வேர்ட்: ஓவர் டைப் நிலை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
00:00

வேர்ட் புரோகிராமில், ""ஓவர்டைப் நிலை'' என்பது, ஏற்கனவே அமைக்கப்பட்ட வரியில், நாம் டை செய்திடும் டெக்ஸ்ட், வலதுபுறமாக இருக்கும் டெக்ஸ்ட்டை நீக்கும் நிலையாகும். இந்த நிலை இயக்கப்படாத போது, நாம் ஏற்கனவே அமைந்த வரியில், டைப் செய்தால், அது இடையே செருகலாக அமைக்கப்படும். எனவே, இந்த செயல் தன்மையை வைத்து, ஓவர் டைப் நிலை இயக்கப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். அப்படி இல்லாமல், டாகுமெண்ட் பக்கத்தினைப் பார்த்த நிலையில் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் எனில், ஸ்டேட்டஸ் பாரில் அதனை அமைத்துக் கொள்ளவும் எளிதான வழி ஒன்று உள்ளது. இதற்கு ஸ்டேட்டஸ் பாரில் ரைட் கிளிக் செய்து, Overtype option எதிரே டிக் அடையாளத்தினை அமைக்க வேண்டும். உடனேயே, ஓவர்டைப் நிலை இயங்குகிறதா என ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும். "Insert” என ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும். இதனைப் பார்த்தே, ஓவர்டைப் நிலை இயங்கிக் கொண்டிருக்கிறதா என அறியலாம்.
இந்நிலையை அமைக்க மூன்று வழிகள் உள்ளன. முதலாவதாக, Ins கீ பயன் படுத்துவது. ஆனால், இந்த வழியைப் பின்பற்றி அமைக்க, வேர்ட் புரோகிராமினை இந்த கீயினை இவ்வழிக்கு செட் செய்து அமைத்திருக்க வேண்டும். இரண்டாவது வழி, ஸ்டேட்டஸ் பாரில் உள்ள ஓவர்டைப் பாரில் கிளிக் செய்வது. அதாவது, ஏற்கனவே இதனை, இங்கு முதல் பாராவில் குறிப்பிட்டுள்ளபடி, அமைத்திருக்க வேண்டும். மூன்றாவது வழியில் அமைத்திட, கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
1. Word Options டயலாக் பாக்ஸை இயக்கவும். (வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர், Word Options என்பதில் கிளிக் செய்திடவும்) வேர்ட் 2010ல், ரிப்பனில் File டேப் அழுத்தி, அதன் பின்னர், Options கிளிக் செய்திடவும்.
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Use Overtype Mode என்ற செக் பாக்ஸில் கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X