ஐ.ஓ.எஸ். 8 - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஓ.எஸ்.
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
00:00

சென்ற வாரம் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த பன்னாட்டளவிலான ஆப்பிள் நிறுவனக் கருத்தரங்கில், அந்நிறுவனம் வெளியிட இருக்கும், மொபைல் சாதனங்களுக்கான, ஐ.ஓ.எஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல் வெளியிடப்பட்டது.
ஆண்டு தோறும் ஒருமுறை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென புரோகிராம்களை உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கினை நடத்துவது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கம். சென்ற வாரம் நடைபெற்ற இந்த கருத்தரங்கு இவ்வகையில் 25 ஆவது கருத்தரங்காகும். நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் இதனைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் 6,000க்கும் மேற்பட்ட புரோகிராம் வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய கருத்தரங்குகளில், ஐபோன் போன்ற சாதனங்கள் அறிமுகத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, இந்த சாதனங்களுக்கான சாப்ட்வேர் தயாரிப்பு குறித்து அதிகத் தகவல்கள் தரப்பட்டன.
கருத்தரங்கு நடக்கும் போதே, அதில் புரோகிராம்களை வடிவமைப்பவர்களுக்கு, புதிய ஓ.எஸ். சோதனை முறையில் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கும் சோதனை முறையில் பயன்படுத்த வரும் மாதங்களில் வழங்கப்படும்.
இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழக்கம் போல் காட்சித் தோற்றங்களில் புதிய மாற்றங்களின் மேல் தன் கவனத்தைக் கொள்ளாமல், அதன் செயல்பாடுகளில் அதிக கவனம் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் பயனாளர்கள் இதுவரை எதிர்பார்த்து கேட்டிருந்த பல செயல்பாடுகள், இந்த புதிய சிஸ்டத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத் தின் அறிவிப்பு முறை, ஆப்பிள் டெஸ்க்டாப் சிஸ்டத்துடனான ஒருங்கிணைப்பு, ஐ க்ளவ்ட் நிர்வாகம், எஸ்.எம்.எஸ். க்ளையண்ட் மெசேஜ் நிர்வாகம், உடல்நலம் குறித்துத் தெரிந்துகொள்ள பல அப்ளிகேஷன்கள் என அனைத்தும் மக்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் அமைக்கப்படும் எனத்தெரிகிறது.
இதன் சில சிறப்பு அம்சங்கள் என இக்கருத்தரங்கில் காட்டப்பட்டவை குறித்து இங்கு காணலாம். நோட்டிபிகேஷன்களைப் பொறுத்த வரை, அவை கிடைக்கும்போது, அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கத்தினை நிறுத்தாமல், அதனைக் கவனித்து அதற்கான நடவடிக்கையினை எடுக்க முடியும்.
ஐ க்ளவ்ட் இயக்க முறை, கூகுள் ட்ரைவ் மற்றும் ட்ராப் பாக்ஸ் போல மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் சேவ் செய்யப்படும் பைல்களைத் தேடிப் பெறும் டூல்கள் தரப்பட இருக்கின்றன. நாம் பயன்படுத்தப்படும் ஆப்பிள் சாதனங்களின் அனைத்து படங்களும், வீடியோ பைல்களும், ஐ க்ளவ்ட் உடன் ஒருங்கிணைக்கப்படும்.
இனி அப்ளிகேஷன் மூலம் மேக் மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்கள் இடையே ஒருங்கிணைந்த இணைப்பு நடைபெறும். இதுவரை மேக் - மேக் மற்றும் ஐ.ஓ.எஸ். - ஐ.ஓ.எஸ். சாதனங்கள் இணைப்பு மட்டுமே நடைபெற்று வந்தன.
தன் புரோகிராம்களையும், மிகவும் நம்பிக்கை கொண்ட சிலரின் புரோகிராம்களை மட்டுமே அனுமதித்து வந்த ஆப்பிள், இனி தர்ட் பார்ட்டி என்று அழைக்கப்படும் பிற வல்லுநர்கள், ஆப்பிள் சாதனங்களுக்காக எழுதப்படும் புரோகிராம்களையும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து அனுமதிக்க இருக்கிறது. தனி நபர்கள், இந்த சிஸ்டத்தில் இயங்குவதற்கெனத் தயாரிக்கப்படும் புரோகிராம்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோரில் இவை கிடைக்கும்.
