டெஸ்க்டாப்பில் இன்னும் விண்டோஸ் 7 ஆட்சியே
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
00:00

விண்டோஸ் எக்ஸ்பி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பயனாளர்களை இழந்து தன் மொத்த முடிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. விண்டோஸ் 8 பயன்பாடு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. ஆனல், விண்டோஸ் 7, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டில் இன்னும் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற மே மாதத்தில், மொத்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், 50% க்கும் அதிகமான பயனாளர்களைப் பெற்ற சிஸ்டமாக, விண்டோஸ் 7 இடம் பெற்றிருந்ததாக, இதில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. புதிய பயனாளர் களை வசப்படுத்துவதில், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இடையே தான் பலத்த போட்டி இருந்து வருகிறது.
2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 இன்று 50%க்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு, முதல் இடத்திற்கான தங்கப் பதக்கத்தினைப் பெற்றுள்ளது எனலாம். இதற்கு முதன்மைக் காரணம், மக்கள் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டுவிடுவதுதான். ""விண்டோஸ் எக்ஸ்பியை விட்டுவிட மாட்டோம்; தொடர்ந்து அதுதான் எங்களுக்கு ஓ.எஸ்.'' எனப் பல பயனாளர்கள் கூறலாம். ஆனால், உண்மை என்னவென்றால், பலரும் மைக்ரோசாப்ட் அச்சுறுத்தலினால், அதனை விட்டு விலகுகின்றனர் என்பதே உண்மை.
மே மாதத்தில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் 25.27% ஆகக் குறைந்தனர். இது 2.42% இழப்பாகும். ஆனால், அதே காலத்தில், விண்டோஸ் 7 பயன்பாடு 48.77 சதவீதத்திலிருந்து 50.06% ஆக உயர்ந்தது. விண்டோஸ் 8 பயன்பாடு 12.62% ஆக அதிகரித்தது. இது விண்டோஸ் 8 இன்னும் பயனாளர்களின் முழுமையான நம்பிக்கையைப் பெறவில்லை என்பதனையே காட்டுகிறது.
விண்டோஸ் 8.1 இப்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலேயே தங்கி உள்ளவர்களைக் காட்டிலும் (6.29%), விண் 8.1 பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை (6.35%) அதிகரித்துள்ளது.
இவற்றிற்குப் பின்னால், மேக் ஓ.எஸ். பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4.15% ஆக உள்ளது. இதனை அடுத்து, லினக்ஸ் 1.62% பங்கினைக் கொண்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X