டச் ஸ்கிரீன், கீ போர்ட் இணைந்த மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
00:00

டச் ஸ்கிரீன் மற்றும் வழக்கமான குவெர்ட்டி கீ போர்ட் என இருவகை உள்ளீடு கொண்ட மொபைல் ஒன்றை, எஸ் மொபிலிட்டி, ஸ்பைஸ், நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. ஸ்பைஸ் ஸ்டெல்லார் 360 என்ற இந்த மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ.4,799 என்பது இதன் இன்னொரு சிறப்பு.
இந்த போனில் HVGA டிஸ்பிளே கொண்ட 3.5 அங்குல அகல திரை தரப்பட்டுள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இணைய அழைப்பு பயன்பாட்டிற்கு, 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட இன்னொரு கேமரா முன்புறமாகத் தரப்பட்டுள்ளது.
மற்ற ஸ்பைஸ் ஸ்மார்ட் போன்களைப் போலவே, இதிலும் 3ஜி இணைப்பு மற்றும் இரண்டு சிம் இயக்கமும் இதில் கிடைக்கிறது. Spice Cloud, Opera Mini, BBM, Twitter, Whatsapp, OLX மற்றும் Getit ஆகிய அப்ளிகேஷன்கள் பதியப்பட்டு இந்த மாடல் வெளிவருகிறது. Mute, Popup Play, Intelligent Answer என மேலும் பல புரோகிராம்களும் கிடைக்கின்றன.
இதன் தனிச் சிறப்பு, இதில் டச் ஸ்கிரீன் மற்றும் குவெர்ட்டி கீ போர்ட் தரப்பட்டிருப்பதுதான். எனவே, கீ போர்ட் மட்டுமே பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர் களையும், டச் ஸ்கிரீன் வசதியினைப் பெரிதாக எண்ணும் வாடிக்கை யாளர்களையும் இந்த போன் நிறைவு செய்கிறது.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். இதன் தடிமன் 11 மிமீ. எடை 118 கிராம்.
இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி. இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
இதன் பேட்டரி 1500mAh திறன் கொண்டதாக உள்ளது.
வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில் வரும் இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.4,799 மட்டுமே. இதனுடன் ரூ.500 மதிப்புள்ள போன் வைத்துப் பயன்படுத்தக் கூடிய கூடு தரப்படுகிறது. அமேஸான் மற்றும் சஹோலிக் இணைய தளங்கள் மூலமாகத் தற்போது இதனை வாங்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X