இந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் TouchID எனப்படும், விரல் ரேகை உணர்ந்து அனுமதி அளிக்கும் டூல் தயாரிப்பினை, மற்ற நிறுவனங்களுக்கு வழங்குகிறது. இவ்வாறு வழங்குவதால், ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் தனித் தனியே தனி நபர் பயன்படுத்த கட்டுப்பாட்டினை வழங்க இயலும். இத்துடன் விர்ச்சுவல் கீ போர்ட் வடிவமைத்துத் தருவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வகையில், புதியதாக 4,000 அப்ளிகேசன்களை அமைக்க இடம் உள்ளதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
போட்டோ எடிட் செய்வதில் சில புதிய வசதிகள் இணைக்கப்படுகின்றன. இனி, படங்களைக் கொண்டு பைல்களைத் தேடிட முடியும். இந்த வசதியினை சாதனங்களில் மட்டும் இல்லாமல், ஐ க்ளவ்ட் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.
ஐபேட் மற்றும் ஐபோன்களில் பயன்படுத்த, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், QuickType எனப்படும் டூல் தற்போது தரப்படவுள்ளது. predictive text என அழைக்கப்படும் வசதி தற்போது அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் கிடைக்கும். இதன் மூலம் நம் டெக்ஸ்ட்டை மிக வேகமாக அமைக்க முடியும். ஏற்கனவே இது ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களில் கிடைத்து வருகிறது. ஆப்பிள் சாதனங்களில், SwiftKey போன்ற டூல்கள் இவ் வகையில் கிடைத்தாலும், இதனை மற்ற சாப்ட்வேர் அப்ளிகேஷன்களில் நேரடியாகப் பயன்படுத்த முடியாது. ஸ்விப்ட் கீ டூலில் டெக்ஸ்ட் அமைத்து, பின்னர் அதனை காப்பி செய்து பேஸ்ட் செய்திட வேண்டும். ஆனால், புதியதாக தரப்பட இருக்கும் குயிக் டைப், நேரடியாக மெசேஜினை அமைக்க உதவிடும். இதனை அதிகமாகப் பயன்படுத்துகையில், அது நம் டெக்ஸ்ட் அமைக்கும் ஸ்டைலைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப எதிர்பார்க்கக் கூடிய டெக்ஸ்ட்டினை வழங்கிடும்.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் HealthKit மற்றும் HomeKit என இரண்டு அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. இவை முறையே உடல் நலம் மற்றும் வீட்டு சாதனங்களை இயக்கும் அப்ளிகேஷன்களாக இயங்கும்.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் சிஸ்டங்கள் போல, யாரும் எந்த நேரத்திலும், எந்த சாதனத்திலும், எந்த இடத்திலும், தங்களுடைய பைல்களை இயக்கும் வகையில், அனைத்து வகை ஆப்பிள் சாதனங்களையும் இணைத்து ஒருங்கிணைக் கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. கூகுள் ஆண்ட்ராய்ட் மற்றும் தன் குரோம் சிஸ்டங்களை இணைப்பது போல, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் மற்றும் விண்டோஸ் போன் இயக்கங்களுக்கிடையே ஒருங்கிணைப்பது போல, இந்த புதிய ஐ.ஓ.எஸ். வடிவமைக்கப்பட்டு கிடைக்க இருக்கிறது. இன்னும் பலர் மொபைல் இயக்கம் வேறு, டெஸ்க்டாப் இயக்கம் வேறு என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் இதனை மாற்றிக் கொண்டு வருகிறது. அதே போல ஆப்பிள் தன்னுடைய இந்த புதிய இயக்க முறைமையில் கொண்டு வருகிறது. இதன் OS X Yosemite and iOS 8 இயக்கங்கள் இந்த ஒருங்கிணைப்பைச் சிறப்பாகக் கொண்டு வர இருக்கிறது.
இந்த வகையில் இன்னும் பல ஆச்சரியங்களை தன் ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டத்துடன் ஆப்பிள் தர இருக்கிறது. இதுவரை ஆப்பிள் கொண்டிருந்த இமேஜ் மாற இருக்கிறது. போட்டிகள் நிறைந்த டிஜிட்டல் உலகில், போட்டியின் தன்மைக்கேற்ப பல புதுமைகளை மேற்கொள்ள இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அது இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தொடங்க இருக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranjith Kumar - Tirunelveli,இந்தியா
09-ஜூன்-201403:23:30 IST Report Abuse
Ranjith Kumar ஒ.ஸ் தான் முதலில் Desktop மற்றும் Mobile Phone க்கு ஒரே மாதிரியான user interface கொண்டு வர முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் மார்க்கெட்டில் 1% மற்றுமே இருப்பதாலும் அவர்களது ப்ராஜெக்ட் இலவச ஒ.ஸ். என்பதாலும் அவர்களால் மிக அதிக பணச் செலவில் அதை நினைவாக்க முடியவில்லை. அவர்களது ஐடியாவை இப்பொழுது ஒ. ஸ். ஜாம்பவன்கள் செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X