2014 ஸ்மார்ட் போன் விற்பனை பறக்கிறது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
00:00

இந்தியாவில், 2014 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், ஸ்மார்ட் போன் விற்பனை 186 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் சாதாரண வசதி கொண்ட போன்களில் இருந்து பலர் ஸ்மார்ட் போன்களுக்கு மாறியதே ஆகும். தற்போது இவ்வகையினர், மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் 10 சதவீதமே இருந்தாலும், இது வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பது, பல நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்களை வடிவமைப்பது, குறைந்த விலையில், குறிப்பிட்ட காலத்திற்கு என இன்டர்நெட் இணைப்பு வசதி ஆகியவற்றைக் கூறலாம்.
இதனால், சிறப்பு வசதிகள் கொண்ட போன்களின் விற்பனை 90 சதவீதத்திலிருந்து 71 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜப்பான் தவிர்த்து, மற்ற ஆசிய நாடுகளில், 2014 முதல் மூன்று மாதங்களில், ஒரு கோடியே 75 லட்சத்து 90 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. சென்ற ஆண்டு இதே காலத்தில், 61 லட்சத்து 40 ஆயிரம் போன்களை மக்கள் வாங்கினர்.
குறைந்த விலைக்கு விற்கப்படும் ஸ்மார்ட் போன்களில், பெரும்பாலும் ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையே பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த நிலை போன்களில், விண்டோஸ் இயக்கம் கொண்டவையும் இடம் பெற்று வருகின்றன.
ஸ்மார்ட் போன் விற்பனையில், இந்தியாவில், தற்போது சாம்சங் 35% இடத்தைக் கொண்டு முதல் இடம் பெற்றுள்ளது. அடுத்து மைக்ரோமேக்ஸ் ஏறத்தாழ 15% பங்கு கொண்டுள்ளது. கார்பன், லாவா மற்றும் நோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள், முறையே 10%, 6% மற்றும் 4% இடத்தைக் கொண்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள், விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 8 கோடியே 57 லட்சத்தினை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் மொத்த வளர்ச்சி, இப்பிரிவில் 40% ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலே தரப்பட்டுள்ள தகவல்களை இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன், தன் ஆய்விலிருந்து தெரிவித்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X