பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
00:00

ஆப்பிள் நிறுவனம் தன் கருத்தரங்கினை முடித்துக் கொண்டு கடையைக் கட்டுவதற்குள்ளாகவே, இவ்வளவு தகவல்களுடன் ஐ.ஓ.எஸ்.8 குறித்து தகவல் தந்த முதல் இதழ் நம் கம்ப்யூட்டர் மலர் தான். உங்களுடைய கட்டுரையில் உள்ள தகவல்களினால், ஐ.ஓ.எஸ். 8 பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகும். வாழ்த்துகள்.
பேரா டாக்டர் எம்.ஷண்முகம், கோவை.

மற்றவற்றுடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் நிறுவனச் சாதனங்களின் விலை அதிகம் என்பதாலேயே, ஆப்பிள் போன்கள் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் எடுபடவில்லை. புதிய ஓ.எஸ்.8 தரும் சிறப்பு வசதிகள் இந்த குறையை நீக்கும் என நினைக்கிறேன்.
எஸ். ராபர்ட் சகாயம், மதுரை.

ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த அளவிற்கு கால் ஊன்றியுள்ளது என்ற தங்களின் தனிக் கட்டத் தகவல்கள், நாம் விபரம் புரியாமலேயே, ஆப்பிள் நிறுவனத்தை இரண்டாம் நிலையிலேயே வைத்துப் பார்த்துள்ளோம் என்று உணர வைக்கிறது. தகவல்களுக்கு நன்றி.
ஆர். ஸ்வாமிநாதன், பெரம்பூர்.

ஆப்பிள் தர இருக்கும் ஸ்விப்ட் மொழி குறித்து கூடுதல் தகவல்கள் தேவை. இதில் ஈடுபாடு கொண்டால், அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்குமா?
என்.பிரகாஷ், சேலம்.

இணைப்புகளில் கூட தேட வசதி செய்து தரும் கூகுள் மெயில், தேடல் பிரிவில் கூகுள் நிறுவனத்தின் தனி ஆட்சியை நிரூபித்துள்ளது.
என். கல்யாண சுந்தரம், பரமக்குடி.

இணைய தேடல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதில் நாம் சந்திக்கக் கூடிய ஆபத்தான வழிகளை உணர்ந்திருக்க வேண்டும். இந்த வகையில் நீங்கள் கட்டுரையில் தந்துள்ளவை அனைத்தும் சரியான வழிகாட்டுதல்களாகும். நன்றி.
டாக்டர் எம்.லஷ்மணன், உதகமண்டலம்.

இணையத்தில் முழுமையான பாதுகாப்பு என்றைக்கும் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. எனவே நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள அனைத்தும், தொடர்ந்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டியவையே.
பி.எஸ். ஸ்ரீகலா, சென்னை.

மொபைல் போன் வளர்ச்சியைப் பார்த்த பின்னர், இதனை விட்டுச் சென்ற நிறுவனங்கள் அனைத்தும் அதற்குத் திரும்புகின்றன என்பது பிலிப்ஸ் நிறுவனத்தின் முயற்சிகள் நிரூபிக்கின்றன.
ஆர். ராஜசேகரன், திருமங்கலம்.

ஸ்மார்ட் போன்களின் விலை ரூ.1,000 அடுத்து வந்துவிட்டால், அனைவரும் இணையத்திலேயே தான் இருப்பார்கள். இந்த புரட்சி ஏற்படுமா?
எஸ். கிருஷ்ண குமார், தென்காசி.

என் சாதாரண கேள்விக்கும் மதிப்பளித்து பதில் அளித்தமைக்கு நன்றி.
எல்.லட்சுமி, திருநெல்வேலி.

இணையப் பயன்பாட்டில் நிதி சார்ந்த பணிகளில் ஈடுபடுகையில் தொடர் இணைய இணைப்பு கட்டாயமாகிறது. இதனை எந்த நிறுவனமும் உறுதி செய்திடவில்லை. தங்களின் கட்டுரையில் இந்த விஷயத்தை எழுதி இருக்கலாம்.
என். ஸ்ரீலேகா ராமன், திருச்சி.

சாதனங்களில் கவனம் செலுத்தாமல், தன் சிஸ்டம் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகள், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செல்ல வேண்டும் என ஆப்பிள் உணர்ந்து கொண்டது, நிச்சயம் டிஜிட்டல் உலகில் ஒரு பெரிய மாற்றத்தினை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.
டாக்டர் ஆர். தேவராஜ், புதுச்சேரி.

சீனா எப்போதும் தானாகவே எதனையும் ஏற்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டது. இதன் மனித வளம் அபாரமானது. இதனை அண்மைக் கால நடவடிக்கைகள் உறுதிப் படுத்தி வருகின்றன. தங்கள் கட்டுரையை இன்னும் விரிவாகப் போட்டிருக்கலாம்.
-ஆர். சூசை மாணிக்கம், தூத்துக்குடி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X