பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
00:00

டோட்டல் அன் இன்ஸ்டால் புரோகிராம் மிக நன்றாகச் செயல்படுகிறது. அதன் இன்டர்பேஸ் மற்றும் செயல்திறன் மிகச் செம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தகவல் தந்தமைக்கு நன்றி.
என். கோகுல கிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

மொபைல் போன்களில் பாதுகாப்பு குறித்தும் தகவல்கள் அளிக்கவும். குறிப்பாக ஸ்மார்ட் போன்களில், வைரஸ் மற்றும் மால்வேர் வராமல் தடுப்பதற்குக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் குறித்து அறிய ஆவலாய் உள்ளோம்.
கா. திரவியம், விழுப்புரம்.

அதிக அளவில் இணையத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வரும் இ-பே போன்ற தளங்களே ஹேக்கர்களால் தாக்கப்படுகிறது என்ற செய்தி கவலையைத் தருகிறது. எப்படித்தான் இதனைச் சமாளிக்கப் போகிறார்கள் என்ற அச்சமும் வருகிறது.
டாக்டர் எஸ். திரவியம், புதுச்சேரி.

காலத்தால் செய்த உதவி போல, இ-பே தளத்தில் எப்படி பாஸ்வேர்டினை மாற்றுவது என்ற வழிகளையும் சுட்டிக் காட்டிய தங்களுக்கு நன்றி. இனி இ-பே பக்கம் போவது என்றால் சற்று யோசிக்க வேண்டும்.
ஆர். தமிழ்ச்செல்வி, புத்தனாம்பட்டி.

இன்று இணையம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலையில், அதனை வளர்த்த வல்லுநர்களின் படங்களோடு, அவர்களின் பங்களிப்பு என்ன என்பதனைப் பற்றியும் மிக அழகாகக் கொடுத்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துகள்.
எம்.எஸ். ஆரோக்கியநாதன், கம்பம்.

இணையம் வளர்த்த வல்லுநர்களில் இன்னும் யார் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்ற தகவலையும் கொடுத்திருக்கலாம். நல்ல ஒரு தகவல் பதிவு கட்டுரையாக இது அமைந்துள்ளது. நன்றி.
பேரா. எல். சாந்தகுமார், திருச்சி.

கூகுள் வரையறைகள் நம் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், அநாவசிய தளங்கள் நமக்குக் காட்டப்படுவது தடுக்கப்படுகிறது.
எஸ். பூமிநாதன், சென்னை.

சத்தம் போடாமல் அனைத்து துறைகளிலும் சீனா, தான் ஒரு வல்லரசு எனக் காட்டி வருகிறது. தன் வேண்டுகோளுக்கு இணங்காத மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு செக் வைத்து விட்டதே. வேறு எந்த நாடும் இது போல செயல்பட்டதாகத் தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்தால், அந்தப் பட்டியலைத் தரவும்.
என். தேவசகாயம், விருதுநகர்.

ஆட்டோ பார்மட் பயன்படுத்தும் விதம் குறித்த குறிப்புகள் மிக உதவியாய் இருந்தன. பல நாட்களாக இதனை அணுக இயலாமல் இருந்தேன்.
எஸ். சேகர், தாம்பரம்.

ஜாவா கட்டமைப்பில் பல பணிகளை மற்றும் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.இதனால் தான் ஜாவா கற்றவர்களுக்கு இன்னும் முக்கியத்துவம் தரப்படுகிறது. தங்கள் கட்டுரைம் மூலம் இதனை உறுதிப்படுத்தியது நல்லது.
என்.சந்திரா ஜோசப், பெங்களூரு.

ஐபேடில் படம் எடுப்பது குறித்த தங்கள் பதில் சுருக்கமாகவும், மிகச் சரியாகவும் இருந்தது. குறிப்புகளைப் பயன்படுத்திப் பார்த்து மகிழ்வடைந்தேன்.
சி.கே.தம்பிதுரை, தேவாரம்.

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான ஷார்ட் கட் கீ பட்டியலை பிரிண்ட் எடுத்து பயன்படுத்தும் வகையில் கொடுக்கவும். பல வாரங்களாக ஷார்ட் கட் கீ தொகுப்புகளே வருவதில்லை.
எஸ். ஆர். பாலகுமாரன், சிவகாசி.

சீனாவில் பைரசி எனப்படும் திருட்டு சாப்ட்வேர் பயன்பாடு அதிகம். எனவே தான் மைக்ரோசாப்ட் அந்நாட்டில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. மேலும் ஒரு நாட்டிற்க்கு மட்டும் எக்ஸ்பி சப்போர்ட் தருவது சரியல்ல. இதனை நீங்கள் உங்கள் கட்டுரையில், ஆணித்தரமாகக் குறிப்பிட்டிருக்கலாம்.
பேரா. கா. மாலதி ராஜன், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X