கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2014
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 இயங்குகின்றன. நான் சில ஆண்டுகளாக, யாஹூ மெயில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். இப்போது யாஹு மெயில் நுழையச் சென்றால், என் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை சிஸ்டம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஆனால், மற்ற தளங்களுக்கான யூசர் நேம் நினைவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? தீர்வு தர முடியுமா?
எம். நிரஞ்சன், சேலம்.
பதில்:
முதலில் மூன்று விஷயங்கள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். முதலில் யாஹூ தளத்தில், உங்கள் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் ஆகியவற்றினை நினைவில் கொள்க என்று செட் அப் அமைத்துள்ளீர்களா? இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Internet Options என்ற பிரிவில் சிலவற்றைச் சரி பார்க்கவும். General என்ற டேப்பின் கீழாக, பிரவுசரை மூடுகையில், உங்கள் பிரவுசிங் ஹிஸ்டரியை அழிக்க செட் அப் அமைக்கப்பட்டுள்ளதா? அடுத்து content டேப்பின் கீழாக, Auto Complete Settings இல் கிளிக் செய்திடவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரை உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை நினைவில் கொள்ள செட் அப் அமைக்கவும். அதற்கான பாக்ஸில் டிக் அடையாளம் இல்லை எனில், உடன் அமைத்துவிடவும்.
இவற்றைச் சரி செய்தால், உங்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

கேள்வி: சாதாரண வசதிகள் கொண்ட போனுக்கும், ஸ்மார்ட் போனுக்கும் என்ன வேறுபாடு? நான் பிளிப் போனை விட்டுவிட்டு, ஸ்மார்ட் போனுக்கு மாற எண்ணியுள்ளேன். சரியா?
கி. மஞ்சுளா தேவி, காரைக்கால்.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் பிளிப் போன் ஒரு மொபைல் போன். ஸ்மார்ட் போன் என்பது, போனின் செயல் திறனையும் தாண்டி, கம்ப்யூட்டர் ஒன்றின் திறனைக் கொண்டிருப்பதாகும். அது ஒரு சிறிய கம்ப்யூட்டர். இந்த கம்ப்யூட்டரில் ஓர் அப்ளிகேஷன் உள்ளது. அது போன் அழைப்புகளைப் பெறவும், ஏற்படுத்தவும் செய்கிறது. அடிப்படையில் இது ஒரு கம்ப்யூட்டரே. ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி.யில் உள்ள அப்ளிகேஷன்கள் வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம் போன்றவைதான். ஸ்மார்ட் போன்கள் மூலம் 3ஜி அல்லது 4ஜி மொபைல் போன் நெட்வொர்க்கில் இணைந்து அழைப்புகளை நிர்வகிக்கலாம். ஆனால், இதற்கான செலவினைக் குறைக்க, இதில் கிடைக்கும் வை-பி வசதியைப் பயன்படுத்தி, உங்கள் பணியை மேற்கொண்டால், மொபைல் கட்டணம் செலவாவது குறையும்.
ஸ்மார்ட் போனில் உள்ள போன் ஐகானத் தட்டினால், உடனே, போனுக்கான எண்களை அமைக்க, ஒரு கீ பேட் தோன்றும். இதில் எண்களை அமைத்து, அழைப்புகளே ஏற்படுத்தலாம். அல்லது ஏற்கனவே பதியப்பட்டி ருந்தால், முகவரிகளைத் தேடி அழைக்கலாம். இதன் மூலம் எஸ்.எம்.எஸ். செய்திகளையும் அனுப்பலாம். ஆனால், வழக்கமான போனில் இருக்கும் வசதிகளைக் காட்டிலும் பல நல்ல வசதிகள் ஒரு ஸ்மார்ட் போனில் இருக்கும். பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற புரோகிராம்கள் மூலம் தகவல்களை அனுப்பலாம்; பைல்களை அனுப்பலாம், பெறலாம். வீடியோ அழைப்புகளை அமைக்கலாம். இதற்கென தனி கேமரா ஒன்று, போனின் முன்புறமாகத் தரப்பட்டிருக்கும். பின்புறமாகத் தரப்படும் இன்னொரு கூடுதல் திறன் கொண்ட கேமரா மூலம், விடியோ பைல்களை உருவாக்கலாம். இதன் மூலம் உங்கள் மின் அஞ்சல்களைக் காணலாம்.
