இணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
00:00

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., தன் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான வசதி ஒன்றை அளிக்கிறது. இந்நிறுவனத்தின் மொபைல் போன் இணைப்பு கொண்டிருப்பவர்கள், தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், பேஸ்புக் தளத்தைத் தொடர்பு கொள்ள முடியும் மூன்று நாட்களுக்கு ரூ.4, வாரத்திற்கு ரூ.10 மற்றும் மாதத்திற்கு ரூ.20 இதற்கென கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இதற்கென, பி.எஸ்.என்.எல். U2opia Mobile என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த வசதி Unstructured Supplementary Service Data (USSD) என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இது கிடைக்கிறது.
USSD தொழில் நுட்பத்தினை, முன் கூட்டியே பணம் செலுத்தி, பதில் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தலாம். இடம் சார்ந்த தகவல் வசதிகளைப் பெறலாம். மெனு வழங்கி அதன் பிரிவுகளுக்கேற்ப வசதிகளைத் தரலாம். தற்போது தொலை தொடர்பு துறையில் இயங்கும் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்பப் பயன்படுத்தி வருகின்றனர்.
பி.எஸ்.என்.எல். ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தினால், இதன் வாடிக்கையாளர்கள், பேஸ்புக் தளத்தினை, தங்கள் அக்கவுண்ட்டில், இணைய இணைப்பு பெறாவிடினும் அணுக முடியும். மெசேஜ்களை அமைக்க, காண இயலும். நண்பர்கள் விடுத்துள்ள கேள்வி மற்றும் வேண்டுகோள்களுக்குப் பதில் அளிக்க முடியும். தங்கள் நண்பர்களின் பக்கங்களில் தகவல்கள, செய்திகளை எழுத முடியும். பிறந்த நாள் வாழ்த்து குறித்த தகவல்களைப் பெற்று, அதற்கேற்ப வாழ்த்துகளை அனுப்ப முடியும்.
இந்த வசதியினை வாடிக்கையாளர்களுக்கு முதல் முதலாக வழங்குவதன் மூலம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று இந்நிறுவன இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார்.
தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்பும் பல கோடி மக்களுக்கு இந்த சேவையும் வசதியும் உண்மையிலேயே ஒரு பெரிய உதவி என்று யுடோபியா மொபைல் நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palpandian - Tirunelveli,இந்தியா
19-ஜூன்-201418:59:12 IST Report Abuse
Palpandian கம்ப்யூட்டர் பற்றிய நிறைய தகவல்களை அனுப்பவும்
Rate this:
Share this comment
Cancel
Palpandian - Tirunelveli,இந்தியா
19-ஜூன்-201418:57:27 IST Report Abuse
Palpandian சூப்பர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X