செலக்ட் ஐட்டம் நிறம் மாற்ற
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 அக்
2010
00:00

எக்ஸெல் தொகுப்பில் செல், வேர்டில் டெக்ஸ்ட், அவுட்லுக்கில் இமெயில் என எதனை செலக்ட் செய்தாலும், விண்டோஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டங்களை வேறு ஒரு வண்ணத்தில் காட்டும். பொதுவாக, மாறா நிலையில் இது கிரேயாகத் தோற்றமளிக்கும். இது ஆபீஸ் தொகுப்பின் மூலம் நடைபெறுவதல்ல. ஆபீஸ் தொகுப்பில் இந்த வண்ணத்தினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இல்லை. விண்டோஸ் வழி இதனை மேற்கொள்ளலாம். இதனால் மாற்றங்கள் ஏற்படுத்துகையில், இது ஆபீஸ் தொகுப்பு களில் மட்டும் நடைபெறாமல், விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் அனைத்து தொகுப்புகளிலும் மேற்கொள்ளப்படும். கீழ்க்காணும் வழிகளில் இந்த செட்டிங்ஸ் அமைப்பை ஏற்படுத்தலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு:
1. டெஸ்க்டாப் மீது காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் இருந்து, Properties   தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
2. அடுத்து கிடைக்கும் விண்டோவில், Appearance    டேப் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், இதில் Advanced   என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இதில்  Item  என்று இருக்கும் இடத்தில் கீழ் குறி அம்பில் கிளிக் செய்து, விரியும் பட்டியலில் Selected Items  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. கலர் 1 என்ற கீழ் விரியும் பட்டியலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் செல், டெக்ஸ்ட், மெயில் போன்றவை எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும் என  விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.
6. ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும்.
மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மாறும்.
1. டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Personalize   என்பதைத் தேர்ந்தெடுக் கவும்.
2. திரையின் கீழாக உள்ள  Window Color என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர் Advanced Appearance Settings  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இதில் Item   என்று இருக்கும் இடத்தில், கீழ் குறி அம்பில் கிளிக் செய்து, விரியும் பட்டியலில் Selected Items  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. Color 1 என்ற கீழ் விரியும் பட்டியலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் செல், டெக்ஸ்ட், மெயில் போன்றவை எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும் என  விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.
6. ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X