போதும், முடிக்கப்படும்போதும் மட்டுமே இந்த வசதி இயங்காது. இனி உங்கள் ஐபேடில் எப்படி திரைக் காட்சியைப் பிடித்து, மின் அஞ்சல் மூலம் அனுப்புவது எனப் பார்க்கலாம்.
1. ஐபேடின் மேல்புறம் வலது மூலையில் இருக்கும் பவர் பட்டனை அழுத்தவும். அதே நேரத்தில் ஹோம் (Home) பட்டனையும் அழுத்தவும். அப்போது திரையில் ஒரு ப்ளாஷ் கிடைக்கும். படம் எடுக்கப்பட்டதாக பொருள். உங்கள் ஐபேடில் ஒலி கேட்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால், கேமரா ஒன்றின் ஷட்டர் திறந்து மூடும் சத்தம் கேட்கும்.
2. அடுத்து Photos App சென்று, Saved Photos செல்லவும்.இங்கு நீங்கள் எடுத்த திரைக் காட்சியின் சிறிய படம் கிடைக்கும். இதில் தட்டினால், உங்களுக்கு முழுப் படமும் காட்டப்படும். அடுத்து பட்டன் தேர்ந்தெடுத்து, இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ். வழியாக அதனை அனுப்பலாம். அல்லது MobileMe Gallery க்கும் அனுப்பலாம். இதற்கு நீங்கள் முன்னரே சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும். இன்னொரு வழியும் உண்டு. இந்த படத்தினை உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்றி, கம்ப்யூட்டரில் இருந்தவாறு, இணைய இணைப்பில் மின் அஞ்சல் செய்திடலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், நாம் எண்ணிய போதெல்லாம், அன்றைய தேதியை கம்ப்யூட்டர் தானாக அமைக்கும்படி செய்திடலாமா?
ஆர். சிதம்பரம், மதுரை.
பதில்:
செய்திடலாமே. ஆனால், சில விஷயங்களை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். வரிசையாகப் பார்ப்போம். டாகுமெண்ட்டில் எங்கு தேதியை இணைக்க வேண்டுமோ அங்கு, கர்சரை வைத்துப் பின்னர், Alt+Shift+D கீகளை அழுத்தவும். அன்றைய தேதி தானாக அமைக்கப்படும். அதே போல Alt+Shift+T கீகளை அழுத்தினால், அப்போதைய நேரம், கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கப்பட்டு அமைக்கப்படும். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இவை விசையியக்கம் சார்ந்தவை. ஆங்கிலத்தில் இதனை dynamic என்று சொல்வார்கள். அதாவது நீங்கள் அந்த டாகுமெண்ட்டை எப்போது திறந்தாலும், அது அன்றைய தேதி மற்றும் நேரத்திற்கு மாற்றிக் கொள்ளும். இது மாறாக இருக்க வேண்டும் என்றால், ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்திய பின்னர், Ctrl+Shift+F9 என்ற கீகளை அழுத்தவும். இது அப்போது அமைக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தை அப்படியே நிலையாக அமைத்துவிடும். இந்த ஷார்ட்கட் கீகளின் செயல்பாடுகள், வேர்ட் புரோகிராமில் மட்டுமே செயல்படும். மற்ற வேர்ட் ப்ராசசர்களில் செயல்படாது.

