சொல்லப்படாத ஐ.ஓ.எஸ்.8 தகவல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
00:00

சென்ற இதழில், ஆப்பிள் நிறுவனம் அண்மையில் சான்பிரான்சிஸ்கோவில் நடத்திய கருத்தரங்கில் அறிமுகப்படுத்திய ஐ.ஓ.எஸ்.8 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து பார்த்தோம். அந்த கருத்தரங்கிலேயே, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்துப் பேசுகையில், நேரம் இல்லாததால், இதன் பல கூடுதல் சிறப்புகள் குறித்து அதிகம் பேச முடியவில்லை என அறிவித்து, அவை பற்றிய தகவல்களை ஒரு பிரசண்டேஷன் ஸ்லைடாகத் தந்தது.

1. கேமரா அப்ளிகேஷன்: தன் பழைய ஐபோன்களில் இயங்கும் கேமராக்களுக்கு பர்ஸ்ட் மோட் (burst mode) எனப்படும் தொடர்ந்து படங்கள் எடுக்கக் கூடிய வசதிகள் தற்போது தரப்பட்டுள்ளன. இந்த வசதியைப் பயன்படுத்தி, கேமராவின் ஷட்டர் ரிலீஸ் பட்டனை அழுத்திப் பிடித்து ஒரு நிகழ்வின் அடுத்தடுத்த படங்களைத் தொடர்ச்சியாக எடுக்கலாம். இந்த வசதி ஐபோன் 5ல் தரப்பட்டது. அதற்கு முந்தைய போன்களில் இது மிகவும் மெதுவாக இயங்கும் வகையிலேயே இருந்தது. தற்போது தரப்படும் ஐ.ஓ.எஸ்.8 இந்தக் குறையினைத் தீர்த்து வைத்துள்ளது.
அதே போல ஐபேட் சாதனத்தில், விரிவான காட்சி என அழைக்கப்படும் Panorama photos எடுக்கக் கூடிய டூல் இதில் தரப்படுகிறது. ஐ.ஓ.எஸ்.6 சிஸ்டத்தில் இந்த வசதி தரப்பட்டாலும், ஐபேடில் இது அமலாக்கப்படவில்லை. இந்த வசதியை ஐ.ஓ.எஸ்.8 தந்துள்ளது.
நேரம் விட்டு விடியோ காட்சி: ஐ.ஓ.எஸ். 8ல், Timelapse video என்ற ஒரு வசதி தரப்படுகிறது. நம் சாதனத்தை, பொருளை நோக்கி அமைத்து விடியோ பதிவிற்கான பட்டனை அழுத்தி விட்டுவிடலாம். இந்த அப்ளிகேஷன் சில கால இடைவெளியில் விடியோ காட்சிகளை எடுத்துக் கொண்டே இருக்கும். படம் எடுக்கும் வேகம் எதனையும் நாமாக மாற்ற வேண்டியதில்லை.
இதே போல கேமரா டைமர் என்ற டூல் தரப்படுகிறது. இதன் மூலம், கேமராவினைக் கையாள்பவர், நேரம் செட் செய்து தானும் கேமரா முன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளலாம். இதற்கான நேரம் 10 முதல் 15 விநாடிகளாகும்.

2. ஐ புக்ஸ்: ஐ.ஓ.எஸ். சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல், ஐபுக்ஸ் (iBooks) அப்ளிகேஷன் அதன் செல்லப் பிள்ளையாக தரப்பட்டது. இதனை ஆப்பிள் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டியதிருந்தது. இது ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்தில், இணைக் கப்பட்டே கிடைக்கிறது. இதனுடன் Auto night mode என்னும் இன்னொரு வசதியும் தரப்படுகிறது. இரவு நேரங்களில் ஐபுக்ஸ் பயன்படுத்துகையில், கிரே கலர் பின்னணியில் கருப்பு நிறத்தில் டெக்ஸ்ட் தரப்படும். இதனால், குறைந்த வெளிச்சத்தில் எளிதாகப் படிக்க முடியும். இதனை முன்பு அமைக்க வேண்டியதிருந்தது. தற்போது தானாக இது மாறிக் கொண்டு காட்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. சிரி: ஐ.ஓ.எஸ்.8 கருத்தரங்கின் இறுதிக் கட்டத்தில் சிரி இயக்கம் குறித்து சில தகவல்கள் தரப்பட்டன. இதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பல மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "Hey, Siri!” என்ற கட்டளையைப் பயன்படுத்தும் வழி. இவ்வாறு சொன்னாலே போதும்; ஒலி வழி இயங்கும் வசதி இயக்கப்படும். தற்போது இது 22 புதிய மொழிகளில் வந்துள்ளது. இதனால், இப்போது 24 மொழிகளில் டிக்டேஷன் தந்து பதிய முடிகிறது.
கூடுதலாக, சிரி இப்போது என்ன பாடல் இயக்கப்பட்டு பாடிக் கொண்டுள்ளது என்று உணர்ந்து கொள்கிறது. ஒரு பாடல் தேவை எனில், அதனைப் பாடினால், அது உணரப்பட்டு, ஐ ட்யூன்ஸ் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். OS X's Enhanced Dictation என்னும் டூல் மூலம், நாம் டிக்டேட் செய்வதனை டெக்ஸ்ட்டாகவும் கொண்டு வரலாம்.