அநேகமாக அனைத்து ஸ்மார்ட் போன்களும், நீங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கான சாலை வழிகளைக் காட்டும். உங்கள் இடத்திற்கு அருகே உள்ள பெட்ரோல் பம்ப், ஹோட்டல், சினிமா தியேட்டர் எவை என்று காட்டும்.
மேலும், உங்களுடைய ஆபீஸ் டாகுமெண்ட்களைப் பெற்று திருத்தி அனுப்பலாம். புதியவற்றை உருவாக்கலாம். இசை கேட்டு மகிழலாம்; படம் பார்க்கலாம். இப்படி எத்தனையோ வசதிகள் கொண்ட மொபைல் கம்ப்யூட்டர் தான் ஒரு ஸ்மார்ட் போன்.
போனில் பேச மட்டுமே பயன்படுத்த இவ்வளவு வசதிகள் கொண்ட போன் தேவையா? அதிக விலை கொடுக்க வேண்டுமா? என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த வசதிகளைப் பயன்படுத்தாதவர்கள் இன்று மிகவும் குறைவு. எனவே, பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் இதற்கு அடிமையாகிவிடுவீர்கள்.

கேள்வி: என்னுடைய மொபைல் போன் ஸ்மார்ட் போன் இல்லை. இதனை ஒரு ரௌட்டராகப் பயன்படுத்தி இணைய இணைப்பினை கம்ப்யூட்டரில் பார்க்க முடியுமா?
என். ரவீந்திரன், கோவை.
பதில்:
மொபைல் போன்களை, ரௌட்டர் போல பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெறலாம். அவ்வாறு பயன்படுத்துகையில், உங்கள் மொபைல் போன் "hotspot” என அழைக்கப்படும்.
உங்களுடைய மொபைல் போனை ஹாட் ஸ்பாட் போனாக மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஸ்மார்ட் போன் இல்லை என்று மட்டும் கூறி இருப்பதால், சிரமம் என்றுதான் நினைக்கிறேன். உங்களுக்கு மொபைல் சேவை தரும் நிறுவனத்திடம் இது குறித்துக் கேட்டுத் தெரிந்து கொண்டு, முடியும் என்றால், அதற்கான கட்டணத்தைச் செலுத்திப் பயன்படுத்தலாம். வழக்கமான மொபைல் சேவை கட்டணத்துடன் கூடுதலாக இதற்குக் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த வசதிக்கான திட்டத்தில், இவ்வளவுதான் டவுண்லோட் செய்திட முடியும் என்ற வரையறை இருந்தால், அதில் ஒரு கண் வைத்துக் கொள்ளவும். அதிகமாக டேட்டா தரவிறக்கம் செய்தால், கட்டணம் எகிறிப் போய்விடும்.

கேள்வி: பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் என் குழந்தைகள், தேடல் தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்களை மோசமான தளங்களிலிருந்து காப்பாற்ற எடுக்க வேண்டிய அவசிய நடவடிக்கை ஒன்றைச் சொல்லவும்.
எஸ். பூமா சேகர், விருதுநகர்.
