இப்படியும் ஒரு 'திரில்' அனுபவம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2014
00:00

காற்று வாங்க, தண்ணீரில் நிற்க, அலைகளுக்கு நடுவே புகுந்து விளையாட, நீச்சலடிக்க போன்றவற்றுக்கு தானே நாம் கடற்கரைக்கு செல்வோம். ஆனால், டச்சு நாட்டு கடற்பகுதியில் உள்ள காரபியன் தீவுகளில் ஒன்றான செயின்ட் மார்டென் என்ற கடற்கரையை ஒட்டிய பகுதிவாழ் மக்கள், தாழ்வாக பறக்கும் விமானத்தின் கீழ் நிற்கவே விரும்புகின்றனர்.
செயின்ட் மார்டென் தீவை ஒட்டி, ஜூலியானா சர்வதேச விமான நிலையம் உள்ளது. விமானத்தின் ஓடுபாதை, 2,300 மீட்டர் நீளமுள்ளது. விமான நிலையத்தில் விமானம் இறங்கும்போதும், மேலே எழும் போதும், அவை இக்கடற்கரையை மிகக்குறைந்த உயரத்தில், கடந்து செல்லும்.
விமானம் செல்வதால் எழும் காற்று, கடற்கரையில் உள்ள மக்களில் சிலரை நிலை குலைய செய்துவிடும்; சத்தம், காதுகளை செவிடாக்கும். ஆனால், இங்கு வரும் மக்கள், அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. 'விமான காற்று எப்படி நம்மை தூக்கி எறிகிறது பார்ப்போம்...' என்று, அங்கேயே நிற்பர்.
இங்குள்ள ஓட்டல்களில், விமானங்கள் வந்து செல்லும் நேரங்களை போர்டுகளில் எழுதி வைக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த அறிவிப்பை பார்த்து, விமானம் வந்து செல்லும் நேரத்துக்கு சரியாக கடற்கரையில் கூடி விடுவர் மக்கள்.
விமான நிலையத்தில் விமானம் நிற்கும்போது, எப்படி அதன் முழு நீளத்தையும், கம்பீரத்தையும் ரசிக்க முடியுமோ, அதேபோல், கடற்கரையில் நின்றும் முழுமையாக ரசிக்கலாம்.
விமான நிலைய எல்லை வேலி, கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், விமானம் கிளம்பும் போது எழும் காற்று, அங்கு நிற்பவர்களை கடலில் தூக்கி எறிந்து விடும் அபாயம் உள்ளது. இதனால், உடலில் காயமும், சில சமயம் மரணம் கூட நேரலாம் என, எச்சரிக்கை அறிவிப்பும் வைத்துள்ளனர்.
இந்த அறிவிப்பு பற்றியெல்லாம் கவலைப்படாமல், பலர் வேலி அருகிலேயே துணிந்து நிற்பர். இதனால், விமான நிலைய அதிகாரிகள் தற்போது, மேலும் ஒரு வேலியை அமைத்துள்ளனர்.
இருந்தாலும், கிளம்பும் விமானத்தின் காற்றின் சீற்றத்தை எதிர்கொள்ள, மக்கள் தொடர்ந்து வருகின்றனர்.
இதுதவிர, கடற்கரை ஓரம் அலைகளின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, பல விளையாட்டுகளில் ஈடுபடுவோரும் உள்ளனர்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X