இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2014
00:00

மேலதிகாரிகளே... மரியாதையை காப்பாற்றி கொள்ளுங்கள்!
என் கணவர், மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று இறந்து விட்டார். அவர், அரசு பணியில் இருந்ததால், அவருக்குப்பின், அந்த வேலை எனக்குக் கிடைத்தது. இளம் விதவையான நான், மற்றவர் மனதில் சலனம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, என் உடை, அலங்கார விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். என் செக் ஷன் சூப்பர்வைசர் ஒரு, 'ஜொள்' பார்ட்டி. அதுமட்டுமில்லாமல், செக் ஷனில் இருப்பவர்கள் தன்னிடம் வந்து வழிந்துகொண்டு பேச வேண்டும் என்றும், தனக்கு, 'ஜால்ரா' அடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். இதில் எனக்கு விருப்பம் இல்லாததால், நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருப்பேன்.
இதனால், அந்த சூப்பர்வைசர், என்னைப்பற்றி மற்றவர்களிடம் மட்டமாக, கீழ்த்தரமாக பேசுவார். என் வேலையில் எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். வயிற்று பிழைப்புக்காக வேலைக்கு வந்தால், இது போன்ற மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு, வேதனைப்பட வேண்டியிருக்கிறது. படித்து, நல்ல பதவியில் இருப்பவர் இப்படி நடந்து கொண்டால், இவர் மீது எப்படி மரியாதை ஏற்படும்? தனக்கு சாதகமாக இல்லாத ஒரே காரணத்தால், ஒருவர் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இம்சைப்படுத்தும் இவரைப் போன்றவர்கள் எப்போது தான் திருந்தப் போகின்றனரோ!
— எம்.ஜெயந்தி, மடிப்பாக்கம்.

இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய இளசுகள்!
சென்னை திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை, பேருந்து நிறுத்தத்தில், நான் கண்ட காட்சி, என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாலை, 5:00 மணி இருக்கும். 75 வயது மதிக்கக்தக்க, ஒரு மூதாட்டி கையில், ஒரு துணிப்பையுடன், பரிதாபமாக, கடை ஓரமாக அமர்ந்திருந்தார். சில இளம் பெண்கள், பஸ் நிறுத்தத்தில், கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள், இருவர் அங்கிருக்கும் பெட்டிக் கடையில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி வந்து, 'பாட்டி...' என்று, அன்புடன் அழைத்து, அவரது கையில் கொடுத்ததுடன், காபியும் வாங்கி கொடுத்தனர். அந்த மூதாட்டி, அவர்களுக்கு தெரிந்தவராய் இருக்குமோ என நினைத்து, அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'தெரிஞ்சவங்க இல்ல; அந்தப்பாட்டியின் முகம் வாடிப் போய் இருந்ததால் தான், காபி மற்றும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்தோம்...'என்றனர்.
நான், அவர்களைப் பாராட்டி, மனமாற வாழ்த்தினேன். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்...' என்ற வள்ளலாரின் வாக்கு தான், என் நினைவிற்கு வந்தது.
- எஸ்.தியாகமணி, சென்னை..

கணவன் இருந்தும்...
என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.
எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?
ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குமரன் - Pune,இந்தியா
08-ஜூன்-201406:10:43 IST Report Abuse
குமரன் முதல் மற்றும் மூன்றாம் பகிர்வுகள் வேதனைக்குரியவை. விதவைகள் தனியாக பாதுகாப்பாக வாழும் ஒரு சமுதாயத்தை தமிழ் சமுதாயம் ஏற்படுத்தவில்லை என்பது நன்றாக தெரிகிறது. விதவைகள் பூவும், போட்டும் வைத்துகொள்ளக் கூடாது என்பதே அபத்தமாக உள்ளது. தமிழ் சமுதாயம் மனித நேயத்தோடு இதை அணுக வேண்டும். அதைவிட கொடுமை, ஒரு விதவை வருத்துப்படுவாள் என்று மற்றவர்களும் பூ போட்டு வைத்துகொள்ள கூடாது என்பது கொடுமையிலும் கொடுமை. இது தனிப்பட்ட பெண்களின் பிரச்சினையாக பாராமல், எல்லா தனித்துவிடப்பட்ட பெண்கள், விதைவைகள் எல்லா பெண்களின் பிரச்சினையாக தமிழ் சமுதாயம் இதை கருத வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X