பதில்:
இது குறித்து அடிக்கடி கம்ப்யூட்டர் மலரில் கட்டுரைகளும் தகவல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இருப்பினும், தேடல் தளம் குறித்து குறிப்பாகக் கேட்டுள்ளதால், கீழ்க்காணும் குறிப்பினைத் தருகிறேன். தேடல் இஞ்சின்களை செட் செய்வதில் பாதி அபாயம் நீங்கிவிடும். கூகுள் தேடல் தளத்தினைப் பயன்படுத்துபவர்கள், http://www.google.com/familysafety/; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். பிங் (Bing) தேடல் தளம் பயன்படுத்துபவர்கள் http://www.bing.com/preferences.aspx; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். மற்ற தேடல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், அந்த தளங்கள் தரும் safety settings சென்று இந்த வசதியைக் காணலாம். உங்கள் வீட்டுச் சிறுவர்கள் யு-ட்யூப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்துபவனாக இருந்தால், அவற்றையும் “safe” modeல் அமைக்கவும்.

கேள்வி: விண்டோஸ் 8 தந்துள்ள மாறா நிலை புரோகிராம்களுக்குப் பதிலாக, வேறு புரோகிராம்களை அமைப்பதற்கான வழி என்ன? சற்றி விரிவாக விளக்கவும்.
என். பாலகுமார், சென்னை.
பதில்:
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தத் தொடங்கினால், இது போன்ற பல சந்தேகங்கள் மற்றும் பிரச்னைகள் வரும். ஏனென்றால், சிஸ்டம் வடிவமைத்தவர்கள், நமக்கு சில விஷயங்கள் ஏற்கனவே தெரியும் எனப் பலவற்றை விளக்காமலேயே விட்டுவிடுவதுதான். உங்கள் பிரச்னைக்கான தீர்வு எளிதுதான்.
டிபால்ட் புரோகிராம் எனப்படும், மாறா நிலையில் உள்ள புரோகிராம்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஏற்கனவே செட் செய்துள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால், நாம் டெஸ்க்டாப் நிலையில் ஒரு பைலைத் திறக்க முயற்சிக்கையில், அது அந்த பைலை மெட்ரோ அப்ளிகேஷன் ஒன்றில் திறக்கும். இதனைத் தொடர்ந்து நாம் எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்த இயலாது. நீங்கள் குறிப்பிடும் போட்டோ மற்றும் பட பைல் இது போலத்தான். இதில் கிளிக் செய்தால், போட்டோ அப்ளிகேஷனில் பைல் திறக்கப்படும். ஆனால், நீங்கள், விண்டோஸ் போட்டோ வியூவரில் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். இதற்காக, ஒவ்வொரு பட பைலையும், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Open With என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் நாம் விரும்பும் புரோகிராமினை ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்க முடியாது. இதனை டிபால்ட் எனப்படும் மாறா நிலை புரோகிராமாக எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் ஸ்டார்ட் ஸ்கிரீனில், default programs என்று டைப் செய்திடவும். தரப்படும் முடிவுகளில் Default Programs என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இப்போது, டிபால்ட் புரோகிராம்ஸ் விண்டோ, டெஸ்க் டாப்பில் திறக்கப்படும். இதில் நீங்கள் குறிப்பிடும் பைலுக்கான டிபால்ட் புரோகிராமினைத் திறக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் கிடைக்கும். எளிய வழி “Set your default programs” என்பதைத் தேர்ந்தெடுத்து அமைப்பதுதான். இப்போது நீங்கள் குறிப்பிடும் பைல் வகைக்கான புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அதனையே மாறா நிலை புரோகிராமாக அமைக்கவும்.
குறிப்பிட்ட புரோகிராம், எந்த எந்த வகை பைல்களைத் திறக்க மாறா நிலையில் உள்ள புரோகிராமாக அமைக்கப்பட வேண்டும் என விரும்பினால், இரண்டாவது ஆப்ஷனாக உள்ள "Choose defaults for this program” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில், நீங்கள் ஒவ்வொரு வகை பைலையும் திறந்து இதனுடன் திறக்கப்பட வேண்டிய பைலாக அமைக்கலாம்.
இந்த மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர், சேவ் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பிய வகையில், டிபால்ட் புரோகிராம் இயங்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X