விண்டோஸ் 8.1 மைக்ரோமேக்ஸ் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2014
00:00

விண்டோஸ் மொபைல் போன்கள் விற்பனைச் சந்தையில் புதியதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு போன்கள் நுழைந்துள்ளன. அவை Canvas Win W092 மற்றும் Canvas Win W121. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், இதற்கென மைக்ரோமேக்ஸ் ஒப்பந்தம் கொண்டது நினைவிருக்கலம். இவற்றை குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 200 ப்ராசசர்கள், 1.2 கிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயக்குகின்றன. விண்டோஸ் போன் 8.1 சிஸ்டம் தரப்பட்டுள்ளது.
விண் 092 போனில், 4 அங்குல திரை, எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 1ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை அதிகப்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ.6,500.
விண் 121 மாடல் போனில் HD display கொண்ட 5 அங்குல திரை, எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 2 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா ஆகியவை உள்ளன. இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். அதே ப்ராசசர் தரப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களும் முந்தைய போனில் உள்ளவையே. பேட்டரியின் திறன் 2,000 mAh ஆக உள்ளது. இவற்றின் பின்புறமாக நல்ல தோலில் தயாரிக்கப்பட்ட பேனல் ஷெல் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,500. வரும் ஜூலை முதல் வாரத்தில் இவற்றை வாங்க முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X