கேள்வி: நான் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். உங்களுடைய தகவல் படித்து பயர்பாக்ஸ் 29க்கு மாறினேன். முன்பு, இணைய தளம் ஒன்றை புக்மார்க் செய்து அதனை ஒரு போல்டருக்குக் கொண்டு செல்ல முடிந்தது. தற்போது ஸ்டாரில் கிளிக் செய்த பின்னர், போல்டரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதற்கு என்ன வழி?
ஆ. சிந்தியா மோகன், திருப்பூர்.
பதில்
: பயர்பாக்ஸ் பதிப்பு 29ல், பிரவுசரின் மேலாக வலது பக்கம் உள்ள ஸ்டார் ஐகானில் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து, உடனடியாக ஒரு புக்மார்க்கினை உருவாக்க முடியும். அந்த ஸ்டார் ஐகான் நீல நிறத்தில் மாறியவுடன், புக்மார்க் உருவாக்கப்பட்டவுடன், மீண்டும் அந்த ஸ்டார் ஐகானில் கிளிக் செய்திடவும். அப்போது, அந்த புக்மார்க்கினை எடிட் செய்திட ஆப்ஷன் கிடைக்கும். அந்த புக்மார்க்கினை இழுத்து வந்து, நீங்கள் விரும்பும் போல்டரில் விட்டுவிடலாம். அல்லது புதிய போல்டர் ஒன்றை உருவாக்கி, அதில் பதிந்து வைக்கலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில், ஏதேனும் ஒரு புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், அல்லது ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையில், எனக்கு அட்மினி ஸ்ட்ரேட்டர் அனுமதி இல்லை என்று தடை விதிக்கும் செய்தி கிடைக்கிறது. நான் ஒருவனே இதனைப் பயன்படுத்தி வருகிறேன். பின்னர் ஏன் இந்த தடை? நீக்க வழி கூறவும்.
கே.ஆர். சுப்ரமணியன், திண்டுக்கல்.
பதில்:
நீங்கள் மட்டுமே அந்த கம்ப்யூட்டரின் உரிமையாளராகவும், ஒரே பயனாளராகவும் இருந்தால், நீங்கள் அமைத்த அமைப்பில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்க வேண்டும். இதனை சரி செய்திடலாம். ஸ்டார்ட் மெனு செல்லவும். இங்கு உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள இ ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Security டேப் தேர்ந்தெடுத்து, Advanced options என்பதனைப் பின்னர் தேர்ந்தெடுக்கவும். இங்கு Permission என்ற பகுதியின் கீழ், Change permissions என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பட்டியலுடன் விண்டோ ஒன்று காட்டப்படும். எந்த அக்கவுண்ட்டில் முழு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்கிறீர்களோ, அதில் கிளிக் செய்திடவும். இங்கு Edit பட்டனை தேர்ந்தெடுக்கவும். அடுத்து Full Control என்று உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.
மீண்டும் ஸ்டார்ட் மெனு செல்லவும். இங்கு தேடல் கட்டத்தில், cmd என டைப் செய்து எண்டர் தட்டவும். கமாண்ட் ப்ராம்ப்ட் எனப்படும் கட்டளைப் புள்ளியுடன் விண்டோ கிடைக்கும். இங்கு net user என டைப் செய்து எண்டர் தட்டவும். இந்த கட்டளை அனைத்து அக்கவுண்ட் பயனாளர்களின் பெயர்களைக் காட்டும். அடுத்து net user என டைப் செய்து, உங்களின் அக்கவுண்ட் யூசர் பெயரை டைப் செய்திடவும். (எ.கா.net user subramani). அடுத்து எண்டர் அழுத்தினால், உங்கள் அக்கவுண்ட் இயக்கப்படும்.
அநேகமாக, இந்த அமைப்பில் உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமை கிடைக்கும். இல்லை என்றால், கம்ப்யூட்டரை பேக்டரி செட்டிங்ஸ் அமைப்பிற்கு ரீ செட் செய்திட வேண்டியதிருக்கும்.இதற்கு உங்கள் கம்ப்யூட்டருடன் தரப்பட்ட குறிப்பேட்டினைப் (Manual documentation) பார்க்கவும். ஆனால், இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளும் முன், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டேட்டாவினையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்புக்கில், செல் ஒன்றில் பார்முலா கொடுத்து, கணக்கின் விடையைப் பெறும் வகையில் அமைத்தால், ஒவ்வொரு நேரமும் ஒரு மாதிரியாக, அதாவது ரவுண்ட் ஆப் செய்து, சயிண்டிபிக் அடையாளம் கொண்டு, இன்னும் பல வகைகளில் காட்டுகிறது. இது எதனால்? செட்டிங்ஸ் அமைப்பில் தவறா?
என். வாசுகி மாலா, சென்னை.
பதில்:
எக்ஸெல் இயங்கும் விதத்தில் ஒரு வகை அடிப்படைக் கணக்கியல் பின்பற்றப்படுகிறது. முதலில் ஜெனரல் பார்மட் பின்பற்றப்படுகிறது. எண்கள் பத்து இலக்கங்களில் கிடைக்கும் வரை அது ஜெனரல் பார்மட்டினைக் கடைப்பிடிக்கும். அதற்கும் மேல் அடுத்த எண்ணுக்கு ரவுண்ட் ஆப் செய்யப்படும். புள்ளிக்கு இடது பக்கம் அதிக இலக்கங்கள் இருந்தால், அதற்கேற்ற சயிண்டிபிக் நொட்டேஷனில் எண் தரப்படும். இதனை நீங்கள் மாற்ற வேண்டும் என விரும்பினால், செல் பார்மட்டிங் அமைப்பினை மாற்ற வேண்டும்.

கேள்வி: டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை ஒழுங்காக வரிசையாக அமைக்க எண்ணி, இழுத்தி விட்டால், அது மீண்டும் பழைய இடத்திற்கே வந்துவிடுகிறது. ஆனால், முன்பு இழுத்த இடத்தில் அமைந்தது. இது எதனால்? எண்ணிக்கை அதிகமானதாலா? நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.
என். சிந்தியா ராணி, வேளச்சேரி, சென்னை.
பதில்
: இதனை எளிதாகச் சரி செய்துவிடலாம். டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Arrange Icons By” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் "Align to Grid” என்ற பிரிவினைப் பார்க்கலாம். இப்போது உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டுமா அல்லது எக்ஸ்பி சிஸ்டம் படி இயங்க வேண்டுமா என்பதனை முடிவு செய்து அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள் அல்லது எடுத்து விடுங்கள். டிக் அடையாளம் ஏற்படுத்தினால் எக்ஸ்பி ஏற்கனவே செட் செய்தபடி இயங்கும்.

கேள்வி: வேர்ட் புரோகிராமில் சிலர் வண்ணத் திரையில் வெள்ளை எழுத்து தெரியும்படி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். இது எப்படி சாத்தியமாகிறது. நான் எக்ஸ்பி க்மற்றும் வ்வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன்.
கா. பிரகாஷ் குமார், மதுரை.
பதில்:
சிலர் வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு எழுத்துக்களைப் பார்ப்பது தங்கள் கண்களுக்குக் கெடுதி என்று எண்ணி, இந்த மாற்று வழியை அமைக்கின்றனர். இதற்கான வழி முறையைத் தருகிறேன்.
முதலில் Start, All Programs, Microsoft Word வழியாக சென்று வேர்ட் பைல் ஒன்றைத் திறக்கவும். பின்னர் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபைத் தட்டி புதிய விண்டோ பெறவும். அதில் முதலாவதாக "Blue background, white text.” என்று இருக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வேர்ட் டாகுமென்ட் திறந்தால் அது நீலக் கலரில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களைக் காட்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HARIGOVINDAN - CHENNAI,இந்தியா
02-ஜூன்-201421:01:34 IST Report Abuse
HARIGOVINDAN என் HP 1000 மடி கணினியில் விண்டோஸ் 8 இருந்து 8.1 க்கு மாறியபின் bluetooth வேலை செய்யவில்லையெ என்ன செய்வது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X