சீனா நமக்குக் கற்றுத் தரும் பாடம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
00:00

இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையில், சீனா அமெரிக்க நாட்டையும் மிஞ்சிவிட்டது. சீன மக்களில் 59 கோடியே 6 லட்சம் பேர் இன்று தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் இது கூடுதல் ஆகும். ஆனால், சீன நாட்டின் மக்கள் தொகையில் இது 44.1 சதவீதம் தான்.அமெரிக்க நாட்டில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடியே 40 லட்சம் பேர் மட்டுமே. இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 85%. இந்த வகையில், சீனாவில் இணைய நிறுவனங்கள் வளர்ச்சி, மற்ற நாடுகளைக் காட்டிலும் முந்தியதாய் உள்ளது.
ஆனால், தன் இணைய வெளியில் பிற நாடுகளின் ஊடுறுவலை சீனா திறமையுடன் கட்டுப்படுத்தி வருகிறது. மேற்கு நாடுகள், மற்ற நாடுகளின் இணையவெளியில் தங்கள் ஆதிக்கத்தினைப் பதிக்கையில், சீனாவில் அவை தங்கள் விருப்பத்திற்கு எதுவும் மேற்கொள்ள இயலவில்லை. சீனாவில் அலிபாபா (Alibaba) இணைய வர்த்தகத்தினையும், Tencent சமூக இணைய வெளியையும் கட்டுப்படுத்தி வருகின்றன.
இதனை அடுத்து தற்போது சீனா மொபைல் வழி இணைய வர்த்தகத்தில் தன் முழுக் கவனத்தினையும் செலுத்தி வருகிறது.
இதிலும் உலகில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. அலிபாபா நிறுவனம் தான் சீனாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 401 கோடி டாலர் அளவில் வருமானம் ஈட்டியது. நடப்பு ஆண்டில், பொதுமக்களுக்கான பங்குகளை வெளியிட்டு முதலீட்டு மூலதனத்தைப் பெருக்க இருக்கிறது.
அலிபாபா வர்த்தக நிறுவனங்களிடையே தன் வர்த்தகத்தினை மேற்கொள்கிறது. மக்களிடம் நேராக வர்த்தகம் மேற்கொள்வதில், சீனாவில், Taobao மற்றும் Tmall.com நிறுவனங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. மற்ற நாடுகளில், கூகுள் தேடல் தளம் சென்று தங்களுக்கு வேண்டிய பொருட்களைத் தேடிவிட்டு, பின்னர் வர்த்தக இணையதளங்களுக்கு வருவார்கள். ஆனால், சீனாவில், Alibaba நிறுவனத் தளத்தைத்தான் மக்கள் முதலில் நாடுகிறார்கள். இணைய தளத்தில் வர்த்தக நிறுவனங்களுக்கு இடம் கொடுத்து அதில் அதிக வருமானத்தினை இந்த நிறுவனம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X