பள்ளி மாணவர்களுக்கான இணையதளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 அக்
2010
00:00

பள்ளி வகுப்புகள் தொடங்கி காலாண்டு தேர்வு நடக்கும் நல்ல நேரம் இது. மாணவர்கள் தங்கள் படிக்கும் திறனை, பாடங்கள் வாரியாக எவ்வாறு தீட்டிக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லும் தளம் ஒன்றினை அண்மையில் கண்டேன். இந்த தளம் தரும் தகவல்களும், வழிமுறைகளும் மிகச் சிறப்பாகவும் பயனுள்ள்தாகவும் இருப்பதால், அது குறித்த தகவல்களை இங்கு தருகிறேன்.
இந்த தளத்தின் முகவரி : http://www.educationatlas.com/ studyskills.html. 
படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல், உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து அறிந்து, அதனை வளர்த்துக் கொள்ளல், உங்கள் நேரத்தினைச் சிறப்பாக நிர்வகித்து, தேர்வுக்கு எப்படி தயார் செய்வது போன்ற பல வழிகளை மாணவர்களுக்குக் காட்டும் தளமாக இந்த இணைய தளம் மேலே குறிப்பிட்ட முகவரியில் இயங்கி வருகிறது.
இந்த தளம் சென்றவுடன் மூன்று பிரிவுகள் நம்மை வரவேற்கின்றன. முதல் பிரிவு General Study Skills Guides. . பொதுவான படிக்கும் திறன் வளர்க்கும் வழிகள். பாடங்கள் குறித்த உரைகளை  எப்படித் தீர்க்கமாகக் கேட்டு அறிவது, குறிப்புகள் எடுப்பது, படித்து அறிந்து கொள்வது, தேர்வு குறித்த ஆர்வம் போன்ற செய்திகள் இங்கு கிடைக்கின்றன.
அடுத்த பிரிவான Test Taking Study Skills Guides   என்ற பிரிவு, மாணவர்கள் எவ்வாறு தேர்வு களை மேற்கொள்ளலாம் என்று வழி நடத்துகிறது. பல்வேறு வகையான தேர்வுகள் குறித்து தகவல்கள் வழிகாட்டப் படுகின்றன. (சரி/சரியல்ல, கொள்குறிவினா, கட்டுரை, வாய்மொழித் தேர்வு எனப் பல வகை) அடுத்த மூன்றாவது பிரிவு, பாடங்கள் வாரியாக படிக்கும் திறனை வளர்த்துக் கொள்வது குறித்த தகவல்களைத் தருகிறது.  இதில் தரப்பட்டிருக்கும் பாடங்கள்:–  Accounting, Biology, Business, Chemistry, Computer Science, Economics, Education, English, Engineering, History, Law, Math, Physics, Political Science, and Psychology.
இந்த தளம் குறித்து சில மாணவர்களிடம் தெரிவித்த போது, ஒவ்வொருவரும் ஒரு வகையான பயனைப் பெற்றதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து பயன் படுத்தி வருவதாகவும் அறிவித்தனர். நீங்களும் இதனைப் பயன்படுத்தும் வழிகளை  உங்கள் குழந்தைகளுக்கும், தெரிந்த மாணவர்களுக்கும் சொல்லலாமே.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raje - madurai,இந்தியா
08-அக்-201021:05:14 IST Report Abuse
raje it,s good website,more useful to us.thanking u for ur searching.keep on ur searching .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X