யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2014
00:00

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் விஸ்டா பதிப்பிலிருந்து யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் என்னும் கட்டுப்பாட்டினை அமல்படுத்தியது. இது இப்போதும் விண்டோஸ் 7 மற்றும் 8ல் இயங்குகிறது. UAC எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த டூல், உங்களுடைய அனுமதியின்றி புரோகிராம்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. இதனுடன் ஒரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துவது லிமிடெட் யூசர் அக்கவுண்ட் போல அல்ல.
அப்ளிகேஷன் புரோகிராம்கள் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்க அனுமதியைத் தானாகப் பெறுவதில்லை. முதலில் இயக்குபவரைத்தான் கேட்கும்.

யு.ஏ.சி. தீர்த்து வைக்கும் பிரச்னைகள்: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முதலில் ஒரு பிரச்னை கண்டறியப்பட்டது. பெரும்பாலானவர்கள், அவர்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்து செயல்பட, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தினார்கள். அதாவது, ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமும் முழு கம்ப்யூட்டரில் இயங்க, இயக்க, அட்மினிஸ்ட்ரேட்டரின் முழு அனுமதியினைப் பெற்றிருந்தன. இதனால், நீங்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் ஒன்றை, நீங்கள் அறியாமல், இயக்கிக் கொண்டிருந்தால், அது கம்ப்யூட்டரின் முழு பகுதியிலும் தன் கெடுதல் வேலையை மேற்கொள்ளும் வசதியினைப் பெற்றுவிடும். உங்கள் வெப் பிரவுசரோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் புரோகிராமோ இந்த கெடுதல் விளைவிக்கும் புரோகிராமுக்கு பணிந்துவிட்டால், முழு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
இதற்குப் பதிலாக சிலர் கட்டுப்படுத்தப்பட்ட யூசர் அக்கவுண்ட் (limited user accounts) பயன்படுத்துகின்றனர். ஆனால், பல புரோகிராம்கள் இந்த நிலையில் இயக்கப்படும்போது, இயங்குவதில்லை.

யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் இயங்கும் விதம்: விஸ்டா சிஸ்டம் முதல் யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் டூலினை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. அட்மினிஸ்ட்ரேட்டர் ஒருவர் விண்டோஸ் இயக்கத்தில் நுழைந்தவுடன், விண்டோஸ், explorer.exe பைலை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கான அனுமதியுடன் இயக்குகிறது. நீங்கள் திறக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்த பைலால் தொடங்கப்படுகிறது. அந்த புரோகிராம்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட அனுமதியும் சேர்ந்து லோட் செய்யப்படும். இதனால், ஒரு புரோகிராம் இயங்க அட்மினிஸ்ட்ரேட்டரின் முழு அனுமதியை புரோகிராம் கேட்கலாம்.

யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் பாப் அப்: ஒரு புரோகிராம் இயங்குவதற்குத் தேவையான அட்மினிஸ்ட்ரேட்டரின் அனுமதியை யு.ஏ.சி., அதன் டயலாக் பாக்ஸை பாப் அப் செய்து கேட்கிறது. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்று இன்ஸ்டால் செய்யப்படும்போது இந்த டயலாக் பாக்ஸ் பாப் அப் ஆவதைக் காணலாம். ஏனென்றால், இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம் குறித்த தகவல்கள் அனைத்தும், யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் பிரிவிலும் எழுதப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் சிஸ்டம் செட் அப் செய்யப்பட வேண்டும்.
இதனால் தான், சில பழைய புரோகிராம்களை நாம் இயக்கும் போதெல்லாம், யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல், அந்த புரோகிராமினை இயக்குவதற்கு அனுமதியைக் கேட்கிறது. சில குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும், யூ.ஏ.சி. அனுமதி கேட்கும். அதற்கு நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, சில பைல்களை, புரோகிராம் போல்டரில் காப்பி செய்திட முயற்சித்தால், யூ.ஏ.சி. அனுமதியினைக் கேட்கும். மாறா நிலையில், பைல் மேனேஜர், வரையறுக்கப்பட்ட அனுமதியுடன் தான் இயங்கும்.
பொதுவாக, நாம் யூ.ஏ.சி. அனுமதி கேட்கும் என எதிர்பார்க்கும் நிலையில் மட்டுமே நான் அதனை அனுமதிக்க வேண்டும். நீங்கள் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையிலும், அல்லது சிஸ்டம் அமைப்பில் மாற்றங் களைச் செய்திடுகையிலும், யூ.ஏ.சி. அனுமதி கேட்டால், சரி என ஒத்துக் கொண்டு அனுமதி தருவதே நல்லது. ஆனால், பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், திடீரென யூ.ஏ.சி. பாப் அப் செய்து, எதற்கேனும் அனுமதி கேட்டால், உடனே அனுமதி தரக் கூடாது. என்ன வகை செயல்பாட்டிற்கு அனுமதி கேட்கிறது என்று நன்றாக ஆய்வு செய்து, அதனால், வேறு கெடுதல்கள் ஏற்படாது என்று உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்கள் வருவதனை இந்த ஆய்வு தடுக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X