4. சபாரி ப்ரவுசர்: சபாரி ப்ரவுசரில், ஒரு புதிய ப்ரைவேட் ப்ரவுசர் டேப் ஒன்றை நாம் விருப்பப்பட்டால் உருவாக்கிக் கொள்ளலாம். இப்போது குறிப்பிட்ட தளத்தினை மட்டும் இந்த பிறர் அறியா நிலையில் இயக்கிக் கொள்ளலாம். இந்த நிலைக்குச் செல்ல, அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து தளங்களையும் மூடிவிட்டுச் செல்ல வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக, வேறு பல தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், உங்கள் வங்கி அக்கவுண்ட் குறித்த தளம் செல்ல விரும்பினால், அதனை மட்டும் பிறர் அறியா நிலையில் இயக்கிக் கொள்ளலாம். அந்த விண்டோவினை மூடினாலும், இதே நிலை தொடரும்.

5. கூடுதல் தேடல் வசதிகள்: Google, Yahoo, மற்றும் Bing ஆகிய தேடல் சாதனங்கள் இயக்கத்தினைப் போல, சபாரி ப்ரவுசரில் அதன் தேடல் வசதிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. இவை DuckDuckGo support என அழைக்கப்படுகிறது. இதனை மாறா நிலையில் வைத்து தன் வாடிக்கையாளர்கள் இயக்குவார்கள் என ஆப்பிள் எண்ணுகிறது.

6. பேட்டரி பயன்பாடு: உங்களுடைய அப்ளிகேஷன்கள் எவ்வளவு மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன என்று அறிய ஆசையா? ஐ.ஓ.எஸ்.8 உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றுகிறது. இதன் மூலம் நாம் அறியாமல் இயங்கும், மின் சக்தியை அதிகம் இழுக்கும் அப்ளிகேஷன்களை நிறுத்தலாம்.

7. பேஸ் டைம் தற்காலிக நிறுத்தம்: நீங்கள் அடிக்கடி FaceTime பயன்படுத்துபவர்களாக இருந்தால், ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில், இன்னொருவரிடம் இருந்து அழைப்பு வருவதை உணரலாம். இது ஆடியோ அல்லது விடியோ பேச்சுமுறைக்காக இருக்கலாம். அப்படி கிடைக்கும்போது, அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் உரையாடலை, தற்காலிகமாக நிறுத்தி வைத்து, புதியதாக வருவதனை ஏற்றுக் கொண்டு, பின்னர், எதனை வைத்துக் கொள்வது என்று முடிவு செய்து செயல்படலாம்.

8. வை-பி வழி அழைப்பு: நமக்கு இந்த இக்கட்டான சூழ்நிலை பலமுறை ஏற்பட்டிருக்கும். யாரையாவது போனில் தொடர்பு கொள்ள முயற்சிப்போம். ஆனால், மொபைல் தொடர்பலை மிகவும் அழுத்தமின்றி இருக்கும். தொடர்பு கிடைக்காது. தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளோம் என்று செய்தி கிடைக்கும். அப்போது உங்களிடம் வை-பி இணைப்பு இருந்து, அதனைத் தருபவர் தொலைபேசி அழைப்புகளை அனுமதிப்பவராக இருந்தால், ஐ.ஓ.எஸ்.8 இதற்கான வசதியைத் தருகிறது. இதன் மூலம் அழைப்புகளை ஏற்படுத்தலாம். டெக்ஸ்ட் மெசேஜ், எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பலாம்.

9. நோட்ஸ் எடிட்டிங்: ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் உள்ள நோட்ஸ் (Notes) அப்ளிகேஷன், இந்த புதிய சிஸ்டத்தில் ரிச் டெக்ஸ்ட்டைக் கையாள்வதற்கு வசதி பெற்றுள்ளது. டெக் ஸ்ட்டை திருத்துவதுடன், புதிய வகைகளில் பார்மட் செய்திடலாம். இதே போல பல புதிய வசதிகள், ஏற்கனவே தரப்பட்டுள்ள வசதிகளில் கூடுதல் மேம்பாடு தரும் வாய்ப்புகள் என பல அம்சங்கள், புதிய ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டத்தில் உள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X